சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் மற்றும் ஆல்பபெட்-ன் சிஇஓ சுந்தர் பிச்சை 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு முன்பு தனது சம்பளத்தில் பெரும் பகுதியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

 

இதனால் தனது சம்பளத்தில் முக்கியமான மாற்றமும் ஏற்றப்பட்டது, இந்த மாற்றத்தின் வாயிலாகக் கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் இருக்காது என்று கூடப் பலர் தெரிவித்து வந்தனர். ஆனால் மாத ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி மாதம் பணிநீக்கம் அறிவிப்பை வெளியிட்டது கூகுள்.

2023 ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது, இதேபோல் 2021 முடிவில் சுந்தர் பிச்சை சம்பளமும் பெரிய அளவில் குறைந்த காரணத்தால் 2022 முடிவில் இவருடைய சொத்து மதிப்பும், சம்பளமும் எப்படி இருக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

2020 இல் கூகுள் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கைகளின் தகவல் படி, சுந்தர் பிச்சையின் ஆண்டுச் சம்பளம் 2 மில்லியன் டாலர் தோராயமாக 16.50 கோடி ரூபாய். IIFL Hurun India Rich List 2022 அறிக்கையின் படி, கூகுள் சிஇஓ தனது நிகரச் சொத்து மதிப்பில் சரிவைக் கண்டு உள்ளார். இதைத் தாண்டி அவருக்கு நிறுவன பங்குகளும் வழங்கப்படுகிறது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 2021 இல் 20% சரிந்து 5,300 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் சுந்தர் பிச்சை தனது மொத்த சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியை இழந்துள்ளார். ஆயினும் ஹூரன் பணக்கார இந்திய நிபுணத்துவ மேலாளர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

சுந்தர் பிச்சை சம்பளம்
 

சுந்தர் பிச்சை சம்பளம்

டிசம்பர் மாதம் கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுந்தர் பிச்சை-க்கு புதிய ஊதியக் கட்டமைப்பு அறிமுகம் செய்தது. இதில் சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் பெரும் பகுதியை அவருடைய செயல்திறன் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதாவது இவருக்கான சம்பளத்தை முழுமையாகப் பெற கூடுதலாகப் பணியாற்ற வேண்டும்.

ஊதியக் கட்டமைப்பு

ஊதியக் கட்டமைப்பு

புதிய ஊதியக் கட்டமைப்பில் அவருடைய மொத்த சம்பளத்தின் செயல்திறன் பங்கு அளவுகள் (PSUs) விகிதத்தை 43 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ஆன் டார்கெட் performance stock units பேமெண்ட் தொகையில் செயல்திறன் தேவையை 50 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2,000,000 டாலர்

2,000,000 டாலர்

கூகுள் நிர்வாகக் குழு ஜனவரி 1, 2020 முதல் சுந்தர் பிச்சையின் சம்பளத்தை 2,000,000 டாலராக ஆக உயர்த்தியது மூலம், இந்தத் தொகை அவருக்கு முழுமையாகக் கிடைக்கும். இதனுடன் செயல்திறன் பங்கு அலகுகள் ( performance stock units) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகள் (restricted stock units) வடிவில் நிறுவனப் பங்குகளும் உள்ளது.

3 ஆண்டுக் காலம்

3 ஆண்டுக் காலம்

ஆல்பபெட் நிர்வாகக் குழு தற்போது CEO ஈக்விட்டி வழங்கும் திட்டத்தை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி வருகிறது. அந்த வகையில் 3 ஆண்டுக் காலத்தில் சுந்தர் பிச்சை பணிகளைப் பெரிய அளவில் பாராட்டிய ஆல்பபெட் நிர்வாகம் 2019 திட்டத்தின் படி சுந்தர் பிச்சைக்கு வருடம் 2,000,000 டாலர் மட்டும் அல்லாமல் 2 முறை தால 63 மில்லியன் டாலர் மதிப்பிலான performance stock units அதாவது கூகுள் பங்குகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2023 சம்பளம்

2023 சம்பளம்

இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரிய மாற்றமும், சரிவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

கூகுள் நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை மிகவும் தாமதமாக அறிவித்தாலும், இதன் அறிவிப்பு டெக் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

12,000 பேரை பணிநீக்கம்

12,000 பேரை பணிநீக்கம்

கூகுள் உலகம் முழுவதும் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்து சுமார் 6 சதவீத ஊழியர்களைக் குறைத்தது.

 PERM திட்டம் நிறுத்தம்

PERM திட்டம் நிறுத்தம்

கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து விட்டு கூகுள் நிர்வாகம் Program Electronic Review Management (PERM) திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இது தான் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கான முதல் படி என்பதால் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

சம்பளம் கட்

சம்பளம் கட்

இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் மூத்த துணைத் தலைவர் (Senior Vice President) நிலைக்கு மேலே உள்ள அனைத்துப் பதவிகளில் இருக்கும் ஊழியர்களும் சம்பளத்தைக் குறைக்கவும், குறிப்பாகப் போனஸ் தொகையில் அதிகளவில் குறைக்க உள்ளதாக அறிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google CEO Sundar Pichai’s Income will fall After Pay Cut

Google CEO Sundar Pichai’s Income will fall After Pay Cut
Story first published: Saturday, February 4, 2023, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X