இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய உரத்தொழிற்சாலையானது, சுமார் 75 பில்லியன் டாலர் வருவாய் மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் 20 சதவீதம் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதோடு இந்த நிறுவனத்தின் பங்கினை விற்பனை செய்ய, டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசிடம் இருக்கும் 74.71 சதவீத பங்குகளில் இருந்து, 20 சதவீதம் பங்குகளை தான் அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

யூரியா உற்பத்தியில் முக்கிய பங்கு
இந்த உரத்தொழிற்சாலையானது நாட்டின் யூரியா உற்பத்தியில் சுமார் 15 சதவீத பங்கைக் கொண்ட இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த 20 சதவீத பங்கு விற்பனை மூலம் அரசுக்கும், சுமார் 400 கோடி ரூபாய் நிதியினை பெற முடியும். இந்த பங்கினை Offer for Sale என்ற முறையில் விற்க திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 2, 3 PM தான் கடைசி நாளாகும் என அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கும் பங்கு உண்டு
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், NFLல்லின் தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள ஊழியர்களுக்கு பங்குகளை தள்ளுபடி விலையில் கொடுக்க பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனம் 1974ல் கார்ப்பரேட் நிறுவனமான அங்கீகரிப்பட்டது. இந்த நிறுவனத்தின் அரசுக்கு 74.71 சதவீதம் பங்குகள் உள்ளது. மீதமுள்ள 25.29 சதவீத பங்கினை நிதி நிறுவனங்கள் மற்றும் பிறர் வைத்திருக்கிறார்கள்.

NFLல்லின் ஆலைகள்
இந்த தேசிய உரத்தொழிற்சாலையில் ஐந்து எரிவாயும் அடிப்படையிலான அம்மோனியா -யூரியா ஆலைகளைக் கொண்டுள்ளது. பஞ்சாப்பில் நங்கல் மற்றும் பதிந்தா ஆலைகள், ஹரியானவில் பானிபட் ஆலை மற்றும் மத்திய பிரதேசத்தின் விஜய்பூரில் இரண்டு ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளின் திறன் ஆண்டுக்கு 35.68 LMT ஆகும்.

லாப விகிதம் எவ்வளவு?
கடந்த ஏப்ரல் - செப்டம்பர் காலாண்டில் 198 கோடி ரூபாயினை லாபத்தினை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கூட இந்த நிறுவனம் தடைபடாமல் தனது சேவையினை செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 30, 2020 நிலவரப்படி 3,339 ரெகுலர் ஊழியர்களை கொண்டுள்ளது.

இன்றைய பங்கு விலை
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பெரியளவில் மாற்றமின்று சற்று குறைந்து 41.60 ரூபாயாக காணப்படுகிறது. இந்த நிறுவனத்தின் அதிகபட்ச உயரம் இன்று 42.25 ரூபாயாகவும், இதே குறைந்தபட்ச விலையானது 41.40 ரூபாயாகவும் உள்ளது.