ஜப்பானில் காலடி வைக்கும் கூகுள்.. எத்தனை மில்லியன் முதலீடு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஏராளமாக முதலீடு செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் தற்போது ஜப்பான் நாட்டில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஜப்பான் நாட்டில் டேட்டா சென்டர் ஒன்றையும் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கூகுள் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா.. என்ன காரணம்? கூகுள் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முதலீடு செய்து வருகிறது என்றும் பல நாடுகளில் கூகுள் நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

மேலும் கூகுள் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள் என்பதும் கூகுள் நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் கூகுள்

ஜப்பானில் கூகுள்

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி முதல் முறையாக கூகுள் நிறுவனம் ஜப்பானில் 690 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு ஜப்பானில் மொத்தம் 100 பில்லியன் யென் முதலீடு பெரிய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு அமெரிக்க டாலரில் 690 மில்லியன் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் டேட்டா சென்டர்

கூகுள் டேட்டா சென்டர்

மேலும் அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே டேட்டா சென்டரை திறக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜப்பானின் தொடங்கப்படும் முதல் கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் இதுதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3வது டேட்டா சென்டர்

3வது டேட்டா சென்டர்

ஏற்கனவே தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் டேட்டா சென்டர் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஜப்பானில் அமையவிருக்கும் டேட்டா சென்டர், ஆசியாவில் கூகுள் நிறுவனத்தின் மூன்றாவது டேட்டா சென்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

கூகுள் நிறுவனம் ஜப்பானில் டேட்டா சென்டரை திறக்க உள்ளதை அடுத்து ஜப்பானியர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google to invest $690 million in Japan, CEO Pichai tells Nikkei

Google plans to invest $690.13 million in Japan through 2024, its Chief Executive Officer Sundar Pichai told Nikkei in an interview on Friday.
Story first published: Saturday, October 8, 2022, 12:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X