பெங்களூர் நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.3 கோடி திருட்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பேமெண்ட் சேவை நிறுவனமான ரேசர்பே-வில் ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர்.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைத்து தளத்திலும் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் மக்களைப் பயமுறுத்துகிறது.

ரேசர்பே நிறுவனத்தில் என்ன நடந்தது..? வாங்க பார்ப்போம்..

Razorpay நிறுவனம்

Razorpay நிறுவனம்

ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை, அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனமான Razorpay காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

 சைபர் கிரைம் பிரிவு

சைபர் கிரைம் பிரிவு

மே 16 அன்று தென்கிழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு அளித்த புகாரில், ரேஸர்பேயின் சட்ட சர்ச்சைகள் மற்றும் சட்ட அமலாக்கத் பிரிவு தலைவர் அபிஷேக் அபினவ் ஆனந்த், 831 பரிவர்த்தனைகளுக்கு எதிராக ரூ.7.38 கோடி அளவிலான தொகைக்கு நிறுவனத்தால் கணக்கு காட்டு முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Fiserv விளக்கம்

Fiserv விளக்கம்

அதன் 'அங்கீகாரம் மற்றும் அங்கீகார கூட்டாளர்' நிறுவனமான Fiserv-ஐ தொடர்பு கொண்டபோது, ​​இந்தப் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், அவை அங்கீகரிக்கப்படவில்லை என்றும் Razorpay க்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பணம் மாயமாகியுள்ளது என புகார் அளித்துள்ளது ரேசர்பே.

16 வணிகர்கள்

16 வணிகர்கள்

Fiserv-வின் விளக்கம் மற்றும் பதில்களை தொடர்ந்து, Razorpay ஒரு நிறுவனத்திற்குள்ளேயே உள் விசாரணையை நடத்தியது. இதில் 16 தனிப்பட்ட வணிகர்களுக்கு எதிராக இந்த ஆண்டு மார்ச் 6 முதல் மே 13 வரையிலான காலகட்டத்தில் "ரூ. 7,38,36,192" வரையிலான தொகையை 831 பரிவர்த்தனைகளில் மோசடி நடந்துள்ளது என கண்டறிந்துள்ளது.

831 பரிவர்த்தனை

831 பரிவர்த்தனை

831 பரிவர்த்தனைகளும் தோல்வி அடைந்த பண பரிமாற்றங்கள், ஆனால் இதை ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து பண பரிமாற்றத்தை ஒப்புதல் அளித்து பணத்தை திருடியுள்ளனர் என அபிஷேக் அபினவ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hackers steal Rs 7.38 crore from Razorpay

Hackers steal Rs 7.38 crore from Razorpay பெங்களூர் நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.3 கோடி திருட்டு..!
Story first published: Friday, May 20, 2022, 22:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X