ஐடி ஊழியர்களுக்கு இது ஒரு கெட்ட செய்தியே.. விசா தடை.. அமெரிக்கர்களை தேடும் இந்திய நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் தொடர்ந்து வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்கு குடியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி உள்ளிட்ட பல விசாக்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார்.

Recommended Video

Trump அதிரடி முடிவு... யாருக்கு என்ன பாதிப்பு?
 

மேலும் தடை உத்தரவானது ஜூன் 24 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு மோசமான செய்தியே.

அமெரிக்கர்களை பயன்படுத்தலாம்

அமெரிக்கர்களை பயன்படுத்தலாம்

இந்த ஹெச் 1பி விசாவினால் அதிகம் அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களும் சீனர்களும் தான். இதனால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் விசா மூலம் ஊழியர்களை அமர்த்துவதை விடுத்து, உள்நாட்டில் உள்ள ஊழியர்களை அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விசாக்களுக்கு தடை

விசாக்களுக்கு தடை

அமெரிக்காவின் பாதுகாப்பினை காரணம் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளார். இது திறமையான தொழிலாளர்கள் ஹெச் 1பி விசா மூலம் (H 1B) விசா மூலம் நுழைவதை தடுக்கிறது. மேலும் இது ஒரே நிறுவனத்திற்குள் இடமாற்றம் செய்யப்படும் மேலாளர்கள் மற்றும் சிறப்பு தொழிலாளர்களுக்கான விசாவான எல் விசாக்களையும் தடை செய்துள்ளது.

இனி இதற்கும் தடை தான்
 

இனி இதற்கும் தடை தான்

மேலும் பருவகாலத்தில் பணிபுரியும் ஹெச் 2பி விசாவினையும் டிரம்ப் தலைமையிலான அரசு தடை செய்துள்ளது. அதோடு அதிக திறன் வாய்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் ஹெச் 1பி விசாவினை பணியமர்த்தும் நிறுவனங்கள், இந்தியா சீனா போன்ற நாடுகளையே நம்பியுள்ளது. எனினும் அவ்வப்போது தலைதூக்கும் இந்த பிரச்சனைகளால் ஏற்கனவே ப்ல முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்நாட்டு தொழிலாளர்களையே பணியில் அமர்த்த தொடங்கியுள்ளன.

அமெரிக்கா ஊழியர்களுக்கே முக்கியத்துவம்

அமெரிக்கா ஊழியர்களுக்கே முக்கியத்துவம்

விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட், காக்ணிசன்ட் மற்றும் ஹெச் சி எல் நிறுவனங்கள் கடந்த 2019ம் ஆண்டில் வெறும் 5,900 ஊழியர்களையே பணியில் அமர்த்தியுள்ளன. இது கடந்த 2013ம் ஆண்டில் 23,000 ஊழியர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக அவர்கள் ஏற்கனவே உள்நாட்டில் அதிகமானவர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

இன்ஃபோசிஸ் திட்டம்

இன்ஃபோசிஸ் திட்டம்

மேலும் லைவ் மிண்டில் வெளியான செய்தியொன்றில், நோமுரா ஹோல்டிங்க்ஸ் உடனான உரையாடலில் இன்ஃபோசிஸ் நிர்வாகம், 2021ம் நிதியாண்டில் கொரோனாவினால் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஹெச் 1பி விசாக்களின் தேவையை குறைக்கக் கூடும். ஏனெனில் புதிய திட்டங்கள் தாமதமாகக் கூடும். அதே நேரம் அமெரிக்காவில் வேலையின்மை விகிதமும் அதிகரித்து வருகிறது. ஆக அமெரிக்கா அரசு உள்நாட்டில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு வருகின்றது.

இனியும் உள்ளூர் பணியாளர்களை அதிகரிக்கும்

இனியும் உள்ளூர் பணியாளர்களை அதிகரிக்கும்

2020ம் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரக்காவில் 10,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இது மேலும் உள்ளூர் பணியாளர்களை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆக விசா தடைகளினால் தங்களுக்கு எதுவும் பாதிப்பில்லை என்றும் இந்த ஐடி ஜாம்பவான் தெரிவித்துள்ளது.

இந்திய ஊழியர்களை பாதிக்கும்

இந்திய ஊழியர்களை பாதிக்கும்

ஆக இந்தியர்கள் இல்லாவிட்டால் என்ன? அமெரிக்கர்கள் இருக்கிறார்கள் என்பதே இதன் உள் அர்த்தம் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆக இது நிச்சயம் இந்திய ஐடி ஊழியர்களை பாதிக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. தற்போதைய காலகட்டத்தில் முடிந்தமட்டில் உள்நாட்டில் வேலை தேடுவது சிறந்ததே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H 1B visa ban: Major IT Company Infosys said it will continue to increase localisation

IT major firm’s Wipro, Infosys, TCs cumulatively had less than 5,200 H-1B approvals in fiscal 2019, compared to 23,000 in FY13, as they hired more people locally. So this trend may continue. So those IT companies hiring American employees, it may affect Indian IT employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X