ரெசிஷன் நிச்சயம், ஆனா ஒரு குட் நியூஸ்.. மாத சம்பளக்காரர்கள் நிம்மதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பொருளாதாரம் ரெசிஷனை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது, அதே நேரத்தில் உலக நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் அதிகப் பணவீக்கத்தைக் குறைக்கத் தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றனர், ஆனாலும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் நடத்திய பொருளாதார வளர்ச்சி குறித்த முக்கியக் கருத்துக்கணிப்பில் உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளுக்கான வளர்ச்சி விகித கணிப்புகளைப் பொருளாதார வல்லுநர்கள் மீண்டும் குறைத்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாகப் பொருளாதார வல்லுநர்கள் உலக நாடுகள் இதுவரை பார்த்திடாத வகையில் பாதிப்பு இருக்கும் ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் உள்ளது. இது கட்டாயம் சாமானிய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎம் கடுமையான அறிவிப்பு.. ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி.. இனி மூன்லைட்டிங் ரிஸ்க்..!ஐபிஎம் கடுமையான அறிவிப்பு.. ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி.. இனி மூன்லைட்டிங் ரிஸ்க்..!

ரெசிஷன்

ரெசிஷன்

உலக நாடுகளில் ஏற்கனவே ரெசிஷனில் இருக்கும் அல்லது ரெசிஷனுக்குச் செல்லும் பெரும்பாலான பெரிய பொருளாதார நாடுகள் முந்தைய ரெசிஷன் காலகட்டத்தை ஒப்பிடும்போது குறைந்த வேலைவாய்ப்பின்மை உடன் இருப்பது என்பது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது என இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

40 ஆண்டுகள்

40 ஆண்டுகள்

உண்மையில் சமீபத்திய கருத்துக்கணிப்புக் குறைந்தது நான்கு தசாப்தங்களில் அதாவது 40 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதங்களுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் இடையேயான இடைவெளியை மிகவும் சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

பொதுவாகப் பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் இழக்க நேரிடும், உதாரணமாக 2000 டாட் காம் பபுள், 2008 சர்வதேச நிதி நெருக்கடி, 2020 கொரோனா பாதிப்புக் காலகட்டத்தில் அதிகப்படியான பொருளாதார வீழ்ச்சி, அதிகப்படியான வேலைவாய்ப்பின்மை இருந்தது. ஆனால் தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம் 2023லும் தொடரும்

போராட்டம் 2023லும் தொடரும்

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பணவீக்கத்தைக் குறைக்கத் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. ஆனால் வர்த்தகச் சூழ்நிலையில் தொடர்ந்து மோசமாகும் காரணத்தால் பணவீக்கத்தை இன்று வரையில் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது. இந்தப் போராட்டம் 2023ஆம் ஆண்டிலும் துவங்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

6 மத்திய வங்கிகள் மட்டுமே

6 மத்திய வங்கிகள் மட்டுமே

ரெயூட்டர்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 22 உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கலந்துகொண்டது. இதில் வெறும் 6 மத்திய வங்கிகள் மட்டுமே அடுத்த ஆண்டின் இறுதிக்குள் தனது நிலையான பணவீக்க இலக்கை அடைவோம் எனத் தெரிவித்துள்ளது. ஜூலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 18 மத்திய வங்கிகள் இலக்கை அடைவோம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலையின்மை அளவீடு

வேலையின்மை அளவீடு

ரெயூட்டர்ஸ் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பொருளாதார வல்லுனர்களில் 70 சதவீதம் பேர், அதாவது 257 பேரில் 179 பேர், வரும் ஆண்டில் வேலையின்மை அளவீடு தடாலடியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என வாக்களித்து உள்ளனர்.

குட்நியூஸ்

குட்நியூஸ்

இதனால் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ரெசிஷன் பொருளாதாரத்தைப் பாதித்தாலும் வேலைவாய்ப்பு சந்தைக்குப் பேரழிவை அளிக்காது என்ற பரவலான பார்வை உள்ளது.

பொருளாதார வளர்ச்சி அளவீடு

பொருளாதார வளர்ச்சி அளவீடு

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 25 வரை எடுக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி 47 முக்கியப் பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகள் மற்றும் கணிப்புகளின் படி உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2023 ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட 2.9 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாகக் குறையும். அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global Economy Fall Into Recession sooner or later, but with low unemployment rate says Reuters poll

Global Economy Fall Into Recession sooner or later, but with low unemployment rate says Reuters poll; only 6 economies predicted to reach inflation target by end of 2023, Global growth is forecast to slow to 2.3 percent in 2023 rebound to 3.0 percent in 2024.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X