12 லட்சம் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. கூடுதல் பாதுகாப்பு சலுகைகள்.. ஐடி நிறுவனங்கள் அசத்தல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அனுதினமும் கொரோனாவின் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வருகின்றது. இது லட்சக்கணக்கில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகின்றது.

ஒரு புறம் கொரோனா தடுப்பூசிகள் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில், மே-1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டும் வருகின்றது. இதற்கிடையில் பல கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளன. இதற்கான கேம்ப் தேதியினையும் அறிவித்து வருகின்றன.

12 லட்சம் ஊழியர்கள் பயன்

12 லட்சம் ஊழியர்கள் பயன்

அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ லிமிடெட், டெக் மகேந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி கேம்பினை அறிவித்துள்ளன. இதன் மூலம் 12 லட்சம் ஐடி ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களோடு, ஊழியர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வயதுடையவர்களும் போட்டுக் கொள்ளலாம் என நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குடும்பத்தினருக்கும் தடுப்பூசி

குடும்பத்தினருக்கும் தடுப்பூசி

அந்த வகையில் முன்னணி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, உள்ளிட்ட நிறுவனங்கள் மே 1ல் இருந்து தங்களது தடுப்பூசி கேம்பினை அறிவித்துள்ளன. இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் போடப்படும் என்றும் அறிவித்துள்ளன.

தனியார் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு
 

தனியார் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு

இந்திய ஐடி துறையானது தனியார் வேலை விகிதங்களில் கணிசமான பங்கினை கொண்டுள்ளது. குறிப்பாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் உள்ளிட்ட டாப் 5 நிறுவனங்களில் மட்டும் 1.2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இது இந்தியாவின் மொத்த ஐடி ஊழியர்களில் கால் பங்காகும்.

டெக் மகேந்திராவின் அறிவிப்பு

டெக் மகேந்திராவின் அறிவிப்பு

இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் டெக் மகேந்திரா உள்ளிட்ட டாப் ஐடி நிறுவனங்கள் சமீபத்தில் தான் இதனை அறிவித்தன. டெக் மகேந்திராவின் சர்வதேச தலைவர் Harshvendra Soin, நாங்கள் சமீபத்தில் தான் இந்த தடுப்பூசி திட்டத்தினை அறிவித்தோம். இதன் மூலம் எங்களது ஊழியர்களுக்கும், ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் போடப்படும். இதற்கான கட்டணத்தினையும் நிறுவனமே செலுத்தி விடும் என்று கூறியுள்ளார்.

விப்ரோவின் அறிவிப்பு

விப்ரோவின் அறிவிப்பு

விப்ரோவின் செய்தித்தொடர்பாளர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு வளாகத்தில் அதன் கொரோனா தடுப்பூசி கேம்பினை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர இந்தியாவில் உள்ள மற்ற முக்கிய அலுவலகங்களிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விப்ரோ பல நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள்

பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள்

தடுப்பூசி மட்டும் அல்ல, ஐடி நிறுவனங்கள் பாதுகாப்பான பணி சூழலுக்கு கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசிகளை அறித்துள்ளதோடு, 130-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் அறிவிப்பு

இன்ஃபோசிஸ் அறிவிப்பு

இது குறித்து இன்போசிஸின் நிர்வாக துணைத் தலைவரும், மனித வள தலைவருமான ரிச்சர்ட் லோபோ, எங்கள் ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட, நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவோம். இதற்காக நாங்கள் சுகாதார அமைப்புகள் மற்றும் தடுப்பூசி சப்ளையர்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

டெக் மகேந்திராவின் திட்டம்

டெக் மகேந்திராவின் திட்டம்

டெக் மகேந்திரா மெல்ஹ்டி என்ற (risk screening test Mhealthy) ஸ்கீரின் டெஸ்டினை வைத்துள்ளது. இது ஊழியர்கள் வளாகத்தில் நுழையும்போது அனைத்து பணியாளர்களும் ஆரோக்கியமாக உள்ளார்களா என்பதை உறுதி செய்யும். இதன் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும், பல வகைகளிலும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஊழியர்களின் எதிர்பார்ப்பு

ஊழியர்களின் எதிர்பார்ப்பு

உண்மையில் இது மிக நல்ல விஷயம் தான். ஐடி துறையில் மட்டும் அல்ல, மற்ற துறைகளிலும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்பார்ப்பும். அதோடு இந்த நெருக்கடியாக காலகட்டத்தில் தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து மக்கள் இருப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news! Free vaccination for 12 lakh IT employees by their IT companies

IT sector updates.. Good news! Free vaccination for 12 lakh IT employees by their IT companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X