ஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் அன்பரசன் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் போதுமான வர்த்தகம் இல்லாத காரணத்தாலும், போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வகும் காரணத்தால் பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது வர்த்தகம், தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி வருகிறது.

 

இந்த வரிசையில் அமெரிக்காவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளில் உற்பத்தியை அடுத்தச் சில காலாண்டுகளில் குறைத்து விட்டு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

 ஃபோர்டு தொழிற்சாலை மூடல்

ஃபோர்டு தொழிற்சாலை மூடல்

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் நகரமாக இருக்கும் சென்னையில் பல வருடங்களாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் இயங்கி வந்த மறைமலைநகர் பகுதியில் இருக்கும் ஃபோர்டு தொழிற்சாலையும், குஜராத் மாநிலத்தில் சனண்ட் பகுதியில் இருக்கும் கார் உற்பத்தி மற்றும் இன்ஜின் தயாரிப்பு பணிகளை அடுத்தச் சில மாதங்களில் குறைந்துவிட்டு, ஏற்றுமதி பணிகளையும் முடக்கிவிட்டு தொழிற்சாலையை மொத்தமாக மூட உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

 4000 ஊழியர்கள்

4000 ஊழியர்கள்

இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டால் சுமார் 4000 ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இது மட்டும் ஃபோர்டு நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களும் அதன் ஊழியர்கள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில் குஜராத் ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

 டி.எம்.அன்பரசன்
 

டி.எம்.அன்பரசன்

தமிழ்நாட்டிலும் இதே நிலை என்பதால் ஊழியர்கள் மிகப்பெரிய போராட்டத்தைக் கையில் எடுக்கும் முன்பு, சென்னை ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 தமிழக அரசு

தமிழக அரசு

திரு.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபோர்டு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் ஃபோர்டு ஊழியர்கள், ஃபோர்டு தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களைச் சப்ளை செய்து வந்த பல்வேறு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 முக்கிய ஆலோசனைக் கூட்டம்

முக்கிய ஆலோசனைக் கூட்டம்

ஃபோர்டு அறிவிப்புக்குப் பின்பு சென்னை CIDCO அலுவலகத்தில் ஃபோர்டு நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் உடனும், ஊழியர்கள் சார்பாகவும் தமிழ்நாடு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன் முன்னிலையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 பல கோரிக்கைகள்

பல கோரிக்கைகள்

ஃபோர்டு நிறுவனம் அதிகளவிலான நஷ்டத்தில் இயங்கும் காரணத்தால் மறைமலைநகர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையின் நிர்வாகம் மூடுவதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 50க்கும் அதிகமான உதிரிப்பாக நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் பலரும் பல விதமான கோரிக்கைகளையும், சில முக்கியமான தளர்வுகளும் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசின் சார்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என டி.எம்.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

 74 நிறுவனங்கள்

74 நிறுவனங்கள்

சென்னை ஃபோர்டு தொழிற்சாலைக்குச் சுமார் 74 நிறுவனங்கள் உதிரிப்பாகங்களை சப்ளை செய்து வருகிறது. இதில் பல நிறுவனங்கள் தங்களது மொத்த உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதத்தை ஃபோர்டு நிறுவனத்திற்கு அளித்து வருகிறது. சில நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் உற்பத்தி பொருட்களை ஃபோர்டு நிறுவனத்திற்கு அளித்து வருகிறது. இந்த விபரங்களை முதல்வர் ஸ்டாலின் முன் வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

 டி.எம்.அன்பரசன் நம்பிக்கை

டி.எம்.அன்பரசன் நம்பிக்கை

மேலும் டி.எம்.அன்பரசன் அவர்கள், ஃபோர்டு தொழிற்சாலை இன்னமும் இயங்கி வருகிறது, இதனால் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை மூலம் ஃபோர்டு நிறுவனம் தொழிற்சாலை மூடுவதற்குள் ஊழியர்களுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ford ஃபோர்டு
English summary

Good news for Chennai Ford employees: Tamilnadu minister Tha.mo.Anabarasan new announcement

Good news for Chennai Ford employees: Tamilnadu minister Tha.mo.Anabarasan new announcement
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X