பழைய வாகனங்களுக்கான பசுமை வரி.. மக்களை எப்படி பாதிக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய வாகனங்களின் மீது பசுமை வரி விதிப்பதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு என்றாலும், மறுபுறம் இது பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படும்.

பசுமை வரி எவ்வளவு?

பசுமை வரி எவ்வளவு?

அதோடு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இயங்கும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. . அதுமட்டும் அல்ல அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாகன கட்டணங்கள் அதிகரிக்கலாம்

வாகன கட்டணங்கள் அதிகரிக்கலாம்

இதனால் பொதுவாக வர்த்தக வாகனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தக் கூடும். அதோடு வாகனங்களுக்கான செலவுகளும் கூடும், ஏனெனில் மாசுகளை கட்டுப்படுத்த, வர்த்தக வாகனங்களின் செலவுகள் அதிகரிக்கும், இது குறித்து இந்திய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அறக்கட்டளையின் மூத்த ஒருங்கினைப்பாளர் ஒருவர் கூறுமையில், இந்தியாவில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான டிரக்குகள் உள்ளன. ஆக அரசின் இந்த பசுமை வரி திட்டத்தினால், டிரக்கு உரிமையாளர்கள் அதனை வாடகையில் அதிகரிக்க முயல்வர். இதனால் டிரக்குகளின் வாடகை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

பயன்படுத்தப்பட்ட வாகன சந்தையை பாதிக்கும்

பயன்படுத்தப்பட்ட வாகன சந்தையை பாதிக்கும்

குறிப்பாக இந்த பசுமை வரியானது, பயன்படுத்தப்பட்ட லாரி சந்தையை வெகுவாக பாதிக்கும். ஏனெனில் வரிச் சுமையை குறைப்பதற்கு உரிமையாளர்கள் புதிய லாரிகளை வாங்கவே விரும்புவர். இதனால் ஆறு வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களின் தேவை சந்தையில் குறையும். இதனால் பழைய வாகனங்கள் சந்தையில் அதிகரிக்கும். ஒரு புறம் இது புதிய வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் என்றாலும், பழைய வாகன சந்தையை பெரிதும் பாதிக்கும். இதனை பெரிதும் நம்பியிருக்கும் தொழிலாளர்களையும் இது பாதிக்கும்.

மாசூபாடு அதிகம்

மாசூபாடு அதிகம்

MoRTHன் அறிக்கையின் படி, 2000ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சந்தைகளில் உபயோகப்படுத்தும் டிரக்குகள் 1% குறைவாகவே உள்ளது. ஆனால் இது மொத்த வாகனங்கள் மாசுபாட்டில் சுமார் 15% பங்களிக்கிறது. இந்த பழைய வாகனங்கள் தான் நவீன வாகனங்களை விட, 10- 25 மடங்கு அதிகமாக மாசுபடுத்துகின்றன.

ஸ்கிராப்பேஜ் பாலிசி

ஸ்கிராப்பேஜ் பாலிசி

அதோடு சாலை வரிகளை கணக்கிடுவதற்கு, ஒவ்வொரு மாநிலமும் வாகனத்தின் அளவை பொறுத்து வரி மாறுபடும். உதாரணத்திற்கு 11,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு சாலை வரியாக மகாராஷ்டிரா 8800 ரூபாயினை விதிக்கிறது. இந்த பசுமை வரியானது ஸ்கிராப்பேஜ் பாலிசியை மறைமுகமாக ஊக்குவிக்கலாம். ஏனெனில் பழைய வாகனங்களை வாங்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு மத்தியில், அது அடுத்து கிராப்பேஜ்ஜுக்கு தான் வழிவகுக்கும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

கச்சா எண்ணெய் சேமிக்க முடியும்

கச்சா எண்ணெய் சேமிக்க முடியும்

அதோடு இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ் 2 மற்றும் பிஎஸ் 3 வாகனங்கள் அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் நாங்கள் ஆண்டுக்கு 800 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை சேமிக்க முடியும் என்று கூறுகிறது டைம்லர் இந்தியா நிறுவனம். இது வாகன உரிமையாளர்களையும், வாகன உற்பத்தி நிறுவனங்களையும் அதன் தரத்தினை மேம்படுத்த வழிவகுக்கும்.

மக்களைத் தான் பாதிக்கும்

மக்களைத் தான் பாதிக்கும்

வாகன விலை அதிகரிக்கும் பட்சத்தில், வாகனங்களின் வாடகையும் அதிகரிக்கும். இது மக்களைத் தான் நேரடியாக பாதிக்கும். இதனை இன்னும் ஆழ்ந்து பார்த்தால், வாகனங்கள் வாடகை அதிகரிக்கும் பட்சத்தில், அதில் கொண்டு செல்லும் பொருட்களின் டிரான்ஸ்போர்ட் செலவுகள் அதிகரிக்கும். அது மொத்தமாக அந்த பொருட்களின் மீது தான் விழும். இது பொருட்களின் விலையும் அதிகரிக்க வழிவகுக்கும். ஆக இப்படி படிப்படியாக ஒவ்வொன்றும் விலை அதிகரித்து, அது இறுதியில் மக்களையே சென்று பாதிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Green tax may hit truck rentals, it may push heavy vehicle price

Green tax updates.. Green tax may hit truck rentals, it may push heavy vehicle price
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X