ஹெச்1பி விசா ஊழியர்கள் செய்யும் சேட்டை.. சம்பளம் முக்கியம் பிகிலு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா ஐடி நிறுவனங்களில் இருக்கும் பெரும்பாலான ஐடி ஊழியர்களின் மிகப்பெரிய கனவாக இருப்பது அமெரிக்காவில் சென்று வேலை பார்ப்பது தான்.

அமெரிக்காவில் வேலை என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கிடைக்கும் காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

சொல்லப்போனால் அமெரிக்காவிலும் தற்போது ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை.

ரெசிஷன் வரபோகுது.. ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடி.. ஐடி ஊழியர்களே உஷார்..! ரெசிஷன் வரபோகுது.. ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடி.. ஐடி ஊழியர்களே உஷார்..!

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் திறன் வாய்ந்த டெக் மற்றும் ஐடி சேவை ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தாலும், பல நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை ஈர்க்கும் அளவிற்குப் போதுமான நிதி நிலையைக் கொண்டு இல்லாத காரணத்தாலும் ஷார்ட்கட் வழிகளைப் பயன்படுத்தி வருகிறது.

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

இந்த ஷார்ட்கட் வழி ஹெச்1பி விசா மூலம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குப் பணியாற்ற வந்த ஊழியர்கள் குறிப்பாக இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. குறிப்பாக அதிகச் சம்பளம் வாங்க வேண்டும் என விரும்பும் ஊழியர்கள், அமெரிக்காவிலேயே செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிடும் வெளிநாட்டவர்களுக்கு இது பெரிய ஜாக்பாட் தான்.

CATO அமைப்பு

CATO அமைப்பு

சமீபத்தில் அமெரிக்கத் திங்க் டேங்க் நிறுவனமான CATO வெளியிட்ட ஆய்வு முடிவுகள் ஹெச்1பி விசா ஊழியர்களுக்கான டிமாண்ட் அளவை காட்டுகிறது. பொதுவாக இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனத்தின் வாயிலாகத் தான் அமெரிக்காவிற்கு ஹெச்1பி விசா மூலம் பணியாற்றச் செல்லும் ஐடி ஊழியர்கள், விசா காலம் முடியும் வரையில் அதே நிறுவனத்தில் பணியாற்றுவார்கள்.

ஹெச்1பி விசா ஊழியர்

ஹெச்1பி விசா ஊழியர்

ஆனால் தற்போது காலமும் சரி, வர்த்தகச் சூழ்நிலையும் சரி தலைகீழாக மாறியுள்ளது. வரலாறு காணாத வகையில் ஹெச்1பி விசா ஊழியர், விசா பெற்ற நிறுவனத்தில் மற்ற நிறுவனங்களுக்கு மாறுவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாக அமெரிக்கத் திங்க் டேங்க் அமைப்பு CATO தெரிவித்துள்ளது.

20 லட்ச பணி மாற்றங்கள்

20 லட்ச பணி மாற்றங்கள்

2005 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் ஹெச்1பி விசா ஊழியர்கள் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான முறை ஒரு வேலையில் ஒரு மற்றொரு வேலைக்கு மாறியுள்ளனர் என CATO நிறுவனத்தின் குடியேற்றப் பிரிவின் தலைவர் டேவிட் ஜே.பெயர் தனது பிளாக்-ல் தெரிவித்துள்ளார்.

43 சதவீதம் பேர் பணி மாற்றங்கள்

43 சதவீதம் பேர் பணி மாற்றங்கள்

அமெரிக்காவில் இருக்கும் மொத்த ஹெச்1பி விசா ஊழியர்களில் சுமார் 43 சதவீதம் பேர் தங்களுக்கு விசா வழங்கிய நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா ஊழியர்களைச் சேர்க்க மிகவும் ஆர்வமாக இருப்பது உறுதியாகியுள்ளது என CATO நிறுவனத்தின் டேவிட் தெரிவித்துள்ளார்.

ஹெச்1பி விசா எண்ணிக்கை

ஹெச்1பி விசா எண்ணிக்கை

ஒவ்வொரு ஆண்டும் ஹெச்1பி விசா தேர்வுகள் விரைவாக மூடப்படும் நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் பிற நிறுவனத்தில் இருந்து ஹெச்1பி விசா ஊழியர்களைப் பணியில் அமர்த்த மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலையில், டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஒவ்வொரு வருடமும் அளிக்கப்படும் ஹெச்1பி விசா எண்ணிக்கையை அதிகரிக்க நேரம் வந்துவிட்டது.

60 நாட்கள் அவகாசம்

60 நாட்கள் அவகாசம்

அமெரிக்க அரசு 2017ல் ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு முக்கியமான சலுகையை அளித்தது, அதாவது ஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது வேலை அல்லது கான்டிராக்ட் இழந்தால் அடுத்த 60 நாட்கள் அமெரிக்காவில் தங்கி வேறு வேலையைத் தேடிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

கிரீன் கார்டு

கிரீன் கார்டு

இது பெரிய வாய்ப்பை ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது மட்டும் அல்லாமல் இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதேபோல் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்தவருக்கு ஒரு வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்ல இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H-1B employees quits initial H-1B employers like never before; 2 million Job switches from 2005 to 2021

H-1B employees quit initial H-1B employers like never before; 2 million Job switches from 2005 to 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X