கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. உற்சாகத்தில் கடன் வழங்குனர்கள்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை நிபுணர்கள் கூறுவதை போல நாளுக்கு நாள் சிறிது சிறிதாக ஏற்றம் கண்டு வருகின்றது. போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்களின் கணிப்பினை போல அவுன்ஸுக்கு 3000 டாலர்களை தொட்டுவிடும் போல.

அதிகரித்து வரும் கொரோனா மற்றும் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், பணவீக்கம் இவற்றிற்கு இடையே, பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை பட்டையை கிளப்பிக் கொண்டு வருகின்றது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்து வந்து கொண்டுள்ளது.

அதெல்லாம் சரி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தால், கடன் வழங்குனர்களுக்கு என்ன பயன்? வாருங்கள் பார்க்கலாம்.

6 மாதத்தில் 40% லாபம் கொடுத்த தங்கம்..!

கொரோனாவால் பாதிப்பு
 

கொரோனாவால் பாதிப்பு

கொரோனா காலத்தில் மாடிவீட்டு அண்ணாச்சி முதல் ரோட்டுக்கடை உரிமையாளர்கள் வரை, பெரும் பின்னடைவை சந்தித்தனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்பினைக் கண்டனர். இன்னும் ஒரு பகுதியினர் அடிப்படை தேவைகளுக்கே கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தங்கள் கையில் இருக்கும் நகைகளை அடகு வைத்தும், விற்றும் செலவுகளை செய்து வந்தனர். இதனால் மறுபுறம் நகைக்கடன் வழங்குனர்கL வலுவான வளர்ச்சியினை பெற்றுள்ளனர்.

சிறப்பான கடன் வளர்ச்சி

சிறப்பான கடன் வளர்ச்சி

குறிப்பாக முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான வளர்ச்சியினை காட்டியுள்ளன. மணப்புரம் பைனான்ஸ் கடந்த செப்டம்பர் காலாண்டில் 21 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்தது. ஏனெனில் அசெட் மதிப்பு, கடன் வளர்ச்சி ஆரோக்கியமானதாகவும் இருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த மோசமான கடன் மதிப்பு அதன் புத்தகத்தில் 1.11% ஆகும்.

தங்க கடன் வளர்ச்சி

தங்க கடன் வளர்ச்சி

எப்படி இருந்தாலும் தங்க கடன் வழங்குனர்களின் எதிர்கால லாபத்தன்மை பெரும்பாலும், அவர்களின் வளர்ச்சி விகிதங்களைக் குறிக்கிறது. இந்த நிலையில் மணப்புரம் ஃபைனான்ஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள், செப்டம்பர் காலாண்டில் தங்க கடன்கள் 29.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

நகைக்கடன் அதிகரிப்பு
 

நகைக்கடன் அதிகரிப்பு

இதே முத்தூட் பைனான்ஸ் 32 சதவீத வளர்ச்சியுடன் காணப்படுகிறது. இது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த காலாண்டு வளர்ச்சியாகும். இந்தியர்கள் பெரும்பாலும் தங்களது தங்கத்தினை அடகு வைத்து, கடன் வழங்குனர்களிடம் கடன் வாங்குகின்றனர். உண்மையில் வங்கிகள் கூட சமீபத்தில் நகைக் கடன்களை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவில் 2020ம் ஆண்டில் தங்க விலையானது, இதுவரை சுமார் 30 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இது நகைக் கடன் வளர்ச்சியினை தூண்டுகிறது.

கடன் வளர்ச்சி ஒப்பீடு

கடன் வளர்ச்சி ஒப்பீடு

கடந்த 2020ம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் மணப்புரம் நிறுவனத்தின் நகைக்கடன் வளர்ச்சி 20.6% வளர்ச்சி கண்டிருந்தது. இதே முத்தூட் பைனான்ஸின் நகைக் கடன் வளர்ச்சி 11% ஆகவும் இருந்தது. இதே நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் மணப்புரம் நிறுவனத்தின் நகைக்கடன் வளர்ச்சி 29.6% வளர்ச்சி கண்டுள்ளது. இதே முத்தூட் பைனான்ஸின் நகைக் கடன் வளர்ச்சி 32% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே முதல் காலாண்டில் மணப்புரம் நிறுவனத்தின் நகைக்கடன் வளர்ச்சி 33.1% வளர்ச்சி கண்டிருந்தது. இதே முத்தூட் பைனான்ஸின் நகைக் கடன் வளர்ச்சி 15% ஆகவும் வளர்ச்சி கண்டிருந்தது.

கொரோனாவுக்கு முந்தைய நிலை

கொரோனாவுக்கு முந்தைய நிலை

தங்கம் விலை அதிகரிப்புக்கு மத்தியில் பலர் நகைக்கடன் வாங்கினாலும், இந்தியர்கள் திரும்ப செலுத்துவதும் அதிகரித்துள்ளது. ஆக நகைகடன் வழங்குனர்களுக்கு இது நல்ல விஷயமாக இருக்கும். குறிப்பாக முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் செப்டம்பர் காலாண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது.

கவலையளிக்கும் விஷயங்கள்

கவலையளிக்கும் விஷயங்கள்

எனினும் சில கவலையளிக்கும் விஷயங்களும் இங்குள்ளன. தங்கத்தின் விலை நிச்சயமற்றதாக உள்ளது. குறிப்பாக ஒன்று தங்கம் விலை குறையும் அபாயம். தங்க கடன்களை ஆதரிக்கும் பிணையம் குறைந்துவிட்டது உள்ளிட்ட பலவற்றை பட்டியிலிடுகின்றனர் நிபுணர்கள். எனினும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் மிக சிறப்பாக செயல்பட்டுள்ள கடன் நகைக் கடன் தான்.

கடன் வழங்குனர்களுக்கு ஆதரவு

கடன் வழங்குனர்களுக்கு ஆதரவு

அதிலும் மற்ற கடன் வழங்குனர்களுடன் ஒப்பிடும்போது, மணப்புரம் மற்றும் முத்தூட் பைனான்ஸ் சிறப்பான வளர்ச்சியினை கண்டுள்ளன. மற்றவர்கள் பின் தங்கியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

உண்மையில் நகைக்கடனை பொறுத்தவரையில் நகை விலை குறைந்தால் அது, கடன் வழங்குனர்களுக்கு பெரும் பின்னடைவை தரும். ஆனால் பல நிபுணர்களும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், அதற்கேற்றவாறு தங்கம் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றது. ஆக இது நகைக் கடன் வழங்குனர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold loan lenders see strong growth amid yellow metal’s price rises

Gold loan lenders see strong growth amid yellow metal’s price rises, particularly muthoot finance ltd and manapuram finance ltd shown healthy growth in terms of profitability.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X