ஓஹோன்னு இருந்த சாம் பேங்க்மேன் நிலைமையை பாத்தீங்களா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் 2வது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான FTX திவால் ஆனதில் இருந்து பெரும் சரிவை இந்நிறுவனத் தலைவர்களும் அதன் முதலீட்டாளர்களுக்கும் அதிகப்படியான இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் FTX கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் சொத்து மதிப்புத் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி ஒரு காலத்தில் உலகின் 6வது பணக்காரராக இருந்த அனில் அம்பானி சொத்து மதிப்பு ஜீரோ ஆனதோ, கிட்டத்தட்ட இதே நிலையைச் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் எதிர்கொண்டு உள்ளார்.

FTX கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்

FTX கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்

FTX கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் நிறுவனம் திவாலாக அறிவித்த நாளிலேயே பதவியை ராஜினாமா செய்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு திகைக்க வைக்கும் அளவிற்குச் சரிந்துள்ளது.

 சாம் பேங்க்மேன்-ஃப்ரைட்

சாம் பேங்க்மேன்-ஃப்ரைட்

சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் ஒரு காலத்தில் 26 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்த நிலையில் FTX நிறுவனம் திவாலான பிறகு அவருடைய வங்கி கணக்கில் கடைசியாக 100,000 டாலர் இருப்பதாக அறிவித்துள்ளார். இது கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் இத்துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகளையும் கலங்கடித்துள்ளது.

ஒரே நாளில்
 

ஒரே நாளில்

நவம்பர் தொடக்கத்தில் கிரிப்டோ பரிமாற்ற தளத்தைக் காப்பாற்ற போதுமான நிதி திரட்ட முடியாத நிலையில் ஒரே நாளில் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் சொத்து மதிப்பு 15.6 பில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்தும் தொடர் சரிவை எட்டிய நிலையில் FTX நிறுவனத்தில் இவருடைய மதிப்பு ஜீரோ ஆகியுள்ளது.

FTX உடன் இணைப்பு

FTX உடன் இணைப்பு

இதுகுறித்து சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் கூறுகையில் என்னுடைய அனைத்து சொத்துக்களும் FTX உடன் இணைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மொத்தமும் இழந்துள்ளேன். கடைசியாக வங்கி கணக்கை செக் செய்த போது 100000 டலார் மட்டுமே இருந்து இப்போது என்னவென்று தெரியவில்லை, மைனஸ்-ல் கூட இருக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.

CoinDesk வெளியிட்ட தரவுகள்

CoinDesk வெளியிட்ட தரவுகள்

உலகின் 2வது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான FTX திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது, கிரிப்டோ செய்தி இணையத்தளமான CoinDesk-ல் வெளியான ஒரு தகவல் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனா அதுதான் உண்மை.

நேட்டிவ் டோக்கன் FTT

நேட்டிவ் டோக்கன் FTT

உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளம் அனைத்தும் சொந்தமாக ஒரு கிரிப்டோகரன்சி வைத்துள்ளது. இப்படிக் கிரிப்டோ வர்த்தக நிறுவனமான FTX, அதன் நேட்டிவ் டோக்கன்களான FTT ஐ பெரிதும் சார்ந்து இருப்பதாக அலமேடா ரிசர்ச் அமைப்பின் FTX நிறுவனத்தின் இருப்பு நிலை ஆய்வுகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Binance சிஇஓ எஸ்கேப்

Binance சிஇஓ எஸ்கேப்

இதைத் தொடர்ந்து Binance சிஇஓ Changpeng Zhao, FTX நிறுவனத்தின் நேட்டிவ் டோக்கன்களான FTT இருப்பைத் தற்போது கசிந்த தகவல் அடிப்படையில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. அதுமட்டும் அல்லாமல் FTX நிறுவனத்தைக் காப்பாற்றத் திவால் ஆவதில் இருந்து தப்பிக்க உதவுவதிலிருந்து வெளியேறினார்.

திவால்

திவால்

இதைத் தொடர்ந்து தான் சாம் பேங்க்மேன் ஃப்ரைட்-ன் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான FTX அமெரிக்காவில் திவாலானதாக அறிவித்து நிறுவன சட்ட பிரிவு 11 கீழ் bankruptcy அறிக்கையை நவம்பர் 11 ஆம் தேதி சமர்ப்பித்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டது.

சிஇஓ பதவி ராஜினாமா

சிஇஓ பதவி ராஜினாமா

இதோடு 30 வயதான முன்னாள் கிரிப்டோ பில்லியனரான சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் FTX இன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜான் ஜே ரே III அவரது இடத்தைப் பெறுவார் என்று FTX வெளியிட்ட நவம்பர் 11 ஆம் தேதி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FTX Sam Bankman-Fried once a billionaire left with $100,000 after FTX bankruptcy

FTX Sam Bankman-Fried once a billionaire left with $100,000 after FTX bankruptcy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X