23.9% ஜிடிபி சரிவிலும் 3.4% வளர்ச்சி காட்டிய விவசாய GVA! அது என்ன GVA?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020 - 21 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில் (ஜூன் 2020) இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இந்த ஜூன் 2020 காலாண்டில், ஜிடிபி-யைக் கணக்கிட மிகவும் முக்கியமான தரவாக இருக்கும் ஜிவிஏவும், ஒரு பெரிய சரிவைக் கண்டு இருக்கிறது. ஜிவிஏ-வை ஆங்கிலத்தில் Gross Value Added (GVA) என்பார்கள்.

23.9% ஜிடிபி சரிவிலும் 3.4% வளர்ச்சி காட்டிய விவசாய GVA! அது என்ன GVA?

இந்த ஜிவிஏ என்பதும் ஒரு உற்பத்திக் குறியீடு தான். ஜிவிஏ அதிகரித்தால் ஜிடிபியும் அதிகரிக்கும், ஜிவிஏ சரிந்தால், ஜிவிஏவும் சரியும்.

ஜிவிஏவில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்றால், அந்த துறைகளில் உற்பத்தி குறைந்து இருக்கிறது என்று பொருள்.

கடந்த ஜூன் 2019 உடன், ஜூன் 2020 ஜிவிஏ-வை ஒப்பிட்டால், இந்தியாவின் ஜிவிஏ 22.8 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

ஜூன் 2020 காலாண்டில், தொழில் துறை ஜிவிஏ 38.1 % சரிந்து இருக்கிறது. சேவைத் துறையின் ஜிவிஏ 20.6 % சரிந்து இருக்கிறது. உற்பத்தித் துறையின் ஜிவிஏ 39.3 % சரிந்து இருக்கிறது.

இன்னும் ஒவ்வொரு துறையாகப் உள்ளே போய்ப் பார்த்தால், கடந்த ஜூன் 2020 காலாண்டில் விவசாயத்தின் ஜிவிஏ மட்டுமே 3.4 % ஏற்றம் கண்டு இருக்கிறது.

மற்ற எல்லா துறைகளின் ஜிவிஏவும் பெரிய சரிவைக் கண்டு இருக்கின்றன.

இந்தியாவில் பல கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்த கட்டுமானத் துறை (Construction) அதிகபட்சமாக, 50.3 % ஜிவிஏ சரிவைக் கண்டு இருக்கிறது.

வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு போன்ற துறைகளை எல்லாம், ஜிவிஏ கணக்கிட அரசு ஒன்றாக சேர்த்து இருக்கிறார்கள். கட்டுமானத்துக்குப் பிறகு, இந்த பிரிவின் ஜிவிஏ 47 % சரிவைக் கண்டு இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் ஜிவிஏ 39.3 % சரிவைக் கண்டு இருக்கிறது. அதன் பின் சுரங்கம் மற்றும் க்வாரி சார்ந்தவைகள் 23.3 % சரிவைக் கண்டு இருக்கின்றன.

இந்தியாவில் விவசாயத்துக்குப் பிறகு அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் துறை என்றால், அது ரியல் எஸ்டேட், கட்டுமானம், உற்பத்தி போன்ற துறைகள் தான். இந்த ஜூன் 2020 ஜிவிஏ தரவுகள் படிப் பார்த்தால், இந்த மூன்று துறைகளின் ஜிவிஏவும் பெரிய சரிவைக் கண்டு இருக்கின்றன.

ஆக, இந்த துறைகளில் வேலை பார்த்தவர்களுக்கு, வழக்கம் போல வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்காது என புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் பொருளாதாரத்தின் நுகர்வும் குறைந்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GDP: Agriculture GVA show 3.4 percent growth amidst 23.9 percent GDP fall what is GVA?

GDP in depth: what is GVA? The agriculture sector Gross value added for June 2020 grown 3.4 percent. Construction sector GVA fall around 50.3 percent.
Story first published: Monday, August 31, 2020, 19:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X