ஆல்பாபெட்டின் பிரம்மாண்டமான பலூன் இணைய சேவை திட்டத்தினை நிறுத்த திட்டம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனமான ஆல்பாபெட் அதன் லூன் திட்டத்தினை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

அதெல்லாம் சரி அதென்ன லூன் திட்டம்? லூன் திட்டம் என்பது உலகில் இணைய சேவை இல்லாத கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில், இணையச் சேவையை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓர் திட்டமாகும்.

இந்த திட்டத்தினை வணிகரீதியாக தொடர முடியாது. அதோடு செலவினங்களும் இதற்கு அதிகம் என்ற காரணத்தினால், இந்த திட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.

கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..!கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..!

பலூன் மூலம் இணைய சேவை திட்டம்

பலூன் மூலம் இணைய சேவை திட்டம்

பலூன்கள் மூலமாக கம்பியில்லா இணைய வசதியை எல்லா பகுதிகளுக்கும் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் அதிக செலவினங்களைக் கொண்டு செல்போன் டவர்களை அமைப்பதற்கு பதிலாக, இந்த பலூன்கள் ஒரு மாற்றாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.

நீண்டகால வணிகம் நீடிக்கவில்லை

நீண்டகால வணிகம் நீடிக்கவில்லை

இந்த திட்டம் பல வாடிக்கையாளர்களை பெற்றாலும், நீண்டகால நிலையான வணிகத்தினை உருவாக்குவதற்கும், செலவினங்களை குறைப்பதற்கும் போதுமான வழியினை கண்டுபிடிக்கவில்லை என்று லூனின் தலைமை தலைமை செயல் அதிகாரி அலெஸ்டர் வெஸ்ட்கார்ட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

லூனின் தேவை குறைவு
 

லூனின் தேவை குறைவு

மேலும் மொபைல் இணைப்பிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், ஒரு தசாப்தத்திற்கு முன்பு அதிக செலவு என்று கருதப்பட்ட மொபைல் டவர்கள், இன்று செலவு குறைந்ததாக உள்ளது, இது லூனின் தேவையை குறைத்துள்ளது. லூன் தொழில் நுட்பத்தில் காற்று நிரப்பப்பட்ட பலூன்கள், தரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.

அதிக கவரேஜ் வழங்கும்

அதிக கவரேஜ் வழங்கும்

இணைய வசதியை அளிக்கும் இந்த பலூனில் ஹீலியம் அல்லது ஹைட்ரோஜன் அல்லது காற்று நிரப்பப்படும். இந்த பலூனில் உள்ள ஒரு பெட்டியில் மின்னணு சாதனங்கள் இருக்கும். இந்த பலூன்கள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய சேவையை வழங்கும். இந்த பலூன்கள் வானத்தில் நூற்றுக்கணக்கான நாட்கள் இருக்கும். இதன் மூலம் சராசரியான செல்போன் கோபுரத்தினை விட 200 மடங்கு அளவில் கவரேஜை வழங்க முடியும்.

செலவு அதிகம்

செலவு அதிகம்

எனினும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல பலூன்கள் தேவைப்படும். இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல்லாயிரம் டாலர்கள் செலவாகும். எனினும் இந்த பலூன்கள் 5 மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதே இந்த திட்டத்தின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2020ம் ஆண்டில் கென்யாவில் ஒரு பைலட் திட்டத்தினை லூன் தொடங்கியது. இந்த சேவையானது மார்ச் 1 வரை இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெற்றிகரமான சேவை தான்

வெற்றிகரமான சேவை தான்

இயற்கை பேரழிவுகளால் செல் கோபுரங்கள் பாதிக்கப்பட்ட போதும், பெரு மற்றும் புவேர்ட்டோவில் வெற்றிகரமாக திட்டமாக லூன் நிலை நிறுத்தப்பட்டது. எனினும் நீண்டகால நோக்கில் எதிர்காலம் கருதி லூன் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் போட நினைத்தது. ஆனால் அது வெற்றியடையவில்லை.

எத்தனை ஊழியர்கள்?

எத்தனை ஊழியர்கள்?

உலகின் கடைக்கோடி இடங்களுக்கு அதிவேக இணையத்தினை கொண்டு வருவததை நோக்கமாக கொண்ட லூன், இலாப நோக்கமற்ற குழுக்களுடன் தனது தொழில்நுட்பத்தினை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இந்த நிறுவனம் லூன் பணிக்காக கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி 200 பேரை பணிக்கு அமர்த்தியது. கடந்த ஆண்டில் சாப்ட் பேங்கின் HAPSmobileலிருந்து 125 மில்லியன் டாலர்களை ஈட்டியது. இது ட்ரோன்களைப் பயன்படுத்தி மிதக்கும் செல் கருவிகளில் வேலை செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google parent company alphabet plans to shutting loon

Google updates.. Google parent company alphabet plans to shutting loon
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X