விப்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்..ஐடி பிரெஷ்ஷர்களுக்கு நல்ல சான்ஸ்.. மற்றவர்களுக்கு என்ன நிலவரம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

IT sector Updates:ஐடி துறையில் கடந்த சில மாதங்களாகவே பணியமர்த்தல் என்பது மிக குறைவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பணியமர்த்தல் என்பது பெரியளவில் குறைந்துள்ளது எனலாம். எனினும் பிரெஷ்ஷர்களுக்கான வாய்ப்பு என்பது குறைந்திருந்தாலும், தொடர்ந்து பணியமர்த்தல் இருந்து வருகின்றது எனலாம்.

முன்னதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் வாய்ப்பினை அறிவித்தது. தற்போது அதனை தொடர்ந்து விப்ரோ நிறுவனமும் பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம்.

ரூ.3050 கோடி லாபம்.. கலக்கும் விப்ரோ..!ரூ.3050 கோடி லாபம்.. கலக்கும் விப்ரோ..!

கொரோனா காலகட்டம்

கொரோனா காலகட்டம்

பொதுவாக ஐடி நிறுவனங்கள் பலவும் கொரோனா காலக்கட்டத்திலேயே அதிக ஊழியர்கள் தேவை மற்றும் அதிகளவிலான அட்ரிஷன் காரணமாக பிரெஷ்ஷர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்திக் கொண்டன. இது ஐடி பிரெஷ்ஷர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனினும் இந்த போக்கானது சமீபத்திய மாதங்களாகவே குறைந்துள்ளது.

தேவை சரிவு

தேவை சரிவு

தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது சரிவினை கண்டுள்ளது. இது ஐடி துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பல டெக் ஜாம்பவான்கள் கூட பணி நீக்கம் செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இன்றும் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தி வருவது, ஐடி துறையினர் மத்தியில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

டிசிஎஸ்-ன் திட்டம்
 

டிசிஎஸ்-ன் திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனம், 2024ம் நிதியாண்டில் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தலாம் என தெரிவித்துள்ளது.

இதே விப்ரோ நிறுவனம் மூன்றாவது காலாண்டில் நிகரலாபமாக 30.5 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவானது, ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 1 ரூபாய் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

மார்ஜின் வளர்ச்சி

மார்ஜின் வளர்ச்சி

விப்ரோ நிறுவனத்தின் வருவாய் விகிதம் 232.3 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 203 பில்லியன் ரூபாயாகவும் இருந்தது.

விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட், மார்ஜின் விகிதம் 120 அடிப்படை புள்ளிகளாகவே மேம்பட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து 4வது காலாண்டாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பானதொரு உறவு இருந்து வரும் நிலையில், நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.

பணியமர்த்தல் திட்டம்

பணியமர்த்தல் திட்டம்

விப்ரோ நிறுவனம் சுமார் 8000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து http://careers.wipro.com/ என்ற தளத்தில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news: wipro plans to hire 8,000 freshers amid mass lay off time

Good news: wipro plans to hire 8,000 freshers amid mass lay off time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X