ரூ.45,000 கோடி முதலீடு.. கெயில் அதிரடி விரிவாக்க திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான கெயில் அடுத்த 5 வருடத்தில் தனது நேஷனல் கேஸ் பைப்லைன் கிரிட் நிறுவனத்தின் மூலம் நகரக் கேஸ் விநியோக முறையை அதிநவீன முறையில் மாற்றியமைக்கச் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் இந்நிறுவனத் தலைவர் அஸ்தோஷ் கர்நாடக் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசு இத்திட்டத்திற்குத் தற்போது தென் மாநில மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைப் போலவே கிழக்கு இந்திய, வடகிழக்கு மக்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் இயற்கை எரிவாயு பயன்படுத்துவாரின் அளவு தற்போதைய அளவான 6.2 சதவீதம் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

 
ரூ.45,000 கோடி முதலீடு.. கெயில் அதிரடி விரிவாக்க திட்டம்..!

இதன் காரணமாகத் தான் முதல் முதலீடு கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களைத் திட்டதிற்குள் இணைத்துள்ளது கெயில் நிறுவனம்.

இந்திய மக்களின் எரிசக்தி நுகர்வு அளவு அதிகளவில் இயற்கை எரிவாயு மூலம் தீர்க்கவும் சுற்றுச்சூழல் மாசுபடாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் கொள்கைக்கு இணங்க நாட்டில் கேஸ் விநியோகத்திற்குத் தேவையான உள்கட்டுமானத்தை உருவாக்கும் பணியில் தற்போது கெயில் இறங்கியுள்ளது.

இந்தியா தற்போது ஒரு நாளுக்கு 160 மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு பயன்படுத்துகிறது. இதனை 400 மில்லியன் கியூபிக் மீட்டராக உயர்த்த வேண்டும் என்பது தான் தற்போதைய இலக்காக உள்ளது. இதன் மூலம் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயு-வின் அளவு 6.2 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயரும். இதுவே மத்திய அரசின் குறிக்கோளாகவும் உள்ளது.

இக்குறிக்கோளை சாத்தியப்படுத்த தற்போது 12,160 கிலோமீட்டர் பைப்லைன் இணைப்பிற்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்து வரும் நிலையில் கூடுதலாக 5500 கிலோமீட்டர் பைப்லைன் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுக்க 400 புதிய சிஎன்ஜி ஸ்டேஷன்களை அமைக்கவும் 10 லட்ச புதிய இணைப்புகளை உருவாக்கும் பணிகளைச் செய்ய அடுத்த 5 வருடம் திட்டமிடப்பட்ட உள்ளது கெயில்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GAIL to invest over Rs 45,000 cr to create infra for gas-based economy

GAIL India Ltd, the country's largest gas utility, plans to invest over Rs 45,000 crore over the next five years to expand the National Gas Pipeline Grid and city gas distribution network to help push for greater use of environment-friendly. fuel.
Story first published: Thursday, January 23, 2020, 8:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X