கிஷோர் பியானிக்கு அடுத்த பெரும் இழப்பு.. கைவிட்டு போகும் 7Eleven..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி ரீடைல் பிராண்டுகளில் ஒன்றான 7Eleven இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்குவதற்காக 2019ல் கிஷோர் பியானி-யின் பியூச்சர் குரூப் உடன் மாஸ்டர் பிரான்சைஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. பியூச்சர் குரூப் ஏற்கனவே மிகப்பெரிய ரீடைல் வர்த்தகத்தை வைத்திருக்கும் காரணத்தால் 7Eleven மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

 

ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு கடையைக் கூடத் திறக்காத காரணத்தால் பியூச்சர் குரூப் - 7Eleven மத்தியிலான ஒப்பந்தத்தை இரு தரப்பு ஒப்புதல் உடன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பியூச்சர் குரூப் இதுவரை 7Eleven-க்கான பிரான்சைஸ் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளது 7Eleven நிர்வாகம்.

ஏர் இந்தியா-வை டாடா கைப்பற்றிய செய்தி தவறானது..?! DIPAM அமைப்பு, AIR டிவீட்..!

7Eleven கடைகள்

7Eleven கடைகள்

ஜப்பான், சீனா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாகத் தெருவுக்குத் தெரு இருக்கும் ஒரு முக்கியமான கடை என்றால் இது 7Eleven தான். பொதுவாக ரீடைல் கடைகள் சில நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருக்கும், ஆனால் 7Eleven 10க்கும் அதிகமான நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் 60 நாடுகளில் சொந்த பெயரிலேயே இயங்கி வருகிறது.

சிறிய ரக டிபார்மென்டல் ஸ்டோர்

சிறிய ரக டிபார்மென்டல் ஸ்டோர்

7Eleven என்பது சிறிய ரக டிபார்மென்டல் ஸ்டோர், இக்கடைகளில் தினசரி மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும். குறிப்பாக மளிகை பொருட்கள், ஸ்னாக்ஸ், மதுபானம், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பாஸ்ட் புட்ஸ் வரையில் அனைத்தும் இருக்கும் சிறி அளவிலான டிபார்ட்மென்ட்ல் ஸ்டோர்.

24 மணிநேரமும்
 

24 மணிநேரமும்

உலகில் 71 நாடுகள் 71,000 கிடைகளை வைத்து இயங்கும் இந்தக் கடைக்கு மற்றொரு ஸ்பெஷல் என்றால், இந்தக் குட்டி டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் பல நாடுகளில் 24 மணிநேரமும் திறந்து இருக்கும். இதனால் மக்கள் மத்தியில் இந்தப் பிரண்டு கடைகளுக்குப் பெரும் மதிப்பும் உண்டு.

பெரிய நுகர்வோர் சந்தை

பெரிய நுகர்வோர் சந்தை

இந்தியா போன்ற பெரிய நுகர்வோர் சந்தையில் தனது வர்த்தகத்தைத் திறக்க வேண்டும் என்பதற்காக 7Eleven நிறுவனம் மிகவும் ஆசை ஆசையாய், 2019ல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த பியூச்சர் குரூப் உடன் கூட்டணி இணைந்தது. ஆனால் 7Eleven நிறுவனத்தின் கனவு வெறும் கனவாகவே மாறியுள்ளது.

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

இந்தியாவில் முதல்கட்டமாக 7 கடைகளைத் திறக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பியூச்சர் குரூப் மற்றும் 7Eleven மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு மாஸ்டர் பிரான்சைஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் 2019க்கு பின்பு தான் பியூச்சர் குரூப் அதிகக் கடன் சுமை, கொரோனா, ரிலையன்ஸ் ரீடைல்-க்கு விற்பனை, அமேசானின் வழக்கு என அடுத்ததடுத்து பிரச்சனைகளைச் சந்தித்து வந்தது.

ஒப்பந்தம் ரத்து

ஒப்பந்தம் ரத்து

இதனால் பியூச்சர் குரூப், 7Eleven உடனான ஒப்பந்தப்படி கடைகள் திறக்க முடியாத காரணத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் 7Eleven கடைகளை இயக்க இந்நிறுவனம் உருவாக்கிய அமைப்பு 2019ல் இயங்கி வருகிறது. தற்போது ஒரு கடை கூடத் திறக்கப்படாத காரணத்தால் 7Eleven 2019 முதல் 173 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நம்பிக்கை இழக்காத 7Eleven

நம்பிக்கை இழக்காத 7Eleven

ஆனாலும் 7Eleven நிர்வாகம் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. விரைவில் மாற்றுக் கூட்டணி அல்லது மாற்றுத் திட்டத்துடன் இந்தியச் சந்தையில் வர்த்தகத்தைத் துவங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது 7Eleven.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Future Retail Kishore biyani lost 7Eleven master franchise Agreement terminated

Future Retail Kishore biyani lost 7Eleven master franchise Agreement terminated
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X