தினமும் ரம்மி விளையாடும் கௌதம் அதானி.. சுவாரஸ்யமான பர்சனல் லைப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி அதிரடி வர்த்தக முடிவுகளை எடுப்பதில் வல்லவர், குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து இந்திய வர்த்தகச் சந்தை வியக்க வைத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்து அதிகம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கௌதம் அதானி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

60 வயதான கௌதம் அதானி Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது பிரதமர் மோடி உடனான நட்பு, வர்த்தகம், வளர்ச்சி, முதலீடுகள், கனவு திட்டம், அதானி குழுமத்தின் எதிர்காலம் எனப் பல விஷயங்களைப் பேசினார். இதை விட முக்கியமாகக் கௌதம் அதானி இந்த இண்டர்வியூவ்-ல் தனது குடும்ப, பேரப்பிள்ளைகள், பர்சனல் லைப் குறித்து அதிகம் பேசியுள்ளது.

கௌதம் அதானி வாழ்க்கையை புரட்டிப்போட்ட 2 சம்பவம்.. மறக்க முடியாத 26/11 தாஜ் ஹோட்டல் தாக்குதல்..!கௌதம் அதானி வாழ்க்கையை புரட்டிப்போட்ட 2 சம்பவம்.. மறக்க முடியாத 26/11 தாஜ் ஹோட்டல் தாக்குதல்..!

கௌதம் அதானி செல்ல பெயர்

கௌதம் அதானி செல்ல பெயர்

கௌதம் அதானி தன்னுடைய நண்பர்கள் தன்னை Toofani எனச் செல்லமாக அழைப்பார்களாம். ஆனால் உண்மையில் தன்னுடைய நண்பர்கள் தன்னைப் பல பெயர்களைக் கொண்டு அழைப்பார்கள் எனக் கூறுகிறார் கௌதம் அதானி.

ப்ரீத்தி முதல் சந்திப்பு

ப்ரீத்தி முதல் சந்திப்பு

திருமணத்திற்கு முன் தான் முதன்முதலில் ப்ரீத்தி-யை சந்தித்தபோது, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும், நான் பொதுவாகவே மிகவும் கூச்ச சுபாவமுள்ள நபர், நான் படிக்காதவன், அவள் ஒரு மருத்துவர், அதனால் இருவருக்கும் அடிப்படையிலேயே பொருத்தம் இல்லாமல் இருந்தது என்று கௌதம் அதானி தனது மனைவியை முதல் முறை சந்தித்த போது சம்பவம் குறித்துக் கூறினார்.

ரம்மி

ரம்மி

கௌதம் அதானி தனது மனைவியுடன் இரவில் ரம்மி பப்லு விளையாட்டை விளையாடுவார் என இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம், நான் இரவில் ப்ரீத்தியுடன் ரம்மி பப்லு விளையாட்டை விளையாடுவேன். நான் 8-10 ஆட்டங்களில் விளையாடுகிறேன் என்றால் பெரும்பாலான நேரங்களில் பீர்த்தி தான் வெற்றி பெறுவார் என்று அதானி நிகழ்ச்சியில் கூறினார்.

அகமதாபாத்

அகமதாபாத்


கௌதம் அதானி வாரத்தில் மூன்று நாட்கள் தான் அகமதாபாத்திற்கு வெளியில் இருப்பதாகவும், நான்கு நாட்கள் மட்டுமே அகமதாபாத்தில் இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

ஆபீஸ் டைம்

ஆபீஸ் டைம்

அகமதாபாத்தில் இருக்கும் போது அலுவலகத்திற்குக் காலை 10:30 முதல் 11 மணிக்குள் செல்வார் என்றும், நான் இரவு 11 அல்லது 12 மணிக்கு தான் அலுவலகத்தை விட்டு வரும் காரணத்தால் காலையில் தாமதமாகச் செல்லும் வழக்கத்தைக் கொண்டு உள்ளேன் என இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டைனிங் டேபிள்

டைனிங் டேபிள்

கௌதம் அதானி தினமும் காலை வழக்கம் என்னவென்றால், காலை 6:30 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வார். அதன் பிறகு, அவர் தனது மனைவி பிரித்தி அதானி, குழந்தைகள் மற்றும் பேத்திகளுடன் 2 முதல் இரண்டரை மணி நேரம் டைனிங் டேபிளில் பேசி, சிரித்து மகிழ்வார் என்று இப்பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன் பின்பு செய்தித்தாள்களையும் படிப்பார்.

மதிய உணவு நேரம்

மதிய உணவு நேரம்

இதேபோல் மதிய உணவு நேரத்தில் அலுவலகத்தில் இருந்தாலும், அதானி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சாப்பாட்டு அறையில் இருக்க வேண்டும் என்பது ரூள் ஆகக் கடைபிடிப்பதாகவும் கௌதம் அதானி இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த மதிய உணவு நேரத்திலும் குடும்பத்துடன் இருப்பதைத் தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

 Gautam Adani அரசு நிறுவன பங்குகளை வாங்க திட்டம்.. ஆனா ..! Gautam Adani அரசு நிறுவன பங்குகளை வாங்க திட்டம்.. ஆனா ..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gautam Adani Play rummy paplu with his wife Priti; First time meeting with Priti adani

Gautam Adani Play rummy paplu with his wife Priti; First time meeting with Priti adani
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X