கூகுள்-ஐ சுத்தி சுத்தி அடிக்கும் CCI.. 2வது முறையாக அபராதம்.. சுந்தர் பிச்சை சோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) அக்டோபர் 25 அன்று உலகின் முன்னணி டெக் சேவைகளில் ஒன்றாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஓரே வாரத்தில் 2வது முறையாக அபராதம் விதித்துள்ளது.

 

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளும், அதன் மூலம் கிடைக்கும் வர்த்தகம் மற்றும் வருமானம் அதிகரித்துள்ள காரணத்தால் அனைத்து மத்திய அரசு சார்ப்பில் எவ்விதமான வரி ஏய்ப்பு மற்றும் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் கொண்டு இருக்கக் கூடாது என்பதற்காகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இதில் இந்திய அமெரிக்கரான சுந்தர் பிச்சை தலைவராக இருக்கும் கூகுள் இந்தியாவில் தவறான வர்த்தக நடைமுறையை மேற்கொண்டு உள்ளதாக அபராதம் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் கல்வி, தொழில், சுற்றுலா துறையில் என்னென்ன பாதிப்பு?இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் கல்வி, தொழில், சுற்றுலா துறையில் என்னென்ன பாதிப்பு?

ப்ளே ஸ்டோர் கொள்கைகள்

ப்ளே ஸ்டோர் கொள்கைகள்

கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்ததுள்ளது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ). இது மட்டும் அல்லாமல் சிசிஐ அமைப்பு cease and desist உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆண்ட்ராய்டு OS அபராதம்

ஆண்ட்ராய்டு OS அபராதம்

கடந்த வாரம் அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 1,337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ). இதைச் சரிசெய்வதற்குக் கூகுள் நிறுவனத்திற்கு 12க்கும் அதிகமான நடவடிக்கை மாற்றங்களைச் செய்யக் கட்டுப்பாட்டாளர் பரிந்துரைத்துள்ளார்.

கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கை
 

கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கை

கூகுள் ப்ளே ஸ்டோரின் கொள்கையில் ஆப் டெவலப்பர்கள் அனைத்து வாடிக்கையாளர் பில்லிங்களுக்கும் கூகுள் பிளேயின் பில்லிங் சிஸ்டத்தை (GPBS) மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

கூகுள் பிளேயின் பில்லிங் சிஸ்டம்

கூகுள் பிளேயின் பில்லிங் சிஸ்டம்

ஆண்ட்ராய்டு ஆப்-ல் இருந்து பணம் பெறுவதற்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் செய்யும் ஆப்ஸ் சார்ந்த purchase-க்கும் கூகுள் பிளேயின் பில்லிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. GPBS ஐ பயன்படுத்தாத எந்தவொரு ஆப் டெவலப்பரும் தனது ஆப்-களை Google Play ஸ்டோரில் பட்டியலிட அனுமதிக்கப்படுவதில்லை.

விதிமுறை மீறல்கள்

விதிமுறை மீறல்கள்

இது முழுக்க முழுக்க விதிமுறை மீறல்களாகும், Google Play ஸ்டோரை விட்டால் மக்களுக்கும், ஆப் டெவலப்பர்களுக்கும் வேறு இடம் இல்லாத அளவிற்குக் கூகுள் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் கூகுள் தனது விருப்பத்தின் அடிப்படையில் கூகுள் பிளேயின் பில்லிங் சிஸ்டத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கியுள்ளது.

CCI அமைப்பு

CCI அமைப்பு

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி CCI அமைப்புத் தற்போது அறிவித்துள்ள ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம்-த்திற்கான 1,337.76 கோடி ரூபாய் அபராதமும், கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக 936.44 கோடி ரூபாய் அபராதத்தைத் தாண்டி கூடுதலாக 2 வழக்கை வைத்துள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆய்வுகள் முடித்துவிட்டு அபராதத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனத்தின் வருவாய் ஏற்கனவே பெரிய அளவில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த இரு அபராதம் அடுத்த வரயிருக்கும் இரு அபராதங்களை உடனடியாக செலுத்துமா அல்லது எதிர்த்து வழக்கு போடுமா என்பது தெரியவில்லை. கூகுள் சமீபத்தில் போட்ட பல்வேறு அரசுக்கு எதிரான வழக்கில் தோல்வி அடைந்துள்ளது, இதனால் இந்தியாவில் வழக்கு போடுமா என்பது சந்தேகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google fined Rs 936 crore for Google Play on anti-competitive practices by CCI; second penalty in october

Google fined Rs 936 crore for Google Play on anti-competitive practices by CCI; second penalty in october after penalty of Rs 1,337.76 crore on Google Android OS for abusing its dominant position in multiple markets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X