சென்னை மெட்ரோ: 800 கோடி ரூபாய் திட்டத்தைத் தூக்கிய பிரான்ஸ் நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமாகப் பார்க்கப்படும் சென்னை மெட்ரோ-வை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் 4வது நீண்ட மெட்ரோ தேவை திட்டமாக விளங்கும் சென்னை மெட்ரோ, 5 பாதைகளில் இயக்கப்பட உள்ளது, இத்திட்டத்தின் முதல் பகுதி 2015ல் துவங்கப்பட்டது. தற்போது நீலம் மற்றும் பச்சை நிற லைன்களில் மட்டுமே மெட்ரோ சேவை இயக்கப்படும் நிலையில், விரைவில் லைன் 3,4,5 ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு இயங்கப்பட உள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ திட்டத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் முக்கியமான திட்டத்தைப் பிரான்ஸ் நாட்டில் அல்ஸ்டாம் கைப்பற்றியுள்ளது.

 மெட்ரோ-வை கைப்பற்ற போகும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி-க்கு ராஜ யோகம் தான்..! மெட்ரோ-வை கைப்பற்ற போகும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி-க்கு ராஜ யோகம் தான்..!

அல்ஸ்டாம் நிறுவனம்

அல்ஸ்டாம் நிறுவனம்

பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டாம் நிறுவனம் சுமார் 78 அட்வான்ஸ் மெட்ரோ ரயில் பெட்டிகளைச் சொந்தமாக டிசைன் செய்து, உற்பத்தி செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் சுமார் 798 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைச் சென்னை மெட்டோ ரயில் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வென்றுள்ளது.

புதிய ரயில் பெட்டிகள்

புதிய ரயில் பெட்டிகள்

இந்தப் புதிய ரயில் பெட்டிகள் அனைத்தும் பூந்தமல்லி பைபாஸ் மற்றும் லைட் ஹவுஸ் இடையே 28 மெட்ரோ நிலையங்கள் வழியாக இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியான 26 கிமீ மெட்ரோ பாதையில் இயக்கப்பட உள்ளது. இந்த 26 மெட்ரோ நிலையங்களில் 18 நிலத்திற்கு மேல், 10 நிலத்தடி அமைப்பை கொண்டிருக்க உள்ளது.

ஆலிவர் லோய்சன்

ஆலிவர் லோய்சன்

இந்தியாவில் எங்களின் உற்பத்திப் பயணம் 2014 இல் சென்னை மெட்ரோ முதல் கட்டத்திற்கான ரயில்களுடன் தொடங்கியது, இது நாட்டிலேயே எங்களுக்கு முதல் ரோலிங் ஸ்டாக் ஆர்டராக இருந்தது. இந்நிலையில் புதிய வெற்றி எங்களுக்குப் பெருமையை அளிக்கிறது, மேலும் சென்னையின் நகர்ப்புற போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்துவதில் நம்பகமான பங்காளிகளாக இருப்பதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று அல்ஸ்டாம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆலிவர் லோய்சன் கூறினார்.

208 மெட்ரோ ரயில் பெட்டிகள்

208 மெட்ரோ ரயில் பெட்டிகள்

இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டாம் நிறுவனம் 54 கிமீ ஓடுபாதையில் இயக்கப்படும் மெட்ரோ திட்டத்திற்கான, முதல் கட்டமாக 208 மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கியது. இந்தப் பாதையில் 6 பெட்டிகள் உடன் 120 ரயில்கள் இயக்கப்படுகிறது.

லைன் 1, 2

லைன் 1, 2

விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரையிலான லைன் 1 அதாவது ப்ளூ லைன் 36 கிலோமீட்டர் பாதையில் 26 ஸ்டேஷன் கொண்டு உள்ளது இதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான கிரீன் லைன் 25 கிலோமீட்டர் பாதையில் 17 ஸ்டேஷன்கள் கொண்டு உள்ளது.

பிற திட்டங்கள்

பிற திட்டங்கள்

அல்ஸ்டாம் நிறுவனம் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மட்டும் அல்லாமல் டெல்லி, லக்னோ, கொச்சி ஆகிய நகரின் மெட்ரோ திட்டத்திற்கும் ரயில் பெட்டிகளை அளித்துள்ளது. தற்போது மும்பை மெட்ரோ லைன் 3, ஆக்ரா - கான்பூர் மெட்ரோ, இந்தோர் - போபால் திட்டங்களில் பணியாற்றி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

French Alstom bags Chennai Metro order for Phase-II Poonamallee Bypass - Light House line 4

French Alstom bags Chennai Metro order for Phase-II Poonamallee Bypass - Light House line 4. Chennai Metro is the 4th longest metro system In india.
Story first published: Friday, November 11, 2022, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X