உலகில் கச்சா எண்ணெய்யை கூட கருப்புத் தங்கம் என்று தான் சொல்வார்கள். நம் கிராம புறங்களில், விலை வாசியை ஒப்பீடு செய்வதற்கு கூட தங்கம் விலையை அடிப்படையாக வைத்து "உங்க அம்மா கல்யாணத்தப்ப பவுன் விலையே 100 ரூவா தான் பாத்துக்க" எனச் சொல்வதைக் கேட்டு இருப்போம்.
தங்கம் ஏழை முதல் பணக்காரன் வரை பலருக்கும், பல விதங்களில் கை கொடுக்கும் ஒரு பிரமாதமான உலோகம். ஆனால் தற்போது தங்கம் விலை தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை நிலவரம் என்ன? தங்கம் விலை சரிவில் வர்த்தகமாவதற்கான காரணங்கள் என்ன? இப்போது தங்கத்தை வாங்கலாமா? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

₹560 சரிந்த 24 கேரட் 10 கிராம் சென்னை தங்கம் விலை
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் கடந்த நான்கு நாட்களுக்கான விலை விவரங்கள் இதோ:
12 அக் 2020 ₹53,310
13 அக் 2020 ₹53,090
14 அக் 2020 ₹52,790
15 அக் 2020 ₹52,750 என தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இந்த நான்கு நாட்களில் 560 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

₹520 இறக்கத்தில் 22 கேரட் 10 கிராம் சென்னை தங்கம் விலை
நம் சிங்காரச் சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின், கடந்த நான்கு நாட்களுக்கான விலை விவரங்கள் இதோ:
12 அக் 2020 ₹48,870
13 அக் 2020 ₹48,650
14 அக் 2020 ₹48,360
15 அக் 2020 ₹48,350 என தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 520 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

MCX தங்கம் விலை
சென்னை ஆபரணத் தங்கம் விலை தான் இப்படி தொடர்ந்து சரிந்து வருகிறது என்றால், எம் சி எக்ஸ் தங்கம் விலை, ஒரு நிலை இல்லாமல் பலத்த ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது. டிசம்பர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,542 ரூபாயில் இருந்து 143 ரூபாய் (0.28 %) விலை சரிந்து 50,399 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

₹708 டவுனில் MCX தங்கம் விலை
எம் சி எக்ஸ் தங்கம் விலை, கடந்த 12 அக்டோபர் 2020 அன்று 51,107 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 13 அக்டோபர் 2020 அன்று 50,245 ரூபாய்க்கும், நேற்று (14 அக் 2020) 50,542 ரூபாய்க்கும் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 50,399 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக தடுமாற்றத்துடன், சரிவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதாகத் தான் தெரிகிறது.

$1,891-ல் சர்வதேச தங்கம்
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் (XAU USD) விலை, நேற்று 1,901.5 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 10 டாலர் (0.52 %) விலை சரிந்து 1,891 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம் (XAU USD). இங்கும் தடுமாற்றம் தெளிவாகத் தெரிகிறது.

1,930 தவறவிட்ட சர்வதேச தங்கம் விலை
கடந்த 09 அக்டோபர் 2020 அன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. சரி அப்படியே மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கிவிடும் என்று பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
12 அக் 2020 $1,922
13 அக் 2020 $1,891
14 அக் 2020 $1,901
தற்போது 1,891 என தடுமாற்றத்துடனேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம் விலை.

USD & ஸ்டிமுலஸ் தடை
அமெரிக்க டாலர் கரன்சியின் மதிப்பு, உலகின் முன்னணி கரன்சிகளின் மதிப்புக்கு எதிராக வலுவடைந்து வருகிறது. அதோடு இப்போதைக்கு ஸ்டிமுலஸ் பேக்கேஜ் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிற செய்தியும் சேர்ந்து கொள்ள, தங்கம் விலையில் தடுமாற்றம் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை. தங்கம் விலை சரிய இது ஒரு முக்கிய காரணம் எனலாம்.

தங்க உற்பத்தி சரியலாம்
மெட்டல்ஸ் ஃபோகஸ் (Metals Focus) என்கிற கன்சல்டன்சி கம்பெனி, இந்த 2020-ம் ஆண்டில் தங்க சுரங்க கம்பெனிகள் 3,368 டன் தங்கத்தை உற்பத்தி செய்யலாம் எனக் கணித்து இருக்கிறது. இது கடந்த 2019-ம் ஆண்டில் உற்பத்தி செய்த தங்கத்தின் அளவை விட 4.6 % குறைவு. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த 2020-ம் ஆண்டில் செய்யும் தங்க உற்பத்தி தான் குறைவானது என்கிறது ராய்டர்ஸ்.

என்ன...? தங்கத்தை வாங்கலாமா?
அமெரிக்க ஸ்டிமுலஸ் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவைகளைப் பொறுத்து தான் தங்கத்தின் விலை போக்கு தெளிவடையும். கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி வரச் செய்யும். தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும். எனவே தங்கம் விலை குறையும் போது எல்லாம், தங்கத்தை வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

$3,000 - $5,000 டாலர் சொன்ன தாமஸ் கப்லன்
கடந்த 2019-ம் ஆண்டிலேயே தங்கம், மீண்டும் விலை அதிகரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை அதிகரிக்கலாம் என ஃபண்ட் மேனேஜர் தாமஸ் கப்லன் சொன்னது இங்கு மீண்டும் நினைவு கூறத்தக்கது. க்ரெடிட் சூசி, கோல்ட் மேன் சாக்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்க, ஜிம் ராஜர்ஸ் போன்றவர்கள், தங்கம் விலை அதிகரிக்கும் எனக் கணித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.