5G சேவை: முதல் முறையாக கிராமத்தில் சோதனை.. குஜராத் அஜோல் கிராமம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்க்கும் 5ஜி சேவையின் முதல் கட்ட சோதனைகளைப் பெரு நகரங்களில் டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ, ஏர்டெல் ஆகியவை பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து ஆய்வு செய்துள்ள நிலையில் முதல் முறையாக ஒரு இந்திய கிராமத்தில் 5ஜி தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யப்பட்டு உள்ளது.

 ஹெச்1பி விசா கட்டுப்பாடு நீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! ஹெச்1பி விசா கட்டுப்பாடு நீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

 5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

இந்தியாவில் முதல் முறையாகக் குஜராத் மாநிலத்தின் அஜோல் என்னும் கிராமத்தில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் பிராண்ட்பேன்ட் சேவையைத் தோனை செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சேவைக்கான பேஸ் ஸ்டேஷன் 17 கிலோமீட்டர் தொலைவில் காந்திநகர் மாவட்டத்தில் உணவ என்னும் டவுன் பகுதியில் அமைந்துள்ளது.

 குஜராத் அஜோல் கிராமம்

குஜராத் அஜோல் கிராமம்

இந்தச் சோதனையை டெலிகாம் துறை மற்றும் இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்துள்ளது. இந்தத் சோதனையில் குஜராத் அஜோல் கிராமத்தில் 5ஜி சேவையில் டவுன்லோடு ஸ்பீட் ஆக 105.47 Mbps மற்றும் அப்லோடு ஸ்பீட் ஆக 58.77 Mbps ஆகவும் உள்ளது.

 பிற சேவைகள் சோதனை

பிற சேவைகள் சோதனை

அஜோல் கிராமத்தில் செய்யப்பட்ட 5ஜி சோதனையில் 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டி கன்டென்ட் பிளேபேக், விர்ச்சுவல்-ரியாலிட்டி கனெக்டெட் கிளாஸ்ரூம், 5G இம்மர்சிவ் கேமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு உடன் இயங்கும் 360 டிகிரி கேமராவின் ரியல் டைம் வீடியோ ஸ்ட்ரீம் ஆகியவையும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

 5ஜி சேவை

5ஜி சேவை

இந்தியாவில் கொரோனா காரணமாகவும், டெலிகாம் நிறுவனங்களின் நிதிநிலை காரணமாகவும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை மத்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் ஏலம் விடாமல் இருக்கும் காரணத்தால் 5ஜி சேவையை அறிமுகம் செய்வதில் அதிகப்படியான தாமதம் ஏற்படுகிறது.

 டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

இந்த நிலையில் மத்திய அரசின் பல்வேறு சலுகையால் டெலிகாம் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருந்து தப்பித்து, டெலிகாம் கட்டண உயர்வால் அதிகப்படியான வருமானத்தையும் டெலிகாம் நிறுவனங்கள் பெற துவங்கியுள்ளது.

 டிராய்

டிராய்

இதனால் டிராய் அமைப்பு 5ஜி சேவை அலைக்கற்றைக்கான விலையை நிர்ணயம் செய்யும் பணியைத் துவங்கியுள்ளதால் விரைவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறும். டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வால் ஏர்டெல், ஜியோ நிறுவனத்திடம் உபரி நிதி இருக்கும் காரணத்தால் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gujarat's Ajol village became first rural 5G technology trial place

Gujarat's Ajol village became first rural 5G technology trial place; 5G சேவை: முதல் முறையாகக் கிராமத்தில் சோதனை.. குஜராத் அஜோல் கிராமம்..!
Story first published: Friday, December 24, 2021, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X