ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் மாநில அரசுக்கு பிரச்சனை.. முதல் பாலில் சிக்சர் அடித்த பிடிஆர்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல்வேறு கணக்கீட்டு பிரச்சனை, வரி பங்கீடு பிரச்சனை உள்ளது. இதை முதல் தமிழநாட்டின் நிதியமைச்சர் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் மாநில அரசுக்கு பிரச்சனை.. முதல் பாலில் சிக்சர் அடித்த பிடிஆர்

ஒன்றிய அரசால் (Central Govt) வசூலிக்கப்படும் வரிகளில் (குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் ஒரு மாநிலத்தில் குடியேறிய ஒவ்வொருவரிடமிருந்தும்), மாநிலங்களின் பங்கு கணிசமாகக் குறைந்தமை, மாநில அரசின் வரிவிதிக்கும் மற்றும் வருவாய் ஈட்டும் அதிகாரத்தின் மீதான அணுகுமுறையில் ஒன்றிய அரசின் "நன்னம்பிக்கை இல்லாமை", குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை சமரசம் செய்வதில், கருணையின்மை மற்றும் பரிவின்மை கொண்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை, ஆகியவற்றினால் இந்த சீரழிவு ஏற்பட்டுள்ளது.

0 சதவீத வரி கட்டாயம் வேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்0 சதவீத வரி கட்டாயம் வேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

1. பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளில் மாநிலங்களின் பங்கை 42ரூ ஆக உயர்த்திய ஒன்றிய அரசின் நல்ல எண்ணத்தை ஈடுசெய்யும் வகையில் ஒன்றிய அரசு மேல்வரிகளை அதிகரித்துள்ளது (2014 ஆம் நிதியாண்டில் 1.4 இலட்சம் கோடி ரூபாயிலிருந்து, 80ரூ உயர்ந்து, 2020 ஆம் நிதியாண்டில் 2.55 இலட்சம் கோடி ரூபாய் வரை)

2. படிப்படியாக, ஆனால் இறுதியில் மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அனைத்து வரிகளையும் கலாலிலிருந்து மேல் வரிக்கு மாற்றுவது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். (2014 ஆம் நிதியாண்டின் கலால் மற்றும் மேல்வரியின் விகிதத்தை ஒப்பிடும்போது, பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளிலிருந்து 50,000 கோடி ரூபாய் மேல்வரியாக மாற்றப்பட்டது - அதாவது, பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளில் மாநிலங்களுக்கு உரிய பங்கில் 20,000 கோடி ரூபாய் (50,000 கோடி ரூபாயில் 41ரூ) குறைந்துள்ளது.

3. மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிகளில், மாநிலங்களுக்கான பங்கை பரிந்துரைக்கும்பொழுது, மாநிலம் வசூலிக்கும் வரியின் விகிதத்தை முற்றிலும் கருதாமல், சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அடுத்தடுத்த நிதி ஆணையங்கள், வளர்ந்த மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக அநீதியை இழைத்தது. இதேபோன்று, ஜிஎஸ்டி மன்றத்தின் "ஒரு மாநிலம், ஒரு வாக்கு" (மக்கள் தொகை, அல்லது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, அல்லது தேசிய உற்பத்தி அல்லது நுகர்வு விகிதாச்சாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல்) அடிப்படையானது பெரிய, நன்கு வளர்ந்த மாநிலங்களுக்கு பல வழிகளில் அநீதியைச் செய்கிறது. ஜி.எஸ்.டி மன்றத்தில் வாக்குகளை ஒதுக்குவதில் பல்வேறு நியாயமான வழிகள் உள்ளன. உடனடியாக, ஒரு சமமான மாற்று வழியாக, மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதத்தில் வாக்களிக்கும் உரிமைகளை ஒதுக்கலாம்.

4. கொள்கை மற்றும் கோட்பாட்டிற்கு அப்பால், செயலாக்கத்தில் ஏற்படும் தோல்விகளால், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் உறவுகளில் பிரச்சினைகள் எழுகின்றன. 2020 ஆம் நிதியாண்டுக்கு முன்னர் மாநிலங்களின் இழப்பீட்டு நிதியிலிருந்து 40,000 கோடி ரூபாய் உட்பட ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள பயன்படுத்தப்படாத மேல்வரியை ஒன்றிய அரசு "எடுத்துக்கொண்டது" என இந்திய தணிக்கைத் துறை தலைவரிடமிருந்து பெறப்பட்ட பல தணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

5. இந்தப் பின்னணியில், நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவது, மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஒன்றிய அரசு மேற்கொண்ட பரிவின்மையான நிலை, ஆகியவை இந்த உறவில் ஒரு நியாமான கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

6. இழப்பீட்டுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய "உத்தரவாதம் அளிக்கப்பட்ட" வளர்ச்சி விகிதங்களைக் (சட்டப்படி 14ரூ) குறைப்பது குறித்த ஒன்றிய அரசின் வாதங்களுக்கு மாறாக அதன் சொந்த வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 17ரூ அதிகரிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, அரசியலமைப்பிலும் வரலாற்றிலும் காணாத ஒரு வித்தியாசமான நிலைக்கு நாம் வந்துள்ளோம். இந்திய அரசியலமைப்பில் கற்பனை செய்யப்படாத அளவில், அனைத்து அதிகாரங்களையும் கொண்டு ஒரு ஜிஎஸ்டி அமைப்பும் மன்றமும் செயல்படுகிறது. ஆனால், கட்டமைப்பு வடிவங்கள் மற்றும் தொழில்நுட்பத் தளத்தில் உள்ள குறைபாடுகளால், இந்த அமைப்பு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இயலவில்லை.

இந்த வித்தியாசமான நிலையை உண்மையிலேயே ஆபத்தானதாக மாற்றுவது என்னவென்றால், மன்றம் சில வழிகளில் வெறும் அலங்கார முத்திரையாகவும், ஆராயாமல் அங்கீரிக்கும் அதிகாரமாகவும் செயல்படுகிறது. பலவீனமான ஜிஎஸ்டி செயலகம் மற்றும் அரசுசார் ஜிஎஸ்டி கட்டமைப்பு போன்ற தற்காலிக முகவர் நிறுவங்களுக்கு கொள்கையை உருவாக்குவதற்கான உண்மையான அதிகாரங்களை (அரசியலமைப்பு ரீதியாக) அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST tax split issues facing by State Govt: TamilNadu FM PTR thiagarajan in GST meeting

GST tax split issues facing by State Govt: TamilNadu FM PTR thiagarajan in GST meeting
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X