அவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் விமான சேவைகளுக்கு, கடந்த மார்ச் 22-ம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்களது சேவையினை முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளன.

அவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்!

நாட்டின் முன்னணி விமான நிறுவனமான கோஏர் நிறுவனம் அரசின் அறிவிப்பு வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அவசரகால சேவைகளை மேற்கொள்வதற்கும் குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கும் அரசாங்கத்திற்கு தனது விமானத்தினை அனுப்பவும், தனது விமான பணியாளர்களை அனுப்புவதற்கும் முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது நாட்டில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானங்களை இயக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் DGCA அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் இயக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் வாடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறைந்த கட்டணத்தில் தனது விமான சேவையை வழங்கி வரும் நிலையில், விமானிகள் மற்றும் கேபின் குழுவினர், விமான நிலைய ஊழியர்களுக்கு அவசரகால சேவைகளை மேற்கொள்வதற்கும், குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கும் முன்வந்துள்ளது என்றும் அந்த நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கோஏர் சமர்பித்த கடிதத்தில், அரசாங்கத்தின் சார்பாக மருந்துகள், உணவு தானியங்கள் மற்றும் மனிதவளம் போன்ற அத்தியாவசிய சேவைகளை அனுப்பும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் என அனைத்து சேவைகளையும் வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் கோஏர் நிறுவனம் எப்போதுமே நிறுவனம் அரசு அறிவித்த முயற்சிகளுக்கு விமான நிறுவனம் முழு ஆதரவளிக்கிறது. உண்மையில் பிரதமரின் அறிவிப்புக்கு பதிலளித்த ஒரே விமான நிறுவனம் கோஏர் மட்டுமே. ஆக பிரதமரின் வேண்டுகோள் படி நாங்கள் மார்ச் 22, 2020 முதல் எங்கள் விமான சேவையினை நிறுத்தி வைத்துள்ளோம்.

 

நாங்கள் மக்களின் ஆரோக்கியத்தில் கருத்தில் கொண்டுள்ளோம். இந்த உலகளாவிய தொற்று நோயினை எதிர்த்துத் போராடும் போது, உலகெங்கிலும் உள்ள அனைவரும் முன்னோடியில்லாத சவாலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு அவசர சேவையினை வழங்க கோஏர் தயாராக உள்ளது.

அகமாதாபாத், ஐஸ்வால், பாக்டோகிரா, பெங்களுரு, புபனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, கோவா, கவுகாத்தி, ஹைதாராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சின், கொல்கத்தா, கன்னூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா. போர்ட் பிளேர், புனே, ஸ்ரீநகர், ராஞ்சி, பாங்காக், குவைத், மஸ்கட் மற்றும் வாரனாசி, பூகெட் அபு தாபி, துபாய், குவைத், தம்மம் உள்ளிட்ட பல இடங்களுக்கு தனது விமான சேவைகளை செய்து வருவது குறிபிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GoAir Offers Flights, Crew to Government for Emergency Services amid coronavirus Lockdown

GoAir said it offered government its aircraft, crew and airport staff to carry out emergency services and repatriation of citizens.
Story first published: Friday, March 27, 2020, 20:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X