சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ஓரே வருடத்தில் 79% வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகிள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஹூரன் ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ளது.

சரி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சுந்தர் பிச்சை
 

சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவனத்தின் சேர்ந்த 2004ஆம் ஆண்டு சேர்ந்த சுந்தர் பிச்சை 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு 79 சதவீதம் உயர்ந்து 5,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியத் தலைவர்கள்

இந்தியத் தலைவர்கள்

மேலும் ஹூரன் ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணக்கார இந்தியத் தலைவர்கள் பட்டியலில் (Top 10 Richest Indian Professional Managers list) கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா

சுந்தர் பிச்சையைப் போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பும் 5,900 கோடி ரூபாய் என்பதால், பணக்கார இந்திய தலைவர்கள் பட்டியலில் இருவரும் 5வது இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.

ஆனால் சத்ய நாடெல்லாவின் சொத்து மதிப்பு இந்த வருடம் 16 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இடம்
 

முதல் இடம்

இப்பட்டியலில் 11,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போது கூகிள் கிளவுட் பிரிவின் சிஇஓ-வாக இருக்கும் தாமஸ் குரியன் அவர்கள் முதல் இடத்தில் உள்ளார்.

சுந்தர் பிச்சை-யை விடவும் அதிகச் சொத்து மதிப்புடையவராகத் திகழ்கிறார் தாமஸ் குரியன்.

சுந்தர் பிச்சையின் 10 வருட பயணம்

சுந்தர் பிச்சையின் 10 வருட பயணம்

கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்கள் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்த போது, அந்த இடத்திற்குச் சரியான நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இப்போது கூகிள் நிறுவனத்தின் இன்றைய வலிமையான வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட கூகிள் குரோம் மற்றும் ஆண்டுராய்டு கைப்பற்றும் முடிவு ஆகிய இரண்டையும் சுந்தர் பிச்சை தலைமையில் எடுக்கப்பட்டதால் 2004ல் கூகிள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்களை 2014ல் கூகிள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google alphabet ceo sundar pichai
English summary

Google and Alphabet CEO Sundar Pichai's wealth increased by 79% in a year to ₹5,900cr

Google and Alphabet CEO Sundar Pichai's wealth increased by 79% in a year to ₹5,900cr
Story first published: Wednesday, September 30, 2020, 9:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X