மும்பை விமான நிலையத்தின் 74% பங்குகளைக் வாங்கிய அதானி குழுமம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமம், மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 74% பங்குகளை வாங்கியுள்ளது. அதானி குழுமம், மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெரும் பகுதி பங்குகளை ஜிவிகே குழுமத்திடம் இருந்து வாங்கி உள்ளது.

அதானி குழுமம், ஜிவிகே குழுமத்திடம் இருந்து 50.5 சதவீத பங்குகளையும், ஏர்போர்ட்ஸ் கம்பெனி ஆப் சவுத் ஆப்பிரிக்கா (Airport Company of South Africa) நிறுவனத்திடம் இருந்து 10 சதவீத பங்குகளையும், பிட்வெஸ்ட் குழுமத்திடம் (Bidvest ) இருந்து 13.5 சதவீத பங்குகளையும் வாங்கி இருக்கிறது அதானி குழுமம்.

மும்பை விமான நிலையத்தின் 74% பங்குகளைக் வாங்கிய அதானி குழுமம்!

ஏற்கனவே பல கடன் பிரச்சனை மற்றும் நிதி அழுத்தங்களுக்கும் மத்தியில், நிதி திரட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டது ஜிவிகே குழுமம். இதற்கிடையில் தான் தற்போது மும்பை விமான நிலைய பங்குகளை, அதானி குழுமத்துக்கு, விற்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டது.

இந்த டீலுக்குப் பின், இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் விமான நிலைய ஆபரேட்டராக உருவெடுத்து இருக்கிறது அதானி குழுமம். ஏனெனில் ஏற்கனவே ஆறு விமான நிலையங்களை அதானி கொண்டு இருக்கும் நிலையில், தற்போது இதனை கையகப்படுத்தினால் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டராக அதானி மாறும். இந்தியாவிலேயே அதிக பயணிகள் மற்றும் விமானங்கள் வந்து போகும் மிகப்பெரிய இரண்டாவது விமான நிலையம் மும்பை விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக இதுவரை 6 விமா நிலையங்களை ஆப்ரேட் செய்து வந்த அதானி குழுமம், தற்போது 7 வது விமான நிலையத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.

கடந்த 2020ம் நிதியாண்டு அறிக்கையில் இந்தியாவிலேயே, மிகப் பெரிய விமான நிலைய டெவலெப்பராக உருவாக வேண்டும் என்பது தான், அதானி குழுமத்தின் லட்சிம் எனவும் கூறி இருந்தது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக அதற்கான முதல் அடி அடியினை எடுத்து வைத்துள்ளது எனலாம்.

அதானி குழுமம் சமீபத்தில் தான், விமான நிலைய ஆபரேட்டிங் வியாபாரத்தில் களம் இறங்கியது. வியாபாரத்தில் காலடி எடுத்து வைத்த சில காலங்களிலேயே, பொது - தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் (Public Private Partnership) கீழ் அதானி குழுமம், இந்தியாவில் 6 விமான நிலையங்களை நடத்தும் ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விமான நிலையத்தின் பங்குகளை வாங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gaudam adani’s adani group acquired 74% stake in MIAL

Gautam adani’s adani group acquired 74% stakes in Mumbai international airport limited
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X