இந்த நேரத்தில் 'இது' அவசியமா..? ஜெர்மனி அரசு செய்ததைப் பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெர்மனி பொருளாதாரம் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் ரஷ்யா.

உலக நாடுகள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்த நிலையில் ஜெர்மனியும் கடுமையான தடைகளை விதித்தது.

இதற்குப் பழிவாங்கும் விதமாக விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் விநியோகத்தைப் படி படியாகத் தற்போது முற்றிலுமாகத் தடை செய்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜெர்மனி கஞ்சா பயன்படுத்துவதைச் சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

ரஷ்யா-வுக்கு செக்.. திட்டம் போட்டு தூக்கிய ஜெர்மனி.. புதின் திட்டம் என்ன..?! ரஷ்யா-வுக்கு செக்.. திட்டம் போட்டு தூக்கிய ஜெர்மனி.. புதின் திட்டம் என்ன..?!

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான திட்டங்களை ஜெர்மனி அரசு புதன்கிழமை முதல் எடுத்து வருகிறது. ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அரசால் உறுதியளிக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் ஐரோப்பாவில் கஞ்சா-வை சட்டப்பூர்வமாக்கும் முதல் நாடுகளில் ஜெர்மனி ஒன்றாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

பொழுதுபோக்கு நோக்கங்களுக்கு மட்டும்

பொழுதுபோக்கு நோக்கங்களுக்கு மட்டும்

இதைச் சாத்தியப்படுத்தும் விதமாகத் தற்போது ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், பெரியவர்கள் (adults- வயது வரம்பு அறிவிக்கப்படவில்லை) பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகக் கஞ்சாவை கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் மற்றும் நுகர்வு முறை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தத் தேவையான சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான ஆய்வு அறிக்கையை அந்நாட்டின் அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

 20 முதல் 30 கிராம் கஞ்சா

20 முதல் 30 கிராம் கஞ்சா

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கினால் கட்டாயம் கடுமையான விநியோகம் மற்றும் நுகர்வு முறை கட்டுப்பாடுகள் அவசியம் இல்லையெனில் மக்களையும், நாட்டையும் காப்பாற்ற முடியாது. இதன் காரணமாகப் பர்சனல் பயன்பாட்டுக்காக 20 முதல் 30 கிராம் வரையிலான கஞ்சாவைப் பொழுதுபோக்கிற்காக வாங்கவும் மற்றும் வைத்திருப்பது சட்டப்பூர்வமாக்கப்பட உள்ளது.

கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனை

மேலும் இந்தக் கஞ்சா விற்பனையை அரசு அனுமதி பெற்ற கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட உள்ளது. ஐரோப்பிய யூனியனில் ஏற்கனவே மால்டா-வில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்ட நிலையில் 2வது நாடாக ஜெர்மனி உருவாக உள்ளது.

 வரி

வரி

அனைத்திற்கும் மேலாக ஜெர்மனி மதுபானம், சிகரெட் போல் கஞ்சா விற்பனை-யிலும் அதிகப்படியான வரி விதிக்கத் திட்டமிட்டு உள்ளது. இது ஜெர்மனி பொருளாதாரம், வர்த்தகம் மோசமாக இருக்கும் நிலையில் இப்புதிய வரி அரசுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்க வாய்ப்புகள் உள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடுகள்

ஐரோப்பிய யூனியன் நாடுகள்

ஐரோப்பிய யூனியன் நாடுகள் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கு ரஷ்யா-வை மட்டுமே நம்பியிருந்த நிலையில், இந்தப் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடையின் காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருள் ரஷ்யாவிடம் இருந்து பெற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.

ஜெர்மனி பாதிப்பு

ஜெர்மனி பாதிப்பு

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனியில் பல தொழிற்சாலை போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஜெர்மனி நாட்டின் உற்பத்தி, வர்த்தகம், வருமானம் என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

குளிர்காலம்

குளிர்காலம்

இந்த நிலையில் ஜெர்மனியில் குளிர்காலம் துவங்கிய நிலையில் எரிவாயு மற்றும் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள வேலையில் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Germany legalizing cannabis very soon; Olaf Scholz promised, adults can possess 20-30gms of recreational cannabis

Germany legalizing cannabis very soon; Olaf Scholz promised, adults can possess 20-30gms of recreational cannabis
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X