அசத்தல் லாபத்தில் கிளென்மார்க் பார்மா.. 7% ஏற்றத்தில் கிளென்மார்க் பங்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மருந்து உற்பத்தி நிறுவனமான கிளென்மார்க் பார்மா நிறுவனம் அதன் ஜூன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ள நிலையில், அதன் பங்கு விலையானது இன்று காலை நேர வர்த்தகத்தில் 7% ஏற்றம் கண்டு இருந்த நிலையில், தற்போது 2.44 மணியளவில் 4.20% அதிகரித்து 479 ரூபாயாக காணப்படுகிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் தனது மருந்துகளை சப்ளை செய்து வந்த இந்த நிறுவனம், தற்போது ஆப்பிரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. பொதுவான மருந்து மற்றும் செயலில் உள்ள மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தியாளர் என பலவகையிலும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

அசத்தல் லாபத்தில் கிளென்மார்க் பார்மா.. 7% ஏற்றத்தில் கிளென்மார்க் பங்கு..!

இன்று வெளியான அதன் காலாண்டு முடிவினையடுத்து, 6.96% பங்கு ஏற்றம் கண்டு, 508.50 ரூபாயாகவும், இதே என்எஸ்இ-யில் 7% அதிகரித்து 509 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது.

பார்மா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிறுவனம் ஜூன் காலாண்டில் இரண்டு மடங்கு லாபம் கண்டுள்ளது. அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 254.04 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் மருந்து விற்பனையானது முதல் காலாண்டில் மருந்து விற்பனையானது 779.89 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னர் 752.21 கோடி ரூபாயாக விற்பனை இருந்தது இருந்தது. இது 3.68% அதிகமாகும்.

இதற்கிடையில் ஒருங்கிணைந்த வருவாய் ஆனது 2,344.78 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னர் 2,322.87 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போதைய தொற்று நோயால் அனைத்து சந்தைகளிலும் இது ஒரு சவாலான காலாண்டாகும். கடினமான இயக்க சூழல் இருந்தபோதிலும், நிறுவனத்திற்கான விற்பனை வளர்ச்சியினை பதிவு செய்ய முடிந்தது என்று கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் தலைவரும், எம்டியுமான கிளென் சல்தான்ஹா வெள்ளிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்த நிறுவனம் அனைத்து முனைகளிலும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இதனால் நிதியாண்டின் மீதமுள்ள பகுதிக்கு இந்த முயற்சிகளைத் தொடருவோம் என்று சல்தான்ஹாவும் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு லேசான மற்றும் மிதமான சிகிச்சைக்காக ஃபாவிபிராவிரை அறிமுகப்படுத்திய, நாட்டின் முதல் நிறுவனம் கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Glenmark pharma jumps 7% after result announcements

Glenmark pharma reported a net profit of Rs.254.04 crore in june quarter, Glenmark shares jumps 7% on over 2 fold rise in first quarter.
Story first published: Monday, August 17, 2020, 15:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X