குஜராத் தொழிலதிபரின் செம அறிவிப்பு.. வீராங்கணைகளுக்கு வீடுகள், கார்கள் பரிசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ ஒலிம்பிக் பலத்த போட்டிகளும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியிலும், வெற்றிகரமான நடந்து கொண்டு வருகின்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் மிக பரப்பரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம் மகளிர் ஹாக்கி.

 

ஏனெனில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறியது.

அடுத்தடுத்து பதவி விலகும் பெரும்தலைகள்.. ஆதி கோத்ரெஜ் செப்டம்பர் 30 அன்று பதவி விலகல்..!

மிக பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

குர்ஜித் கவுர் முதல் கோல்

குர்ஜித் கவுர் முதல் கோல்

காலிறுதி ஆட்டத்தின் சில நிமிடங்களில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார். இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. வரலாற்று வெற்றியில், மகளிர் ஹாக்கி அணியின் ஒலிம்பிக் மைல்கல் வெற்றியில் இதன் மூலம் குர்ஜித் கவுர் தடம்பதித்தார்.

இன்னொரு சான்ஸ் உண்டு

இன்னொரு சான்ஸ் உண்டு

இந்த தோல்வியினால் இந்திய ஹாக்கி அணியின் இறுதி போட்டி கனவு தகர்ந்தது எனலாம். எனினும் இந்திய அணிக்கு பதக்கம் வெல்வதற்காக வாய்ப்பு உள்ளது. இன்று இங்கிலாந்துடன் அடுத்து நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்புண்டு.

வைர வியாபாரியின் செம ஆஃபர்
 

வைர வியாபாரியின் செம ஆஃபர்

சாதாரணமாக தனது ஊழியர்களுக்கு வீடு கார் போன்ற பரிசுகளை வழங்குபவர் குஜராத்தின் வைர வியாபாரி (HK Group ) ஸாவ்ஜி தொலாக்கியா. இப்பொது ஒலிம்பிக்கில் விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, பதக்கத்தினை வென்றால் அவர்களுக்கு வீடு கட்ட தலா 11 லட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வீடு இருந்தால் கார் பரிசு

வீடு இருந்தால் கார் பரிசு

மேலும் ஏற்கனவே வீடு உள்ள வீராங்கனைகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படி பரப்பரப்புகளுக்கும் மத்தியில், இந்த போட்டியானது இன்று மாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் வீரர்களுக்கு 1 கோடி பரிசு

பஞ்சாப் வீரர்களுக்கு 1 கோடி பரிசு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஏற்கனவே இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் வெண்கலம் வென்றுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீரர்களை ஊக்குவிக்கும்

வீரர்களை ஊக்குவிக்கும்

விளையாட்டு வீரர்களுக்கு உதவும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இது இந்திய வீரர்களை ஊக்குவிக்க உதவும். இது அவர்களின் மன உறுதியை வலுப்படுத்தும். இதன் மூலம் அவர்கள் போட்டிகளில் சிறப்பாக செயல்படவும் உதவும் என்று அவரது ட்விட்டரில் கூறியுள்ளார். இது நம் தேசத்திற்கு புகழை தேடித் தரும். ஆக அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஜெய்ஹிந்த் என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசு

ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசு

இதில் நல்ல விஷயம் என்னவெனில் தொலக்கியாவின் இந்த அறிவிப்புக்கு பிறகு, பலரும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இணைந்துள்ளனர். அவரது சகோதரரின் நண்பர் டாக்டர் கமலேஷ் தேவ் வெற்றியாளார்கள் அனைவருக்கும் 1 லட்சம் ரூபாய் பரிசாக கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

வீரர்களை ஊக்குவிக்கும்

வீரர்களை ஊக்குவிக்கும்

உண்மையில் தொலக்கியாவின் இந்த ஊக்கமானது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதோடு, பலருக்கும் இது போன்ற ஊக்கத்தினை அளிக்கும். ஆக இது விளையாட்டு வீரர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமையும். இது உண்மையில் பெருமைபட வேண்டிய விஷயமே. ஜெய்ஹிந்த்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gujarat businessman promises Houses, Cars for Women's Hockey Team

Gujarat business man Savji Dholakia says that if women hockey team wins medal in Olympics, he will award home and cars.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X