இன்று முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று முதல் சமையல் எரிவாயு முதல் காசோலை விதிகள் வரை பல மாற்றங்கள் வரவுள்ளன.

 

வரவிருக்கும் இந்த மாற்றங்கள் என்னென்ன? இதனால் யாருக்கு என்ன லாபம்? சாமனியர்கள் சந்திக்க போகும் சாதக பாதகங்கள் என்னென்ன? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்க விருக்கிறோம்.

அந்த வகையில் நாம் இன்று முதலாவதாக பார்க்கவிருப்பது எல்பிஜி சிலிண்டர் விலை பற்றித் தான்.

சிலிண்டர் விலை மாறலாம்

சிலிண்டர் விலை மாறலாம்

LPG சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சிலிண்டர்களின் விலை ஜூன் 1 முதல் மாறக்கூடும். ஏற்கனகே பெட்ரோல் டீசல் விலையானது அனுதினமும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கேஸ் விலையும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த மாதமும் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி

அரசின் சிறுசேமிப்பு திட்டங்களாக பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட திட்டங்களுகு வட்டி விகிதம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்களை அரசு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்கின்றது. எனினும் வட்டி விகிதம் பெரும்பாலும் மாற்றப்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வருமான வரி தாக்கலுக்கான புதிய இ-பதிவு தளம்
 

வருமான வரி தாக்கலுக்கான புதிய இ-பதிவு தளம்

அரசு வருமான வரி தாக்கலுக்கான புதிய www.incometax.gov.in என்ற இ-பதிவு தளத்தினை தொடங்கவுள்ளது. இது வருமான வரி தாக்கல் செய்வோருக்கு பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எளிமையான இரு அனுபவத்தினை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த தளம் விரைவாக் பரிசீலனை செய்யப்பட்டு, விரைவில் உரித்தான திரும்ப பெறுதல்களை வழங்கும். எனினும் இந்த தளத்தின் ஜூன் 1 - 6 வரை சேவைகள் கிடைக்காது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 7 அன்றே தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பேங்க் ஆப் பரோடா பாசிட்டிவ் பே திட்டம்

பேங்க் ஆப் பரோடா பாசிட்டிவ் பே திட்டம்

பேங்க் ஆப் பரோடா ஜூன் 1, 2021 முதல் பாசிட்டிவ் பே முறையை அமல்படுத்தியுள்ளவுள்ளது. இந்த பாசிட்டிவ் பே திட்டமானது 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக பரிமாற்றம் செய்யும்போது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஜூன் 1 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம், வாடிக்கையாளர்களிடம் உறுதிபடுத்திய பின்பே காசோலைகள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது.

கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ்

கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ்

இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்று கூகுள் போட்டோஸ். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், கூகுள் 2021 ஜூன் 1 முதல் கூகுள் போட்டோஸ் தளத்தில் உயர் தரமான புகைப்படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலுகை நிறுத்தப்படும் என அறிவித்தது.

கூகிள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1ம் தேதிக்கு முன்னதாக, பயனர்கள் பதிவேற்றிய உயர் தரத்திலான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள், 15 ஜிபிக்குள் இருந்தால் அதை கூகுள் கணக்கு சேமிப்பிடத்தில் கணக்கிடப்படாது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விலக்கு உண்டு. அதாவது ஜூன் 1க்குப் பிறகு, கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்கு மேல் என்றால், அதற்கு கூகுள் ஒன் (Google One) என்பதற்கான சந்தாவை செலுத்த வேண்டும்.

விமான கட்டணங்கள் உயர்வு

விமான கட்டணங்கள் உயர்வு

கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில், உள்நாட்டு விமான போக்குவரத்து கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது.

எவ்வளவு அதிகரிக்கும்

எவ்வளவு அதிகரிக்கும்

இதையடுத்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்திற்கான குறைந்தபட்ச வரையறை, 13%ல் இருந்து 16% அதிகரிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால், 40 நிமிடத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கான கட்டணம் ரூ.2,300ல் இருந்து ரூ.2,600 ஆக உயரலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From LPG cylinder price to interest rate, major changes in june 1, 2021: check details here

From LPG cylinder price to interest rate, major changes in june 1, 2021: check details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X