இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு இன்று (ஜூன் 24) 60வது பிறந்த நாள் ஆகும்.
இதற்கிடையில் தனது பிறந்த நாளை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு சமூகப் பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
முன்னதாக விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி, மிகப்பெரியளவிலான தொகையை சமூக சேவைக்காக செலவிட்டு வரும் நிலையில், தற்போது கெளதம் அதானியும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார் எனலாம்.
அதானியின் நெகிழ்ச்சி ட்வீட்
அதானி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக பாதுகாப்பு சேவைகளுக்காக, அதானி நன்கொடையாக அளிப்பதாக அதானி ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, இது எங்கள் தந்தையின் 60-வது பிறந்த நாள். இந்த 60,000 கோடி ரூபாய் நன்கொடை இந்திய மக்களின் வளர்ச்சிக்காக பயன்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரீத்தியின் ட்வீட்
கெளதம் அதானி இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் கவனம் ஈர்த்த வாழ்த்துகளில் கெளதம் அதானியின் மனைவி பிரீத்தியின் வாழ்த்துகள் தான். பிரீத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் அதானியின் இளம் வயது படத்தினை பகிர்ந்து, அதனுடன் வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.
அவரது கனவுகள் நனவாகனும்
பிரீத்தியின் ட்வீட்டில், சுமார் 36 வருடங்களுக்கு முன்பு, எனது தொழிலை விட்டு விட்டு,அதானியுடன் பயணத்தை தொடங்கினேன். இன்று அதனை திரும்பி பார்க்கும்போது அவரின் மீது அளவற்ற மரியாதையும், பெருமையும் மட்டுமே உள்ளது. அவரின் 60வது பிறந்த நாளில் அவரின் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காகவும், அவரின் கனவுகள் நனவாக இறைவனை பிராத்திக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபர்
தொழிலதிபர்களில் ஒருவர், அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இன்னும் பல புதிய துறைகளில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யவும் முயற்சி செய்து வருகின்றார்.
எது எப்படியோ இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபதிரான கெளதம் அதானி பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்வோமே.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications