இந்திய வங்கிகள் செப்டம்பர் காலாண்டில் கிட்டத்தட்ட ரூ.60,000 கோடி லாபம் ஈட்டி வரலாறு காணாத சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்திய வங்கிகளின் நிகர லாபம் 37,567 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 59 சதவீதம் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது அசத்தியுள்ளது.
இதன் மூலம் வங்கி பங்கு முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்திய இந்திய வங்கிகள்வங்கிகள்
இந்திய வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகப்படியான வாராக் கடன், வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் லாப அளவுகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும், கொரோனா தொற்றுக்குப் பின்பு வர்த்தகச் சந்தையில் உருவான வளர்ச்சி சந்தையில் கடனுக்கான தேவை அதிகரித்தது. இதன் எதிரொலியாகச் செப்படம்பர் காலாண்டில் எந்த வருடமும் பதிவு செய்த அதிகபட்ச லாபத்தைப் பெற்றுள்ளது.

பங்குச்சந்தை
நாட்டின் முக்கிய வங்கிகள் சனிக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு வங்கி நிஃப்டி குறியீடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் 41,779 புள்ளிகளைத் தொட்டது, அதன் வரலாற்று உச்சமான 41,840 ஐ நெருங்கியது. குருநானக் ஜெயந்தி காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை விடுமுறை. கமாடிட்டி சந்தை காலையில் இயங்காது, மாலை 5 மணி முதல் இரவு 11.30 வரையில் மட்டுமே இயங்கும்.

60000 கோடி லாபம்
தனியார் வங்கிகள் இணைந்து இந்தச் செப்டம்பர் காலாண்டில் 33,165 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டில் ரூ.19,868 கோடியை விட 67% அதிகமாகும். இதேபோல் பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 17,123 கோடி ரூபாயை லாமாகப் பெற்ற நிலையில் 50 சதவீத வளர்ச்சியில் 25,685 கோடி ரூபாயை லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

பொதுத்துறை வங்கி
பொதுத்துறை வங்கி பிரிவின் லாபத்தில் 50 சதவீதத்திற்கு மேல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெற்றுள்ளது. இது மட்டும் அல்லாமல் எஸ்பிஐ வரலாறு காணாத அதிகபட்ச காலாண்டு லாபமான ரூ.13,256 கோடியை பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 74% அதிகமாகும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2023 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 14,752 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒருங்கிணைந்த நிகர லாபமாகப் பெற்றதன் மூலம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது எஸ்பிஐ. இதன் மூலம் முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 13,656 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

நிகர வட்டி வருமானம்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வின் நிகர வட்டி வருமானம் (NII) கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.31,184 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 13 சதவீதம் அதிகரித்து ரூ.35,183 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தனியார் வங்கி துறை
தனியார் வங்கி துறையில், ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த லாபம் 20% அதிகரித்து, 10,605 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதேபோல் ஐசிஐசிஐ வங்கி இக்காலாண்டில் 37% வளர்ச்சியுடன் 7,758 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கி 70 சதவீத வளர்ச்சியுடன் ரூ.5,330 கோடி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கி 27% உயர்வு உடன் ரூ.2,581 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகளின் சாதனை செயல்திறன் குறித்து ட்வீட் செய்திருந்தார், இதில் செயல்படாத சொத்துக்களை (என்பிஏ) குறைப்பதற்கும், வங்கிகளின் மேம்படுத்தும் அரசின் தொடர் முயற்சிகளே பொதுத்துறை வங்கிகளின் லாபம் உயர்வுக்குக் காரணம் என்று கூறினார்.

வாராக் கடன்
2016 ஆம் ஆண்டு முதல் பல காலாண்டுகளில் தொழில்துறை நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக மாறிய நிலையில் பொதுத்துறை வங்கிகள் வரலாறு காணாத இழப்புகளை எதிர்கொண்டது.

40,991 கோடி ரூபாய் லாபம்
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பொதுத்துறை வங்கிகளின் லாபம் 40,991 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, 2022 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் அதன் அளவு ரூ.31,290 கோடியாக இபுந்த நிலையில் 2023ஆம் நிதியாண்டின் அரையாண்டிவல் 31 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.