இந்தியாவிற்கு வருகிறது 7-Eleven.. மும்பையில் மட்டும் 100 கடைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக் பஜார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பியூச்சர் குரூப் 7-Eleven நிறுவனத்துடன் இந்தியாவில் முழுவதும் கடைகளைத் திறக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே வால்மார்ட், ஸ்டார் பஜார், மோர் சூப்பர்மார்ட், டீ மார்ட் போன்றவை இருக்கும் போது இது என்ன புதிதாக 7-Eleven என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

 

மற்ற கடைகளை விடவும் 7-Eleven சற்று வித்தியாசமானது உபயோகமானது. இந்தக் கடைகளில் அப்படி என்ன வித்தியாசம், இந்தியாவில் என்ன திட்டம் என்பதை இப்போது பார்ப்போம்.

கிஷோர் பியானி

கிஷோர் பியானி

பியூச்சர் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கிஷோர் பியானி உலகின் மிகப்பெரிய convenience store நிறுவனமான 7-Eleven கடைகளை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அறிமுகம் செய்யத் தயார் நிலையில் உள்ளார்.

7-Eleven நிறுவனத்துடன் பியூச்சர் குருப் இந்தியாவில் கடைகளைத் திறக்கவும், நிர்வாகம் செய்யவும் master franchise ஒப்பந்தம் செய்துள்ளது.

7-Eleven

7-Eleven

இந்தக் கடைகள் சிறிய மளிகைக் கடைகளும் இல்லை, பெரிய ஷாப்பிங் மால்களும் இல்லை. இரண்டுக்கும் இடையில் சற்று பெரிய கடைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும். இதுமட்டும் அல்லாமல் இந்தக் கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்பது தான் கூடுதல் சிறப்பு அம்சம்.

சமீபத்தில் இந்தியாவில் பெரு நகரங்களில் கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்கலாம் என மத்திய அரசு ஒரு புதிய வர்த்தக வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. அதைச் சரியான முறையில் பியூச்சர் குரூப் பயன்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

மும்பை
 

மும்பை

7-Eleven கடைகள் துவக்கத்தைக் குறித்துக் கிஷோர் பியானி கூறுகையில், முதல் கடையில் மும்பையில் வருகிற மார்ச் மாதத்திற்குள் துவக்கப்படும். மேலும் அடுத்த 2 அல்லது 3 வருடத்திற்கு மும்பையை மட்டுமே முக்கிய வர்த்தகப் பகுதியாகக் கொண்டு இயங்கப் போகிறோம்.

மும்பையில் மட்டும் சுமார் 1000 கடைகளைத் திறப்பதற்கு வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் மும்பையை முதல் முழுமையாக முடித்துவிட்டு அதன் பின் அடுத்தடுத்த நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

இந்தியாவில் ஏற்கனவே இத்தகைய பிரிவில் மோடி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் Twenty Four Seven, RJ கார்ப் நிறுவனத்தின் ஜே மார்ட் மற்றும் இன்&அவுட் ஆகிய கடைகள் உள்ளது.

இந்நிலையில் பியூச்சர் குரூப்-இன் இந்த 7-Eleven கடைகள் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் தனக்கான இடத்தை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

பிக் பஜார், ஈசி டே, நீல்கிரீஸ், பேஷன் அட் பிக் பஜார் மற்றும் சென்டரல் பார்மெட்ஸ் எனப் பல வகையில் சூப்பர்மார்ட், மளிகை கடை, எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 400 நகரங்களில் 1,440 கடைகளை வைத்து மிகப்பெரிய ரீடைல் வர்த்தகச் சாம்ராஜியத்தை நடத்தி வருகிறது பியூச்சர் குரூப். இதுமட்டும் அல்லாமல் தற்போது அமேசான் நிறுவனத்துடனும் கூட்டணி வைத்து இணைய விற்பனையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Future Group bangs with 7-Eleven: Mumbai alone 1000 stores

Biyani clarified it may not be just one outlet but a cluster of 7-Eleven stores that could come up together. The company would focus on setting up 7-Eleven stores only in Mumbai, at least for the next two-three years.
Story first published: Friday, December 13, 2019, 10:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X