GoMechanic நிதி கணக்கில் மோசடி.. உண்மையை ஒப்புக்கொண்ட அமித்.. ஊழியர்கள் கண்ணீர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் பணிநீக்கம் குறித்த அச்சம் அதிகமாக இருக்கும் வேளையில் GoMechanic என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 70 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

சிகோயா இந்தியா முதலீட்டில் இயங்கும் GoMechanic ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது நிதி கணக்குகளில் பல்வேறு சிக்கல்கள், முறைகேடுகள் இருந்த காரணத்தால் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனது மட்டும் அல்லாமல் தற்போது நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டது.

2022 ஆம் ஆண்டில் ஷார்ட் வீடியோ மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான டிரெல் இதுபோன்ற நிதி முரண்பாடுகள் காரணமாகத் தான் மாட்டிக்கொண்டு வீழ்ச்சி அடைந்தது மறக்க முடியாது.

போன்பே எடுத்த திடீர் முடிவு.. ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் துறையும் குழப்பம்..! #Singapore போன்பே எடுத்த திடீர் முடிவு.. ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் துறையும் குழப்பம்..! #Singapore

GoMechanic நிறுவனம்

GoMechanic நிறுவனம்

குர்கான் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் GoMechanic நிறுவனம் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முதலீட்டை திரட்டும் முயற்சியில் இருந்து வந்த நிலையில், அடுத்தடுத்து நிதி கணக்கில் மோசடி செய்த பிரச்சனைகளில் மாடிகொண்ட காரணத்தால் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனது.

தோல்வி

தோல்வி

புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பல முதலீட்டாளர்களுடனான ஆலோசனைகளின் முக்கியக் கட்டங்களை எட்டிய போதிலும், ஒரு வருடத்திற்கும் மேலாக நிதி திரட்டுவதில் வெற்றி அடையாமல் இருக்கிறது GoMechanic நிறுவனம்.

சிஇஓ அமித் பாசின்

சிஇஓ அமித் பாசின்

தொழில்முனைவோராக, வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளைக் கொண்டு வருகிறோம். மேலும் நிர்வாகம் மற்றும் நிதி நிர்வாகத்தில் கடுமையான தவறுகளைச் செய்தோம், குறிப்பாக நிதி அறிக்கைகள் தொடர்பாகச் செய்த தவறுகளுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்று GoMechanic நிறுவன சிஇஓ அமித் பாசின் லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

டைகர் குளோபல்

டைகர் குளோபல்

2022 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் டைகர் குளோபல் தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதிய முதலீட்டைத் திரட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் GoMechanic ஸ்டார்ட்அப் நிறுவனம் இறங்கியது.

நிறுவன கணக்கு

நிறுவன கணக்கு

இதைத் தொடர்ந்து GoMechanic நிறுவனம் விடா முயற்சியாகப் பல முன்னணி நிறுவனங்கள் உடன் முதலீட்டுக்கான பேச்சுவார்த்தையில் இறங்கியது. ஆனால் ஒவ்வொரு முதலீட்டு ஈர்ப்பு சுற்றிலும் இந்நிறுவன கணக்கில் இருக்கும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

மலேசியாவின் Khazanah

மலேசியாவின் Khazanah

GoMechanic டைகர் குளோபல் தலைமையிலான முதலீட்டுப் பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்த பின்னர் மலேசியாவின் Khazanah உட்படப் பல முதலீட்டாளர்களுடன் சேர்ந்து பெரும் தொகையைத் திரட்ட முடிவு செய்தது. கசானா தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் சாப்ட் பேங்க் பங்குபெற விரும்பியது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு சுற்று

முதலீட்டு சுற்று

ஆனால் இந்த முதலீட்டு சுற்று வெற்றி அடையும் முன்பு வழக்கமான முதலீட்டாளர்களின் ஆய்வுகளில் GoMechanic நிறுவன புத்தகங்களில் கடுமையான முரண்பாடுகள் காணப்பட்டதால், இந்த முதலீட்டுச் சுற்று இனி தொடராது என அறிவிக்கப்பட்டது.

போலி கணக்குகள்

போலி கணக்குகள்

இந்த நிலையில் GoMechanic நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள டைகர் குளோபல் உட்பட அனைத்து முதலீட்டாளர்களும் இந்நிறுவன கணக்குகளையும், தளத்தையும் ஆய்வு செய்த நிலையில் அதன் பல கேரேஜ்கள் போலியானவை, நிதி கணக்குகளில் மோசடிகள், இன்ன பிற சிக்கல்கள் கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் போதுமான நிதி ஆதாரம் இல்லாத நிலையில், வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த புதிய முதலீடுகள் கட்டாயம் தேவை இருக்கும் காரணத்தால் தொடர்ந்து புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்து வந்தது.

பார்த்பே டூ GoMechanic

பார்த்பே டூ GoMechanic

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவில் இளம் தலைமுறையினரால் துவங்கப்படும் நிலையில், வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்தாலும் பார்த்பே முதல் தற்போது GoMechanic நிறுவனம் வரையில் பல நிறுவனங்கள் நிதி மோசடியில் மாட்டிக்கொண்டு வருகிறது.

ஆடம்பர கார், ஆடம்பர சுற்றுலா

ஆடம்பர கார், ஆடம்பர சுற்றுலா

இதேபோல் இந்தியாவில் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் முதலீட்டை ஈர்த்தால் ஆடம்பர கார், ஆடம்பர சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதேபோல் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் போது லாபம் அடையாவிட்டாலும் அதிகப்படியான சம்பளத்தைப் பெற்று வருகின்றனர்.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இதெல்லாம் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணியாக முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் முதலீட்டுச் சந்தையில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் தடுமாறி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சாயம் வெளுக்கத் துவங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GoMechanic founder Amit Bhasin admits errors in financial reporting, layoff 70% of employees

GoMechanic founder Amit Bhasin admits errors in financial reporting, layoff 70% of employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X