ஃபோர்ப்ஸ் 2022 அறிக்கையில் இந்தியாவின் சிறந்த 100 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 25 பில்லியன் டாலர் அதிகரித்து, 800 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் பங்கு சந்தை சரிவு, ரூபாய் சரிவு உள்ளிட்ட காரணிகளுக்கு மத்தியில், கடந்த ஆண்டு பல பணக்காரர்களின் சொத்து மதிப்பானது சரிவினைக் கண்டு காணப்பட்டது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 10% சொத்து மதிப்பானது சரிவில் காணப்பட்டது.

கெளதம் அதானி முதலிடம்
இதற்கிடையில் இந்த ஆண்டு நெருக்கடிகள் பலவும் சர்வதேச சந்தையில் நிலவி வந்தாலும், இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்தானது கணிசமான அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கெளதம் அதானி முதலிடத்திலும், முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சிறந்த 10 பேரின் சொத்து
முதலிடம் பிடித்த கெளதம் அதானியின் சொத்து மதிப்பானது 2008ல் இருந்து பார்க்கும்போது, முதன் முறையாக தற்போது தான் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பணக்காரர்கள் பட்டியலில் சிறந்த 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 385 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தரவு மூலம் அறிய முடிகிறது.

பெண்களின் பங்கு
இந்தியாவின் முதல் பணக்காரரின் சொத்து மதிப்பானது 150 பில்லியன் டாலரை நெருங்கியுள்ளது. அதேசமயம் பணக்கார பெண்ணின் சொத்து மதிப்பு 16.4 பில்லியன் டாலராக உள்ளது.
இந்த பணக்காரர்கள் பட்டியலில் மொத்தம் 9 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற குறைந்தபட்சம் 1.9 பில்லியன் டாலர் இருக்க வேண்டும்.

அதானி சொத்து மதிப்பு
அதானி குழுமத்தின் கெளதம் அதானி இந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு 1,211,460.11 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டினை காட்டிலும் இவரின் சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் இவர் இந்தியாவின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

முகேஷ் அம்பானி
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆயில் முதல் தொலைத் தொடர்பு வரையில் பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வரும் அம்பானியின் சொத்து மதிப்பு, 710,723.26 கோடி ரூபாயாகும். 2013-க்கு பிறகு முதல் முறையாக இரண்டாவது இடத்திற்கு முகேஷ் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.

ராதகிஷன் தமனி
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சப்ளை செயின் நிறுவனமான டிமார்ட் நிறுவனத்தின் தலைவரான ராதகிஷன் தமனி, மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவரின் நிகர சொத்து மதிப்பு, 222,908.66 கோடி ரூபாயாகும். கடந்த 2002ல் சில்லறை வர்த்தகத்தில் நுழைந்த தமனி, தற்போது இந்தியா முழுவதும் 271 கடைகளை கொண்டுள்ளார்.

சைரஸ் பூனவல்லா
இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளாரான சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பு 173,642.62 கோடி ரூபாயாகும். இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஷிவ் நாடார்
ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் 4வது பணக்காரர் என்ற இடத்தினை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 172,834.97 கோடி ரூபாயாகும். இந்த ஆண்டு 662 மில்லியன் டாலர் தொகையினை கல்விக்காக நன்கொடையாக ஷிவ் நாடார் வழங்கியுள்ளார். இவரின் சொத்து மதிப்பு பெரியளவில் சரிவினைக் கண்டிருந்தாலும், தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளார்.

சாவித்ரி ஜிண்டால்
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே பெண் சாவித்ரி ஜிண்டால் ஆகும். இவரின் சொத்து மதிப்பு 132,452.92 கோடி ரூபாயாகும். இவர் ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவர்களில் ஒருவர் ஆவார். டாப் 10 பட்டியலில் இவர் 5வது இடத்தினை பெற்றுள்ளார்.

தீலிப் சாங்வி & ஹிந்துஜா பிரதர்ஸ்
சன் பார்மா நிறுவனத்தின் நிறுவனரான திலீப் சாங்வியின் சொத்து மதிப்பு 125,184.21 கோடி ரூபாயாகும். இவர் டாப் 10 பட்டியியலில் 6வது இடத்தினை பெற்றுள்ளார்.
இதே ஹிந்துஜா குழுமத்தின் சகோதரர்களான கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, ஸ்ரீ சந்த் ஹிந்துஜா, அசோக் ஹிந்துஜா உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு 122,762.29 கோடி ரூபாயாகும். இவர் டாப் 10 பட்டியியலில் 7வது இடத்தினை பெற்றுள்ளனர்.

குமார் பிர்லா & பஜாஜ் குழுமம்
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் பிர்லாவின் சொத்து மதிப்பு , 121,146.01 கோடி ரூபாயாகும். டெக்ஸ்டைல் முதல் சிமெண்ட் வணிகம் வரையில் செய்து வரும் இந்த வணிக குழுமம் எட்டாவது இடத்தில் உள்ளது
பஜாஜ் குழுமம் சுமார் 40 நிறுவனங்களை தனது போர்ட்போலியோவில் கொண்டுள்ளது. 96 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த வணிக குழுமம், மும்பையில் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர்களின் சொத்து மதிப்பு 117,915.45 கோடி ரூபாயாகும்.

புதிய வரத்து
ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, இந்த ஆண்டில் புதியதாக 9 பேர் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். இதில் மூன்று ஐபிஓ-க்களும் அடங்கும். ஒன்று ஃபல்குனி நாயரின் நய்கா 44வது இடத்தில் உள்ளார். 50வது இடத்தில் ஆடை உற்பத்தியாளரான ரவி மோடி, 50வது இடம் பெற்றுள்ளார். மெட்ரோ நிறுவனத்தின் ராபிக் மாலி 89வது இடத்திலும் உள்ளனர்.