ஜெர்மன் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான Lufthansa கொரோனா காரணமாக அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து நிற்கிறது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த 1 வருடத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வராது என்கிற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது சர்வதேச விமானப் போக்குவரத்து.
இதன் எதிரொலியாக இன்று Lufthansa நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி குறைவாக இருக்கும் எனக் கணிப்பு இருப்பதால், செலவுகளைக் குறைக்க நிறுவனத்தில் இருந்து 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் Lufthansa ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Lufthansa
ஐரோப்பியாவில் இருந்து உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விமானச் சேவை அளித்து வரும் மாபெரும் நிறுவனமான Lufthansa கொரோனா வந்த பின்பு 100 விமானப் பயணங்களுக்குக் குறைவான எண்ணிக்கையில் தான் சேவை கொடுத்துள்ளது. இந்நிலையில் நிர்வாகத்தை மேம்படுத்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
20000 ஊழியர்கள்
விமானச் சேவை முடங்கிய காரணத்தால் Lufthansa வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக Lufthansa நிர்வாகம் தனது 1,35,000 ஊழியர்களில் 16 சதவீதம் அதாவது 20,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விமானம்
Lufthansa நிறுவனத்தில் சுமார் 763 விமானங்கள் உள்ளது, இதில் 700 விமானங்கள் தரையில் நிற்கிறது. கொரோனா காரணமாகப் பல நாடுகள் விமான எல்லைகளை மூடியுள்ள நிலையிலும், விமானப் பயணிகள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் சேவையை விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது.
நஷ்டம்
ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக இருக்கும் Lufthansa முதல் முறையாக 2.1 பில்லியன் யூரோ நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தைக் காக்கவும், வர்த்தகத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் இந்நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளில் ஜெர்மன் நிறுவன முதலீடு செய்து சுமார் 9 பில்லியன் யூரோ நிதியைப் பெற்றுள்ளது.
பங்கு மதிப்பு
முதல் முறையாக நஷ்டம், வர்த்தகச் சரிவு, இத்துறையின் வர்த்தக மீட்பு கணிப்பு ஆகியவை Frankfurt's Dax 30 குறியீட்டில் Lufthansa நிறுவனப் பங்கு மதிப்பு அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications