ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு 2019-20ஆம் நிதியாண்டுக்கு அறிவிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டி வருமானம் முழுமையாகக் கிடைக்க அதிகளவிலான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் ஈபிஎப்ஓ அமைப்பு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிகளவிலான லாபம் கிடைக்கும். இதனால் அரசு அறிவித்த 8.5 சதவீத வட்டு வருமானம் கண்டிப்பாக முழுமையாகக் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் 19 கோடி ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு இது மிகப்பெரிய லாபத்தை அளிக்கும்.
தனிநபர் விபத்து காப்பீடு.. IRDAI-வின் புதிய வழிகாட்டுதல்கள்.. நல்ல விஷயம் தான்..!

ஈபிஎப்ஓ அமைப்பு
டிசம்பர் மாத வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் ஈபிஎப்ஓ அமைப்பு விற்பனை செய்யப்படும் பங்குகள் மூலம் முன்பு கணிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இதனால் ஈபிஎப்ஓ அமைப்பு 3 மாதங்களுக்கு முன்பு கணக்கிட்ட தொகையை விடவும் தற்போது கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டு உள்ளதாக ஈபிஎப்ஓ அமைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகப் பிஸ்னஸ் ஸ்டான்டார்ட் தெரிவித்துள்ளது. இதன் படி ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு 8.5 சதவீத வட்டி வருமானம் முழுமையாகக் கிடைக்கும்.

நிதியமைச்சகம் ஒப்புதல்
மேலும் மத்திய ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு நிதியமைச்சகத்திற்கு 2019-20ஆம் நிதியாண்டு காலத்திற்கு 19 கோடி ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் கணக்கில் 8.5 சதவீத வட்டி வருமானத்தை டெப்பாசிட் செய்ய இறுதி ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கான ஒப்புதலை நிதியமைச்சகம் அடுத்த ஒரு வாரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈபிஎப்ஓ அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாத அறிவிப்பு
மத்திய CBT அமைப்பு ஈபிஎப்ஓ வட்டி வருமானத்தை இரு பிரிவுகளாக டெப்பாசிட் செய்யப்படும் எனச் செப்டம்பர் மாதம் அறிவித்தது.
முதல் முறையாகக் கொரோனா பாதிப்பின் காரணமாக அரசு தனது பங்கு முதலீடுகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் கடன் சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் கிடைத்த 8.15 சதவீத வட்டி வருமானத்தை மட்டும் முதலில் ஈபிஎப்ஓ கணக்கில் செலுத்தவும், மீதமுள்ள 0.35 சதவீத வட்டி வருமானத்தை இழப்புகளைக் கணக்கிட்டுச் செலுத்துவதாக அறிவித்தது.

ஈபிஎப்ஓ பங்கு முதலீடுகள்
ஈபிஎப்ஓ அமைப்பு தனது வளர்ந்து வரும் மூலதன தொகையில் இருந்து 15 சதவீதத்தை ETFல் முதலீடு செய்யும், இதன் மூலம் 2020ஆம் நிதியாண்டில் ஈபிஎப்ஓ அமைப்பின் பங்கு முதலீடுகள் -8.3 சதவீதமாகச் சரிந்தது. இது 2019ஆம் நிதியாண்டில் 14.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை வளர்ச்சி
ஆனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில் ஈபிஎப்ஓ முன்பு வெளியிட்ட கணிப்புகளை விடவும் அதிகளவிலான லாபத்தை அடைய முடியும். இதனால் நிர்ணயம் செய்யப்பட்ட 8.5 சதவீத வட்டி வருமானம் 19 கோடி ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 வருட சரிவு
ஈபிஎப்ஓ அமைப்பு தனது 19 கோடி வாடிக்கையாளர்களுக்கு 2019ஆம் நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி வருமானம் கொடுத்த நிலையில், 2020ஆம் நிதியாண்டில் 8.5 சதவீத வட்டியை மட்டுமே அறிவித்தது. 2020ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டி வருமானமே 7 வருட சரிவாகும்.