இந்திய டெலிகாம் துறை வருகிற மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் 2021ஆம் நிதியாண்டில் 33,737 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை அளிக்கும் நிலையில், 2022ஆம் நிதியாண்டில் கிட்டதட்ட 60 சதவீதம் அதிக வருமானம், அதாவது 53,986.72 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை அளிக்கும் எனப் பட்ஜெட் அறிக்கையில் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த அதிகப்படியான கணிப்பிற்கு முக்கியக் காரணம் மார்ச் 1ஆம் தேதி டெலிகாம் துறை அறிவித்துள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் தான் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 48,000 கோடி ரூபாய் அளவிலான வருமானம் கிடைக்கும் என்றும், இதில் பெரும் பகுதி அரசின் கருவூலத்திற்கு நேரடியாகச் செல்லும் காரணத்தால் 2022ஆம் நிதியாண்டில், நடப்பு நிதியாண்டை விடவும் 60 சதவீதம் அதிக வருமானத்தைப் பெறும் எனப் பட்ஜெட் அறிக்கையில் கணித்துள்ளது.
டெலிகாம் துறையில் மார்ச் 1ஆம் தேதி 3.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,250 யூனிட் 4ஜி அலைக்கற்றை சுமார் 7 பேண்டுகள் கீழ் விற்பனை செய்ய உள்ளது, இதில் 2.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 700MHz அலைக்கற்றை விற்பனை ஆகாது எனக் கணிக்கப்படுகிறது.
மேலும் 2021ஆம் நிதியாண்டில் மத்திய அரசு டெலிகாம் துறை மூலம் 1,33,027.20 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33,737 கோடி ரூபாய் மட்டுமே பெறும் என அரசு தரப்பு அறிவித்துள்ளது. இந்தப் பெரும் சரிவுக்கு முக்கியக் காரணம் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய AGR கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் கொடுத்தது தான்.
இனி நிறுவன இணைப்பு & கைப்பற்றல்-கான வரிச் சலுகை இல்லை..!
இதேவேளையில் டெலிகாம் துறை 2020ஆம் ஆண்டின் கடைசியில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காகத் தடை பெற்றது. இதனால் 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் கிடைக்கும் வருமானமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
மேலும் இந்திய டெலிகாம் துறை சுமார் 8.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.