கூகுள்-ஐ ஆட்டம் காண வைத்த 2K கிட்ஸ்.. இனி டிக்டாக், இன்ஸ்டா தான் எல்லாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் சர்ச் இன்ஜின் சேவை தளமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் அஸ்திவாரத்தை மொத்தமாக ஆட்டிவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சுந்தர் பிச்சை ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த பிரச்சனையால் அதிகளவிலான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் கூகுளின் அஸ்திவாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் செய்தி சுந்தர் பிச்சைக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன நடந்தது.. வாங்க ஒரு சுவாரஸ்யமான மாற்றத்தைப் பார்ப்போம்...

இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..? இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?

மில்லினியல் தலைமுறை

மில்லினியல் தலைமுறை

உலகில் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பெயர் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும், உதாரணமாக 1981 - 1996 காலகட்டங்களில் பிறந்தவர்களை நாம் மில்லினியல்ஸ் (Millennials) என்று அழைக்கிறோம். இவர்கள் தான் தற்போது உலகின் டெக் துறையை வடிவமைத்து அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு வந்த முக்கியமான தலைமுறையினர்.

ஜெனரேஷன் Z தலைமுறை

ஜெனரேஷன் Z தலைமுறை

இதேபோல் மில்லினியல்ஸ்-க்கு அடுத்த வரும் தலைமுறை தான் ஜெனரேஷன் Z, 1997 முதல் 2012 வரையில் பிறந்தவர்கள் தான் இந்தப் பிரிவில் வருகின்றனர். இன்று உலகளவில் வேகமாக வளரும் டெக் மற்றும் இண்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு Generation Z தான் முக்கிய டாக்கெட்.

25 வருட வர்த்தகச் சந்தை
 

25 வருட வர்த்தகச் சந்தை

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தலைமுறை தான் அடுத்த 20 - 25 வருட வர்த்தகச் சந்தையைத் தீர்மானிக்கப் போகிறது. இதனால் இந்தத் தலைமுறை மக்களை வாடிக்கையாளர்களாகப் பெறவில்லை என்றால் நிறுவனங்கள் வர்த்தகத்தை மூடிவிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தான்.

இந்தச் சூழ்நிலையில் தான் கூகுள் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூகுள் நிறுவனத்திற்கே அதிர்ச்சி அளித்துள்ளது.

 

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வர்த்தகம் சரியான பாதைக்குச் செல்கிறதா என்பதை உறுதி செய்யத் தன்னிடம் இருக்கும் பல நூறு கோடி வாடிக்கையாளர்களின் தரவுகளைச் சரி பார்க்கும். அந்த வகையில் கூகுள் இன்டர்நல் டேட்டா முக்கியமான டேட்டாவை கக்கியுள்ளது.

 40 சதவீத இண்டர்நெட் வாடிக்கையாளர்கள்

40 சதவீத இண்டர்நெட் வாடிக்கையாளர்கள்

ஆம், ஜெனரேஷன் Z பிரிவில் இருக்கும் 40 சதவீத இண்டர்நெட் வாடிக்கையாளர்கள், ஒரு விஷயத்தைத் தேடவும், மேப்-ஐ செக் செய்யவும் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தாமல் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இது கட்டாயம் அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் தான்.

பிரபாகர் ராகவன்

பிரபாகர் ராகவன்

இதை உறுதி செய்யும் வகையில் கூகுள் உயர் துணை தலைவரான பிரபாகர் ராகவன் Fortune Brainstorm Tech மாநாட்டில் பேசும் போது, 40 சதவீத ஜெனரேஷன் Z வாடிக்கையாளர்கள் தற்போது அருகில் உள்ள நல்ல உணவகத்தைத் தேடுவதற்குக் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்துவது இல்லை, டிக்டாக் அல்லது இன்ஸ்டாகிராம்-ஐ தான் பயன்படுத்துகிறார்கள் எனக் கூகுள் இன்டர்நல் டேட்டா கூறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

டிக்டாக், இன்ஸ்டாகிராம்

டிக்டாக், இன்ஸ்டாகிராம்

இதன் மூலம் டிக்டாக், இன்ஸ்டாகிராம் இனி வெறும் வீடியோ, போட்டோ-வை பகிரும் தளமாக மட்டும் இருக்காது சர்ச் இன்ஜின் நிறுவனம், மேம்ஸ் நிறுவனம் எனப் பல பிரிவில் இயக்க துவங்கும். இது கூகுள் நிறுவனத்திற்கும் பெரும் போட்டியை உருவாக்குவது மட்டும் அல்லாமல் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டம் காண வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

Generation Z மக்கள் (2k kids)

Generation Z மக்கள் (2k kids)

உலகம் முழுவதும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கேலி கிண்டல் செய்து வரும் வேளையில், இவ்விரு நிறுவனங்கள் தான் புதிய வரலாற்றையும், வர்த்தகத்தையும் உருவாக்கப் போகிறது. இதுவரை கூகுள் நிறுவனத்தை அசைக்க முடியாமல் இருந்து வேளையில் தற்போது Generation Z மக்கள் டிக்டாக், இன்ஸ்டா மூலம் மொத்தத்தையும் மாற்றியுள்ளனர்.

ஜியோ-வை வீழ்த்த கௌதம் அதானி-யின் தளபதி சுவேஷ்.. யார் இவர் தெரியுமா..?! ஜியோ-வை வீழ்த்த கௌதம் அதானி-யின் தளபதி சுவேஷ்.. யார் இவர் தெரியுமா..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Generation Z shakes Google Empire; Tiktok, Instagram turned out New search Engine, Maps

Generation Z shakes Google Empire; Tiktok, Instagram turned out New search Engine, Maps கூகுள்-ஐ ஆட்டம் காண வைத்த 2K கிட்ஸ்.. இனி டிக்டாக், இன்ஸ்டா தான் எல்லாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X