பிரதமர் மாநிலத்தில் ஸ்பெஷல்..! ரூ. 1,821 கோடிக்கு புத்தாண்டு பரிசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஹமதாபாத், குஜராத்: சில நாட்களுக்கு முன்பு தான் அப்துல் கலாம் ஐயா வல்லரசு கனவு கண்ட, 2020-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கிறோம்.

டிசம்பர் 31, 2019-ஐ பல விதங்களில் வழி அனுப்பி, 2020-ம் ஆண்டை கொண்டாட்டமாக, பல வகைகளில் வரவேற்று இருப்போம்.

சிலர் புத்தாண்டுக்கு கேக் வெட்டுவோம், இல்லை என்றால் குடும்பத்தோடு எங்காவது வெளியே போவோம். ஆனால் குஜராத் மாநில அரசு தன் ஊழியர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

புத்தாண்டு பரிசு

புத்தாண்டு பரிசு

குஜராத் மாநில அரசு ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் DA - Dearness Allowance என்று சொல்லப்படும் படிக் காசை உயர்த்தி இருக்கிறது. குஜராத் மாநில அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படிக் காசு உயர்வு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் + அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என சுமார் 9 லட்சம் பேருக்குக் கிடைக்குமாம்.

எப்போதில் இருந்து

எப்போதில் இருந்து

அறிவிப்பை இப்போது வெளியிட்டு இருந்தாலும், இந்த 5 சதவிகித டி ஏ உயர்வு, வரும் 01 ஜூலை 2019-ல் இருந்து நடைமுறைக்கு வருமாம். ஆக விரைவில் குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு, அரியர் தொகை என்கிற எப்யரில், பல்காக ஒரு தொகை வரும் என எதிர்பார்க்கலாம்.

எத்தனை பேர்
 

எத்தனை பேர்

தற்போது குஜராத் மாநில அரசில் 5.11 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். 4.5 லட்சம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், குஜராத் மாநில அரசின் பென்ஷனர்கள் இருக்கிறார்களாம். இந்த ஜனவரி மாதத்துக்கான சம்பளம் புதிய டி ஏ கணக்குப் படி வழங்குவார்களாம். விரைவில் கடந்த ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரையான பாக்கி டி ஏ தொகைகளையும் கணக்கிட்டு வழங்குவார்களாம்.

மத்திய அரசுக்கு இணை

மத்திய அரசுக்கு இணை

இந்த 2020-ம் ஆண்டுக்கு அதிகரித்த 5 சதவிகித படிக் காசையும் சேர்த்தால் குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மொத்தமாக 17 சதவிகித டி ஏ வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது மத்திய அரசு வழங்கும் டி ஏ அளவுக்கு இணையானது என்கிறார் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல்.

செலவு

செலவு

குஜராத் மாநில அரசு, அறிவித்து இருக்கும் 5 சதவிகித டி ஏ உயர்வால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,821 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகுமாம். ஆக, குஜராத் மாநில அரசு ஊழியர்கள் + பென்ஷனர்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ. 1,821 கோடி ரூபாயை கொடுத்து இருக்கிறது குஜராத் மாநில அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gujarat state govt employees DA hiked 5 percent

The Gujarat state government employees Dearness Allowance has raised by 5 percent as a new year gift. Now Gujarat state government employees are getting central government equivalent DA.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X