ஊரடங்கில் வேலையிழந்த நண்பர்கள்.. ரூ.10 கோடி சம்பாதித்தது எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊரடங்கு நேரத்தில் வேலை இழந்த இரண்டு நண்பர்கள் கடும் பொருளாதார சிக்கலில் இருந்த நிலையில் துணிவுடன் சொந்த தொழில் தொடங்கினர்.

 

அவர்கள் தொடங்கிய தொழில் மிகப்பெரிய லாபத்தை அடைந்ததை அடுத்து இரண்டே வருடத்தில் ரூபாய் 10 கோடி சம்பாதித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது வேலை இழந்த இரண்டு இளைஞர்கள் இரண்டே வருடத்தில் 10 கோடி ரூபாய் எப்படி சம்பாதித்தார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

3 வருடத்தில் முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்.. ஐடிசி கொடுத்த வாய்ப்பு.. பயன்படுத்திகிட்டீங்களா?

 ஊரடங்கு

ஊரடங்கு

2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது ஆகாஷ் மஸ்கே மற்றும் ஆதித்ய கீர்த்தனே ஆகியோர் வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டது. பொறியாளர்களாக இருவரும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த நிலையில் ஊரடங்கின்போது இருவரும் தங்கள் வேலையை இழந்தனர். வேலையிழந்த முதல் மாதத்தை திரைப்படங்களை பார்ப்பதில் அவர்கள் செலவிட்டனர், ஆனால் ஊரடங்கு தொடர்ச்சியாக இருந்ததால் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியது

சொந்த தொழில்

சொந்த தொழில்

இதனையடுத்து பல நிறுவனத்தில் முயற்சி செய்தும் வேலை கிடைக்காததால் அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர். வெற்றிகரமான வணிகங்களை பற்றிய புத்தகங்களைப் படித்ததால் அவர்களால் சொந்த தொழில் குறித்த ஒரு நுட்ப அறிவை பெற முடிந்தது. உள்ளூர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இறைச்சி மற்றும் கோழி பதப்படுத்துதல் குறித்த தொழில் பயிற்சி வகுப்பில் இருவரும் சேர்ந்தனர்.

குடும்பத்தினர் ஆதரவு இல்லை
 

குடும்பத்தினர் ஆதரவு இல்லை

சில்லறை நுகர்வோர்களுக்கு இறைச்சியை தேவைக்கேற்ப நம்பகமான சலுகை விலையில் வழங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த யோசனை வெளித்தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கவில்லை.

ஆதரவு

ஆதரவு


"நாங்கள் செய்யும் வேலையின் தன்மையால் எங்களை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று எங்கள் குடும்பத்தினர் முதலில் நினைத்தார்கள். பின்னர் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற தொடங்கியவுடன் அவர்கள் எங்களுடன் நின்றனர்" என்கிறார் ஆதித்ய கீர்த்தனே

ரூ.25,000 முதலீடு

ரூ.25,000 முதலீடு

இந்த நண்பர்கள் வெறும் ரூ.25,000 முதலீட்டில் 'Apetitee' என்ற இறைச்சி கடையை திறந்தனர். முதல்கட்டமாக 100 சதுர அடியில் தொடங்கிய 'Apetitee' இறைச்சி வணிகம் இன்று அந்த நண்பர்களின் முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மாதத்திற்கு ரூ.4 லட்சத்திற்கு மேல் விற்றுமுதல் செய்கிறது.

ரூ.10 கோடிக்கு விற்பனை

ரூ.10 கோடிக்கு விற்பனை

இந்த நிலையில் தான் சமீபத்தில் Apetitee நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ரூ.10 கோடிக்கு Fabi என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் இணை நிறுவனர்களான அதே நிறுவனத்தில் தொடர்ந்து இருக்கவும் கோரிக்கை விடப்பட்டது. அவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் மற்றும் லாப வரம்பு 40 சதவிகிதம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது என Fabi இயக்குனர் ஃபஹத் சையத் கூறினார்.

லாபம் அதிகரிப்பு

லாபம் அதிகரிப்பு

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, "Apetitee" என்ற பிராண்ட் பெயர் தொடர்ந்து இயங்கியது. முன்பை விட அதிக வணிகமும் நடந்து வருகிறது. மேலும் மரைனேட் செய்யப்பட்ட தயாரிப்புகள் போன்ற புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதால் லாபமும் அதிகரித்துள்ளது என என்று சையத் கூறினார்.

 3 ஆண்டுகளில் 100 கடைகள்

3 ஆண்டுகளில் 100 கடைகள்


மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 100 கடைகளை அதிகரித்தல் மற்றும் ஆர்டர்களை வீட்டு வாசலுக்கு கொண்டு செல்ல மின்சார வாகனங்களை உருவாக்குதல் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாக சையத் கூறினார்.

 ஆன்லைன் மூலம் விளம்பரம்

ஆன்லைன் மூலம் விளம்பரம்


மேலும் ஆன்லைன் ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரங்கள் மூலம் வணிகத்தை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அவுரங்காபாத்தில் 2,500 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலையில் உள்ளோம் என்று சையத் தெரிவித்தார்.

சிறு, குறு நகரங்களில் கிளைகள்

சிறு, குறு நகரங்களில் கிளைகள்


அவுரங்காபாத்தை தாண்டி மகாராஷ்டிராவின் மற்ற சிறு மற்றும் குறு நகரங்களில் கிளைகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என Fabi இயக்குனர் ஃபஹத் சையத் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Friends loss jobs in lockdown start meat venture and earn Rs.10 crores!

Friends loss jobs in lockdown start meat venture and earn Rs.10 crores!| ஊரடங்கில் வேலையிழந்த நண்பர்கள்.. ரூ.10 கோடி சம்பாதித்தது எப்படி தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X