350 - 400 பேரை வீட்டுக்கு அனுப்பிய ப்யூச்சர் குழுமம்.. கதறும் ஊழியர்கள்.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ப்யூச்சர் குழுமம், 350 - 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த பணி நீக்கமானது விற்பனை பிரிவு, தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் அலுவலக ஊழியர்கள் என பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதை நன்கு அறிந்த முன்னாள் நான்கு ஊழியர்கள் கூறியுள்ளதாகவும் லைவ் மின்டில் வெளியாகியுள்ளது.

மேலும் அண்மையில் இந்த ப்யூச்சர் குழுமம் அதன் ஈஸி டே ஸ்டோர்களை மூடியதாகவும் கூறப்படுகிறது.

கடைகள் மூடல்

கடைகள் மூடல்

கடந்த நவம்பர் மாதத்தில் 140 ஈஸி டே கடைகள் மூடப்பட்டதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியானது. இது மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் கூறப்பட்டது. கிஷோர் பியானி கடந்த 2017ல் தனது ப்யூச்சர் குழுமத்தின் ஈ-காமர்ஸ் வணிகத்தில் பல தொழில்நுட்பத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் ஆஃப் லைன் வர்த்தகத்தினை முழுக்க, ஆன்லைன் வர்த்தகமாக மாற்றுவதற்கான யோசனையாகவும் அப்போது இருந்தது.

பணி நீக்கம் உண்மை தான்

பணி நீக்கம் உண்மை தான்

இது பற்றி ப்யூச்சர் குழுமதித்தின் செய்தித் தொடர்பாளர் மற்ற விவரங்களை ஏதும் கூறாமல், பணி நீக்கம் உண்மைதான் என்றும் உறுதி படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2016 இறுதியில் தனது டிஜிட்டல் சொத்துகளை உருவாக்க பணியமர்த்த தொடங்கிய ப்யூச்சர் குழுமம், சொல்லப்போனால் 2018ல் கூட இதற்காகவே 500 - 600ஊழியர்களை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அமேசான் நுழைவு
 

அமேசான் நுழைவு

இப்படி ஒரு நிலையில் தான் ஆன்லைன் ஜாம்பாவான் ஆன அமேசான், ப்யூச்சர் குழுமத்தின் 9.5% பங்குகளை வாங்க 2.500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த நிலையில் சில்லறை வர்த்தகத்தில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக, அதை ஈடு கட்டும் விதமாக ப்யூச்சர் குழுமம் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும், இது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒப்பந்தம் உண்மையா?

ஒப்பந்தம் உண்மையா?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் கூப்பன் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு, அமேசான் வாங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்த இரு நிறுவனங்களும் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், எனினும் நிதித் தொடர்பான எந்த பரிவர்த்தனை குறித்தும் இந்த ஒப்பந்தங்களில் காட்டப்படவில்லை என்றும் அந்த சமயத்தில் கூறப்பட்டது.

என்ன தான் நடக்கிறது?

என்ன தான் நடக்கிறது?

ஆமால் இந்த குழுமம் தற்போது பணி நீக்கம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட போகிறதா? அல்லது நிலவி வரும் மந்த நிலையால் பணி நீக்கமா? அல்லது மறு சீரமைப்பின் ஒரு பகுதியா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Future group laid off 350 – 400 employees

Kishore biyani’s Future group laid off 350 – 400 employees, said former employees. and they said recently closure many Easy day stores part of the restructuring exercise.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X