2ஆம் உலக போருக்கு பின் நடந்த பெரும் மாற்றம்.. IMF ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக வரலாற்றில் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பின் தங்கிய முக்கியமான தருணங்களில் 2ஆம் உலகப் போர் மிக முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையைச் சமாளிக்க இந்தியா முதல் அமெரிக்கா வரையில் அதிகளவில் கடன் வாங்கி வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வந்தது. இப்படி 2ஆம் உலகப் போருக்கு பின்பு 2020ல் உலக நாடுகள் அதிகளவிலான கடனை வாங்கிக் குவித்துள்ளது.

குறிப்பாகப் பணக்கார நாடுகள் தான் அதிகளவிலான கடனை வாங்கியுள்ள என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

 IPPB வங்கியில் 10,000த்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யக் கூடுதல் கட்டணம்.. ஜனவரி 1 முதல் அமல்..! IPPB வங்கியில் 10,000த்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யக் கூடுதல் கட்டணம்.. ஜனவரி 1 முதல் அமல்..!

 கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்த நிலையில் அதில் இருந்து மீண்டு வருவதற்காக உலக நாடுகள் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்தது, இதேபோல் உலக மக்களும் தங்களது அடிப்படைத் தேவைக்கும், இதர செலவுகளுக்கும் அதிகப்படியான கடனை வாங்கினர்.

 226 டிரில்லியன் டாலராக

226 டிரில்லியன் டாலராக

இதன் எதிரொலியாக உலக நாடுகளின் கடன் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 226 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இது என்ன பெரிய விஷயம் என நீங்கள் கேட்பது புரிகிறது, 226 டிரில்லியன் டாலர் கடன் என்பது உலக நாடுகளின் மொத்த ஜிடிபியில் 256 சதவீதம் அதிகமாகும்.

 2.5 மடங்கு கடன்

2.5 மடங்கு கடன்

இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய மொத்த சொத்து மதிப்பை விடவும் 2.5 மடங்கு கடன் உங்கள் தலையில் இருந்தால் என நிலவரமோ அதுதான் தற்போது உலக நாடுகளின் நிலவரமும்.

 கோவிட் போராட்டம்

கோவிட் போராட்டம்

இந்தத் திடீர் கடன் உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்காகவும், கொரோனா-வை எதிர்த்துப் போராடுவதற்காகவும் அதிகளவில் செலவிடப்பட்டதால் கடன் அளவு அதிகரித்துள்ளது.

 90 சதவீதம் உயர்வு

90 சதவீதம் உயர்வு

இதுமட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், நிறுவனங்கள் திவால் ஆகாமல் தடுப்பதற்கும் உலக நாடுகளின் அரசுகள் அதிகளவில் செலவிடப்பட்டு உள்ளது. பணக்கார நாடுகளின் கடன் அளவு சுமார் 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் பொது மற்றும் தனியார் கடன் அளவுகளும் அதிகரித்துள்ளது.

 மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

இந்தத் திடீர் கடன் உயர்வு உலக நாடுகளில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக நிதி நிலைமைகள் மோசமடையச் செய்யும் என ஐபிஎம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைச் சரி செய்யும் போராட்டத்தில் தான் தற்போது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global debt increase to $226 trillion in 2020 biggest one year jump since World War II

Global debt increase to $226 trillion in 2020 biggest one year jump since World War II 2ஆம் உலகப் போருக்குப் பின் நடந்த பெரும் மாற்றம்.. IMF கொடுத்த எச்சரிக்கை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X