அதானியின் அடுத்த இலக்கு 'தண்ணீர்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், அதானி குழுமம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த இந்தியாவின் 2வது பெரிய follow-on public offerல் அதானி குழுமம் அதன் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் ஒரு பங்கை 3, 112 - 3, 276 ரூபாய் என்ற விலை வரம்பில் விற்பனை செய்ய உள்ளது.

இந்த விற்பனை மூலம் சுமார் 20, 000 கோடி ரூபாய் அளவிலான தொகையை அதானி குரூப் திரட்ட உள்ளது என ஜுகேஷிந்தர் சிங் பேசிய நிலையில் அதானி குழுமத்தின் அடுத்த வர்த்தக இலக்கு பற்றிப் பேசியுள்ளார்.

டீசல் இல்லாமல் இயங்கும் லாரி.. கௌதம் அதானி-யின் புதிய திட்டம்.. பிரம்மாண்ட கூட்டணி..! டீசல் இல்லாமல் இயங்கும் லாரி.. கௌதம் அதானி-யின் புதிய திட்டம்.. பிரம்மாண்ட கூட்டணி..!

 அதானி எண்டர்பிரைசர்ஸ்

அதானி எண்டர்பிரைசர்ஸ்

அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் FPO பங்கு விற்பனையான மூலம் 20000 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்ட உள்ள நிலையில், 2015ல் கோல் இந்தியாவின் 22, 558 கோடி ரூபாய் வெளியீட்டிற்குப் பிறகு, அதானி பங்கு விற்பனையானது இந்தியாவின் இரண்டாவது பெரிய FPO ஆக இருக்கும் என ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்தார்.

 ஜுகேஷிந்தர் சிங்

ஜுகேஷிந்தர் சிங்

இந்த நிலையில் அதானி குரூப்-ன் அடுத்த வர்த்தக இலக்குகள் திட்டங்கள் குறித்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் பேசுகையில் சில முக்கியமான திட்டத்தைப் பற்றி விளக்கம் கொடுத்தார்.

டெலிகாம் துறை

டெலிகாம் துறை

அதானி குழுமம் டெலிகாம் துறையில் இறங்குவது குறித்துப் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. எங்களுக்கு நேரடி
டெலிகாம் சேவையில் விருப்பம் இல்லை, டிஜிட்டல் சேவைகள், டோட்டா சென்டர் வர்த்தகம் போன்ற பேக் எண்ட் பிரிவு சேவையில் தான் அதிகப்படியான ஆர்வம் உள்ளது.

 தண்ணீர்

தண்ணீர்

அதானி குழுமம் தற்போது தண்ணீர் பிரிவில் இறங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. தண்ணீர் என்பது எங்களுடைய அனைத்து வர்த்தகத்தையும் இணைக்கும் உயிர் நாடியாக உள்ளது. இதனால் எங்களுடைய அடுத்த இலக்குத் தண்ணீர் ஆக உள்ளது.

இன்பரா திட்டங்கள்

இன்பரா திட்டங்கள்

குறிப்பாக இந்தியா முழுவதும் இயங்கி வரும் அதானி குழுமத்தின் இன்பரா திட்டங்களுக்குத் தண்ணீர் மிகவும் முக்கியமான ஆதாரமாக உள்ளது. இத்துறை வர்த்தகத்தைக் கட்டமைத்துப் படிப்படியாக மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம், தற்போது கற்றல் மற்றும் ஆய்வு கட்டத்தில் மட்டுமே உள்ளோம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

பணம் இல்லை

பணம் இல்லை

இதேபோல் அதானி குழுமம் அதிகப்படியான கடனில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் தொடர்ந்து நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கைப்பற்றி வருவதால் கையில் போதுமான பணம் இல்லை. இதற்காகத் தான் தற்போது அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகளை 20000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

அதானி ரினியூவபிள் எனர்ஜி

அதானி ரினியூவபிள் எனர்ஜி

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் கிளை நிறுவனமான அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ லிமிடெட், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் எஸ்ஸல் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் 50 சதவீத ஈக்விட்டி பங்குகளை எஸ்ஸல் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

எஸ்கேஎஸ் பவர் நிறுவனம்

எஸ்கேஎஸ் பவர் நிறுவனம்

அதானி குழுமம் சத்தீஸ்கர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை வாங்குவதற்காகக் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது. நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயக்கும் மின்சார உற்பத்தி ஆலை கொண்ட எஸ்கேஎஸ் பவர் நிறுவனம், பாங்க் ஆ பரோடா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளுக்குச் சுமார் 1,900 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளது.

ஹைட்ரஜன் எலக்ட்ரிக் லாரிகள்

ஹைட்ரஜன் எலக்ட்ரிக் லாரிகள்

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் சமீபத்தில் அசோக் லேலண்ட் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பல்லார்ட் பவர் ஆகியவற்றுடன் மைனிங் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தும் கனரக வாகனங்களான லாரிகளை ஹைட்ரஜன் எரிவாயு மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தைத் தயாரிக்கப் புதிய திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gautam Adani owned Adani Enterprises entering into water segment

Gautam Adani owned Adani Enterprises entering into water segment
Story first published: Thursday, January 19, 2023, 21:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X