ரூ.2,500 டூ ரூ.30 கோடி.. தமிழக தொழிலதிபர் சொல்லும் வெற்றிக்கான 3 ரகசியம் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள பல இளைஞர்களும் நினைக்கும் ஒரு விஷயம் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் என்ன தொழில் செய்வது? அதற்கு முதலீடு என்ன செய்வது? பிரச்சனைகளை எப்படி சம்பாளிப்பது என்பதிலேயே பலரின் கனவுகளும் புதைந்து போகின்றன.

 

ஆனால் அப்படியானவர்களுக்கு இந்த வெற்றி கதை என்பது ஒரு ஊக்குவிக்கும் ஒரு விஷயம் எனலாம்.

அதிலும் கிராமத்தில் இருந்து இன்று பல நாடுகளிலும் வெற்றி நடைபோடும் ஒரு தொழிலதிபரின் கதையை பற்றித் தான் நாம் இந்த கதையில் பார்க்கவிருக்கிறோம்.

என்ன பார்க்கபோகிறோம்?

என்ன பார்க்கபோகிறோம்?

அந்தவகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் வெற்றிகரமான தமிழகத்தினை சேர்ந்த தொழிலதிபர் FYMC நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பிரபாகர் பற்றி தான். தமிழகத்தின் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், இன்று மாபெரும் வெற்றி கனியை எட்டியுள்ளார் எனலாம். இவருக்கு குழந்தை பருவத்திலேயே வியாபாரம் மீதான ஆர்வம் அதிகமாம்.

யாரவர்?

யாரவர்?

ஏனெனில் ராஜ் பிரபாகர் குழந்தை பருவத்தில் தனது தாயுடன் அருகிலுள்ள சந்தைக்கு சென்று தங்களது காய்கறிகளை விற்கும் போதே இவரும் விற்பனை செய்துள்ளார். அவரின் தாய் பக்கத்து கடைகளுக்கு தங்களது குடும்பத்திற்காக பொருட்கள் வாங்க செல்லும்போது நிறைய விற்க வேண்டும் என்று நினைத்ததுண்டாம். இதுவே பின்னாளில் தான் ஒரு சிஇஓ-வாக மாற துணை புரிந்ததாகவும் கூறுகிறார்.

அரசு பள்ளியில் கல்வி
 

அரசு பள்ளியில் கல்வி

தினசரி 2 மணி நேரம் நடந்து சென்று பள்ளியில் படித்துள்ளார். பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அரசு பள்ளியில் படித்ததால் ஆங்கிலம் தெரியாததால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், எனினும் பின்னர் ஆங்கில திறனையும் வளர்த்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்.

எப்போது ஆரம்பம்?

எப்போது ஆரம்பம்?

படிக்கும் காலத்திலேயே டி விற்றதாகவும், இது போன்ற பல சிறு வேலைகளை படிக்கும் காலத்தில் செய்ததாகவும் கூறுகிறார். இது பிற்காலத்தில் தொழிலதிபரான காலத்தில் தனக்கு மிக உதவிகரமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இப்படி பல அனுபவங்களுக்கு பிறகு 1999ல் FYMC என்ற நிறுவனத்தினை தொடங்கியுள்ளார்.

வங்கிக் கடனுடன் ஆரம்பம்

வங்கிக் கடனுடன் ஆரம்பம்

FYMC நிறுவனத்தினை ஆரம்பித்த நேரத்தில் தனது கையில் வெறும் 2500 ரூபாய் தான் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு வங்கியில் 1.5 லட்சம் ரூபாய் கடனை பெற்று வணிகத்தினை தொடங்கியுள்ளார். அதன் பிறகு பல கட்ட சவால்களுக்கு மத்தியில், அவருக்கு உதவிகரமாக இருந்தது அவரது மனைவி என்றும் கூறியுள்ளார்.

முதல் ஆர்டர்

முதல் ஆர்டர்

எனினும் பல நிதி சவால்களை சந்தித்தவர். ஒரு கட்டத்தில் தனது குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லாத நிலையில், நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். இப்படி பல நிதி சவால்களுக்கும் மத்தியில் 6 மாதங்களுக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு ஆர்டர் கிடைத்துள்ளது. இது தான் FYMC நிறுவனத்தின் டர்னிங் பாயிண்ட் என்கிறார் பிரபாகர்.

என்ன பணி

என்ன பணி

FYMC நிறுவனத்தின் முக்கிய பணி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஊழியர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், திறனை வளர்ப்பதுமாகும். இந்தியாவில் 21 துறை சார்ந்த, 500 நிறுவனங்களில் பயிற்சி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்

உலகம் முழுக்க சேவை

உலகம் முழுக்க சேவை

ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் சேவை செய்து வந்த FYMC நிறுவனம் இன்று, பல்வேறு நாடுகளிலும் தனது சேவையை செய்ய தொடங்கியுள்ளது. சுமார் 5 லட்சம் மேற்பட்டோருக்கு இதுவரை பயிற்சி அளித்துள்ளதாகவும் பிரபாகர் கூறுகின்றார்.

சொல்ல விரும்புவது என்ன?

சொல்ல விரும்புவது என்ன?

ஒவ்வொரு பிரச்சனைகளுக்குள்ளாகவும் ஒரு தீர்வு இருக்கும். அந்த தீர்வை கண்டுபிடிக்க நாம் தெரிந்து கொண்டால் அதுவே நமது வெற்றி என்கிறார். மேலும் பிரச்சனையே இல்லாமல் தொழில் செய்ய முடியாது. அப்படி நினைப்பது தான் பிரச்சனையே. ஆக பிரச்சனைக்குள்ள தீர்வினை கண்டிபிடித்தால், நீங்கள் தான் வெற்றிகரமான தொழிலதிபர் என்கிறார்.

பிடித்தவர்களை கூட வைத்துக் கொள்ளுங்கள்

பிடித்தவர்களை கூட வைத்துக் கொள்ளுங்கள்

பிடித்தமானவர்களை கூடவே வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இது தான் வெறும் 2500 ரூபாயில் இருந்து, 30 கோடி ரூபாய்க்கு மேலாக லாபம் பார்க்க வழிவகுத்ததாகவும் கூறுகிறார். பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வை கண்டிபிடியுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FYMC's raj prabhakar created around Rs.30 crore business empires in Tamil nadu

FYMC’s raj prabhakar was born and raised in a small village. He created around Rs.30 crore business empires in Tamil nadu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X