அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க நிறைய செலவிட வேண்டும்.. நிபுணர்கள் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தினை கருத்தில் கொண்டு, எதிர்வரும் பொருளாதார தாக்கத்தினை எதிர்கொள்ள மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் தூண்டுதல் தொகுப்பினை அறிவித்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் - ஜூலை மாதத்தில் மத்திய அரசின் செலவினம், வெறும் 1.07 லட்சம் கோடி ரூபாய் அல்லது 11.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன.

இதில் முந்தைய ஆண்டில் இதே காலத்தில் செலவினங்கள் 9.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இந்த காலகட்டத்தில் 10.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

 செலவினங்கள் அதிகரிப்பு

செலவினங்கள் அதிகரிப்பு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த செலவினங்களில் பெரும்பகுதி சம்பளம் மற்றும் வழக்கமான பிற செலவினங்களாம். கடந்த ஆகஸ்ட் 31 அன்று இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவு சரிந்துள்ள நிலையில், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அரசின் தூண்டுதல், செலவு உந்துதல் அவசியம் தேவை என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேவையை தூண்ட செலவிட வேண்டும்

தேவையை தூண்ட செலவிட வேண்டும்

இதுவரையில் அரசு விநியோக சங்கிலியின் பக்கம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வந்தது. ஆனால் இனி தேவையை தூண்ட ஒரு தூண்டுதல் தேவை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்தகைய செலவினங்களுக்கு ஆதாரமாக, ஆக்கிரமிப்பு சொத்துகளை பணமாக்குதல் மற்றும் அரசு சொந்தமான நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதிகளை திரட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

செலவினங்கள் மிக குறைவு

செலவினங்கள் மிக குறைவு

இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் முதல் காலாண்டில் 23.9% வீழ்ச்சி கண்டு இருக்கும் இந்த நேரத்தில், அரசாங்கத்தின் செலவினமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% செய்யப்படுவது மிக மிக ஏற்றத் தாழ்வானது. பொருளாதாரத்தினை புதுபிக்க ஒரு பெரிய உந்துதல் தேவை.

பெரிய உந்துதலை கொடுக்க வேண்டும்

பெரிய உந்துதலை கொடுக்க வேண்டும்

லாக்டவுன் ஆரம்ப கட்டத்தில் ஏழை மக்களுக்கான வருமான ஆதரவு என்பது முதன்மை நோக்கமாக இருந்த போதிலும், கடைசி இரண்டு மூன்று மாதங்களாக பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டுள்ளது. எனினும் புத்துயிர் பெறுவதற்கான இந்த போரில், அரசு ஒரு பெரிய உந்துதலை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

சிறிய தொகுப்பு

சிறிய தொகுப்பு

20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு, பணப்புழக்க நடவடிக்கை, ஏழைகளுக்கு உதவும் வகையில் நிதி உதவி என பலவகையிலும் உந்துதலாக இருந்தாலும், அது சிறிய தொகுப்பாக உள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் - ஜூலை மாதங்களில் அரசு செய்த மொத்த செலவு 10,54,209 கோடி ரூபாயாகும். இதில் 9,42,360 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 1,11,849 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும் உள்ளன.

இந்த செலவு போதாது

இந்த செலவு போதாது

இதில் மொத்த வருவாய் செலவில் 1,98,584 கோடி ரூபாய் வட்டி செலுத்தலுக்காகவும், 1,04,638 கோடி ரூபாய் மானியங்களின் காரணமாகவும் உள்ளது. ஆனால் இந்த அளவிலான செலவு, இந்த நெருக்கடியான நிலையிலிருந்து வெளியேற போதாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இந்த நிவாரணத் தொகுப்பில் 2.1 லட்சம் கோடி மட்டுமே தேவையை தூண்டுவதற்கான செலவாகும். அதுவும் ஒரு முழு ஆண்டிற்கான தொகுப்பாகும்.

நுகர்வும் ஊக்கமும் தேவை

நுகர்வும் ஊக்கமும் தேவை

ஆனால் இது பற்றாது. அரசாங்கம் அதிக பணத்தினை நுகர்வோரின் பாக்கெட்டில் வைக்க வேண்டும். அது வரி குறைப்பு வடிவத்தில் இருக்ககூடாது. ஏனெனில் பிரமிடின் அடிப்பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். இங்கு நுகர்வும் ஊக்கமும் தேவைப்படுகின்றது என்று இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் தலைமை பொருளாதார நிபுணர் டிகே பந்த் கூறியுள்ளார்.

முதலீடு குறைந்துள்ளது

முதலீடு குறைந்துள்ளது

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், முதலீட்டு நடவடிக்கைகள் மேலும் பலவீனமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தினை புதுபிக்க சொத்துகளை பணமாக்குதல் மற்றும் முக்கிய துறைமுகங்களை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றால் கிடைக்கும் நிதி, பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பயன்படும் என்றும் கூறியிருந்தது.

உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

முதலீடுகள் மற்றும் மொத்த மூலதன உருவாக்கம் என்பது கடந்த ஜூன் காலாண்டில் 47% சரிவினைக் கண்டுள்ளது. ஆக அரசு உடனடியாக செலவிட வேண்டும். மக்களின் கையில் பணம் புழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு விகிதத்தினை மேலும் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக உள்கட்டமைப்பு துறையில் பெரியளவில் செலவிட வேண்டும். இது நீண்டகாலத்திற்கு பலன் தரக்கூடிய முதலீடாகவும் இருக்கும்.

நிதி எப்படி திரட்டலாம்

நிதி எப்படி திரட்டலாம்

அரசின் சொத்துக்கள் பணமாக்குதல், பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் நிதியானது, மேற்கண்ட செலவினங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உள்கட்டமைப்பு சொத்துகளில் முதலீடு செய்ய அரசாங்கம் கடன் வாங்கினால், அது நியாயமானதும், விவேகமானதும் கூட என்று நான் நினைக்கிறேன் என்று ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.

மானிய செலவு குறைந்து விட்டது

மானிய செலவு குறைந்து விட்டது

அரசு அறிவித்த நிவாரண தொகுப்பில், ரிசர்வ் வங்கியிடமிருந்து பாதியும், உணவு விநியோகத்தின் மூலமாகவும் கிடைத்தது. எவ்வாறாயினும் அரசின் உணவு, உரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றில் அரசாங்கத்தின் மானிய செலவினங்கள் குறைந்துவிட்டன. கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளால் இது மாற்றப்பட்டது.

எவ்வாறு செயல்படுத்தப் போகிறது?

எவ்வாறு செயல்படுத்தப் போகிறது?

ஆக மொத்தத்தில் அனைத்து தரப்பு நிபுணர்களும் கூறுவது ஒன்றே ஒன்று தான். அது அரசு தரப்பில் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்பது தான்... இதனை எப்படி செயல்படுத்தலாம் என்று சில வழிகளை நிபுணர்கள் கூறினாலும், அது தற்போதைக்கு நடக்குமா? என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt needs to put more money for revive economy

Indian Govt needs to put more money for revive economy
Story first published: Thursday, September 3, 2020, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X