எலான் மஸ்க் செம ஹேப்பி.. சர்ப்ரைஸ் கொடுத்த விளம்பரதாரர்கள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிள் இன்க் நிறுவனம் மீண்டும் ட்விட்டரில் விளம்பரங்களை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் அல்ல அமேசான்.காம் நிறுவனமும் ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் விளம்பரங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எனினும் ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள் இது குறித்து எந்த விதமான அறிவிப்பினையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ட்விட்டரும் கூறவில்லை.

புலி வாலை பிடித்த ஆப்பிள்.. விட்டா அடிச்சிடும்.. ஆட்டம் காட்டும் எலான் மஸ்க்..! புலி வாலை பிடித்த ஆப்பிள்.. விட்டா அடிச்சிடும்.. ஆட்டம் காட்டும் எலான் மஸ்க்..!

 விளம்பரங்கள் நிறுத்தம்

விளம்பரங்கள் நிறுத்தம்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, விளம்பரதாரர்கள் பலரும், ட்விட்டரில் இருந்து வெளியேறினர். விளம்பரத்தினை தற்காலிகமாக நிறுத்தினர்.

பல தரப்பும் ட்விட்டரின் எதிர்காலம் கேள்வி குறி தான் என்று எச்சரிக்கை விடுத்தன. ஒரு புறம் இப்படி எனில், மறுபுறம் ட்விட்டரை மீட்டெடுக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளை எலான் மஸ்க் துரிதமாக எடுத்து வந்தார் .

சுமுக நிலை

சுமுக நிலை

பணி நீக்கம் தொடங்கி வருவாய் அதிகரிப்புக்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்தார். இந்த நிலையில் தான் ட்விட்டருக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையே தற்போது சுமூகமான நிலை மேம்படத் தொடங்கியுள்ளது.

பரபரப்பு சலசலப்பு

பரபரப்பு சலசலப்பு

ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, சலசலப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை எனலாம், பணி நீக்கம் தொடங்கி ப்ளூ டிக் கட்டணம் வரையில் பரபரப்பான சூழல் இருந்து வருகின்றது.

இதுவரை ஊழியர்கள் மத்தியில் பதற்றமான நிலை இருந்து வந்த நிலையில், தற்போது ஐ ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நிரந்தரமாக நீக்க போவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கமா?

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கமா?

ட்விட்டரில் விளம்பரம் செய்வதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தி விட்டதாகவும், விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்குவதாகவும் பரபரப்பை கிளப்பினார்.

அதோடு விட்டுவிடவில்லை. அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் இருப்பதை ஆப்பிள் வெறுக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். இதில் ஆப்பிள் சி இ ஓ-வை டிம் குக்கையும் டேக் செய்து வம்பிற்கு இழுத்தார்.

 சர்ச்சை பதிவு

சர்ச்சை பதிவு

ட்விட்டரின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கி விடுவதாக ஆப்பிள் நிறுவனம் மிரட்டுகிறது. இதற்கு என்ன காரணம் என எலான் மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப்பில் இருந்து ட்விட்டரை நீக்கினாலும், அதற்கு போட்டியாக சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் இருந்து பின் வாங்க போவதில்லை என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

ஆப்பிள் ட்விட்டர் சமாதானம்

ஆப்பிள் ட்விட்டர் சமாதானம்

இதற்கு எலான் மஸ்க் ட்வீட்டில் ஆப்பிள் தலைமையகத்தில் டிம் குக்கை சந்தித்ததையும், இவ்விரு நிறுவனங்களுக்கு இடையே நிலவி வந்த பனிப்போர் குறித்தும் புரிதலை தீர்த்துவிடோம். அப்படியெல்லாம் ஒரு போதும் செய்ய மாட்டோம் என டிம் குக்கும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

விளம்பரதார்களுக்கு நன்றி

விளம்பரதார்களுக்கு நன்றி

 

இதற்கிடையில் தற்போது மற்றொரு ட்வீட்டில் ட்விட்டருக்கு திரும்பிய விளம்பரதாரர்களுக்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் மீண்டும் வளர்ச்சி பாதையை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றி காணலாம்

வெற்றி காணலாம்

எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய நிலையில், பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக பணி நீக்கம், ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுபாடுகள், ஊழியர்கள் ராஜினாமா, அலுவலகங்கள் சில நாட்கள் மூடல் என சர்ச்சைக்கு மேல் சர்ச்சை எழுந்தது. இதனால் ட்விட்டரின் எதிர்காலம் அவ்வளவு தான் என கூறப்பட்டது. ஆனால் அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி தற்போது வெற்றி காணத் தொடங்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From Apple to Amazon, Advertisers return on twitter

Elon Musk announced that Apple Inc has started advertising on Twitter again. Thanking advertisers for returning to Twitter, he tweeted.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X