ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல காலம்.. ஐடி ஜாம்பவான்கள் சொன்ன செம விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் காலாண்டில் நல்ல லாபத்தினை கண்டுள்ளன. அதோடு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு என மாற்றி மாற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றன.

அதோடு பல ஆயிரம் வேலைகளையும் வழங்க திட்டமிட்டு வருகின்றன. ஒரு புறம் கொரோனாவினால் சிக்கித் தவித்து வரும் ஊழியர்கள் இருக்கும் வேலையாவது இருக்குமா? என்று பரிதவித்து வரும் நிலையில், ஐடி நிறுவனங்களோ சர்பிரைஸ் மேல் சர்பிரைஸ் கொடுத்து வருகின்றன.

இது கொரோனா பெருந்தொற்று நோயில் இருந்தும், நெருக்கடியான பொருளாதார நிலையில் இருந்தும் நிறுவனங்கள் மீண்டு வருவதையே சுட்டி காட்டுகின்றது.

யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. Q2வில் டாடா மோட்டார்ஸில் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளரா.. எதற்காக!

தேவை அதிகரித்து வருகின்றது
 

தேவை அதிகரித்து வருகின்றது

நிறுவனங்கள் இந்த செப்டம்பர் காலாண்டில் நல்ல லாபத்தினை கண்டுள்ளாதோடு, புதிய புராஜக்ட் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும் அதிகளவில் செய்துள்ளதாகவும் கூறி வருகின்றன. அதோடு இந்த வலுவான வளர்ச்சியானது அடுத்து காலாண்டிலும் தொடரும் என்றும் கூறியுள்ளன. ஏனெனில் கொரோனாவின் காரணமாக ஐடி துறையில் தேவை அதிகரித்து வருகின்றது.

டிஜிட்டல் மற்றும் கிளவுட் துறையில் வளர்ச்சி

டிஜிட்டல் மற்றும் கிளவுட் துறையில் வளர்ச்சி

குறிப்பாக டிஜிட்டல் மற்றும் கிளவுட் துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகின்றன. இதனால் இத்துறையில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் ஐடி நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்த கொரோனாவினால் மக்களின் வாழ்க்கையே முறையே மாறியுள்ளது. டிஜிட்டலுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. இது வரும் காலத்தில் டிஜிட்டல் துறைக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கும் என்றும் ஐடி நிறுவனங்கள் கூறி வருகின்றன.

பணியமர்த்தல் விகிதம்

பணியமர்த்தல் விகிதம்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 9,864 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இதோ இன்ஃபோசிஸ் நிறுவனம் இதே காலாண்டில் 975 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இதே விப்ரோ நிறுவனம் இரண்டாவது 3,439 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதோடு அடுத்து வரும் காலாண்டிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்றும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

கூடுதல் வேலை வாய்ப்பு
 

கூடுதல் வேலை வாய்ப்பு

அடுத்து வரும் காலாண்டுகளில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்போசிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 16,500 ப்ரசர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் 15,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கிடையில் விப்ரோ நிறுவனமும் நிறைய புதியவர்களை பணியில் அமர்த்த திட்ட மிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

TCS நிறுவனமும் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஆக ஊழியர்கள் தங்கள் டிஜிட்டல் திறனை வளர்த்துக் கொண்டாலே, நிச்சயம் வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன என்று தான் கூற வேண்டும்.

உண்மையில் ஐடி ஊழியர்களுக்கு நல்ல காலம் காத்துக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news for It employees! IT majors’ plans hiring in coming quarters

IT companies are plan to hire more in current financial year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X