உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமாக விளங்கும் டிவிட்டர் நிறுவனத்தைச் சுமார் 46.5 பில்லியன் டாலர் செலவில் எலான் மஸ்க் கைப்பற்றிய நாளில் இருந்து நிறுவனத்திலும் சரி, ஊழியர்கள் மத்தியிலும் சரி பல மாற்றங்கள் நடந்து வருகிறது.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய முதல் நாளே சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே, பொது ஆலோசகர் சீன் எட்ஜெட், தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சோனெட் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தற்போது முக்கியப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை மக்கள் மற்றும் பன்முகத்தன்மை அதிகாரி தலானா பிராண்ட் செவ்வாய்க்கிழமை தனது LinkedIn கணக்கில் டிவிட்டர் நிறுவன பணியில் இருந்து ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.

முக்கிய அதிகாரிகள்
டிவிட்டர் நிறுவனர் கோர் டெக்னாலஜிஸ் பிரிவின் பொது மேலாளர் நிக் கால்டுவெல் தனது ட்விட்டர் கணக்கு வாயிலாகவே அவர் வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். திங்கள்கிழமை இரவு நிக் கால்டுவெல் அவரது டிவிட்டர் பயோவில் முன்னாள் டிவிட்டர் நிர்வாகி என்று மாற்றியிருந்தார்.

தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி
இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி லெஸ்லி பெர்லாண்ட், டிவிட்டரின் ப்ராடெக்ட் தலைவர் ஜே சல்லிவன் மற்றும் உலகளாவிய விற்பனை பிரிவின் துணைத் தலைவர் ஜீன்-பிலிப் மஹூ ஆகியோரும் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் ஊழியர்கள் நிலை
டிவிட்டர் ஊழியர்களுக்கு டிவிட்டர் நிர்வாகத்தின் திட்டம் என்ன..? எதை நோக்கு செல்ல போகிறோம்..? நிறுவனத்தின் இலக்கு என்ன..? என்பது போன்ற எவ்விதமான தகவல்களையும் எலான் மஸ்க் நிர்வாகம் அளிக்கவில்லை என டிவிட்டர் ஊழியர்கள் புலம்புகின்றனர். இதேபோல் புதன்கிழமை அனைத்து ஊழியர்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

விளம்பரதாரர்கள்
எலான் மஸ்க் இந்த வாரம் பல்வேறு விளம்பரதாரர்களிடம் முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், இதில் பலர் தங்களது விளம்பரங்கள் இடம்பெறும் இடத்தில் ஆபத்து அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் கண்டென்ட் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

n-word பயன்பாடு
இதேபோல் எலான் மஸ்க் டிவிட்டரைக் கைப்பற்றுவதாக அறிவித்த பின்பு டிவிட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சுக்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. உதாரணமாக டிவிட்டர் தளத்தில் n-word பயன்பாடு 500 சதவீதம் அதிகரித்துள்ளது என Network Contagion Research Institute தெரிவித்துள்ளது.

கடிதம்
NAACP மற்றும் Free Press உட்பட 40 நிறுவனங்கள் செவ்வாயன்று டிவிட்டரின் டாப் சிறந்த 20 விளம்பரதாரர்களுக்கு எலான் மஸ்க் கண்டென்ட் மாடரேஷன் செய்யாவிட்டால் விளம்பரங்களை வர்த்தகத்தைத் திரும்பப் பெறுங்கள் எனக் கடிதம் எழுதியுள்ளனர்.

IPG அறிவிப்பு
இதேபோல் விளம்பர ஹோல்டிங் நிறுவனமான IPG தனது வாடிக்கையாளர்களை அடுத்த ஒரு வாரத்திற்கு டிவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்த அறிவுறுத்தியுள்ளது. டிவிட்டர் தனது தளத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்த நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு இயக்க அறிவுறுத்தியுள்ளது.

எலான் மஸ்க்
கோகோ கோலா போன்ற முன்னணி பிராண்டுகள் IPG நிறுவனத்துடன் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தான் திங்கட்கிழமை எலான் மஸ்க் "பிராண்டு பாதுகாப்பிற்கான டிவிட்டரின் அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது," விளம்பரதாரர்களுக்கு உறுதியளிக்க ட்வீட் செய்தார்.