கூகுளில் பணி நீக்கம்.. ஆல்பாபெட்டில் பணியமர்த்தலா.. சுந்தர் சார் என்ன தான் நடக்குது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவனம் சமீபத்தில் 10,000 பேரை பணி நீக்கம் செய்யலாம். இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் சில தினங்களுக்கு முன்பு எதிர்காலம் குறித்து கணிப்பது கடினம் என சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.

ஆக கூகுள் நிறுவனத்தில் விரைவில் பெரியதொரு பணி நீக்கம் இருக்கலாம் என்ற கருத்தும் இருந்து வருகிறது.

நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் பணி நீக்கம் என்பது இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள், அமேசான் முக்கிய அறிவிப்பு.. பயத்தில் நடுங்கும் ஊழியர்கள்..! கூகுள், அமேசான் முக்கிய அறிவிப்பு.. பயத்தில் நடுங்கும் ஊழியர்கள்..!

பணியமர்த்தலும் உண்டு

பணியமர்த்தலும் உண்டு

இது இப்படி எனில் மறுபுறம் நிறுவனம் அனைத்து துறைகளிலும் பணியமர்த்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக முக்கமான பதவிகளுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பிலும் இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கூகுள் ஊழியர் ஒருவர் அனைத்து தரப்பிலும் பணியமர்த்தல் இருப்பதாக BT அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்களை போல் இல்லை

மற்ற நிறுவனங்களை போல் இல்லை

மற்ற டெக் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பணியமர்த்தல் முற்றிலும் முடக்கப்படவில்லை. ஆன்போர்டிங்கினை நிறுத்தி வைக்கவில்லை. ஆக எனினும் இது குறித்து கூகுள் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கொடுக்கவில்லை. எனினும் எதிர்காலத்தில் நிலைமை என்னவாகும் என்பதை அடிப்படையாக கொண்டு பணி நீக்கம் இருக்கலாம் என்பது மட்டும் தெளிவாகிறது.

மந்த நிலை
 

மந்த நிலை

தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் டெக் நிறுவனங்கள் பலவும் பணி நீக்கத்தினை செய்து வருகின்றன. ஆக நிலைமை சீரடையும்போது பணியமர்த்தல் அதிகரிக்கலாம் எனலாம் . அதுவரையில் பணி நீக்கம் என்பது பரவலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது கூகுள் நிறுவனத்திற்கும் விதிவிலக்கல்ல. எனினும் அதற்கான கட்டமைப்பினை கூகுள் நிறுவனம் செய்துள்ளது.

சுந்தர் பிச்சையின் கருத்து

சுந்தர் பிச்சையின் கருத்து

சில தினங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை ஒரு அறிக்கையில் கடந்த சில மாதங்களாக நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நாங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்கிறோம். எங்களால் முடிந்த வரையில் சமாளிப்போம். சவால்களை சமாளிக்கும் அளவுக்கு முயற்சி செய்துள்ளோம். எனினும் என்ன வரப்போகிறது என தெரியவில்லை. எனினும் அது அதனை பொருட்படுத்தாமல் அதில் கவனம் செலுத்தி, முடிந்த வரையில் சிறப்பாக செய்வோம் என கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

google layoffs: parent company alphabet is still hiring

Google may lay off 10,000 people recently. Actions in this regard are expected to begin early next year. On the other hand, it is also reported that Alphabet is hiring
Story first published: Wednesday, December 14, 2022, 21:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X